Categories
தேசிய செய்திகள்

6 ஆண்டுகளில் 90,00,000 பேர்…. வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை.!!

ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் பேர் தங்களின் வேலையை இழந்ததாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் வரலாறு காணாத அளவில் வேலைவாய்ப்பின்மை நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த வேலைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-18 காலகட்டத்தில் விவசாயம் அல்லாத துறைகளில் 68 விழுக்காடு வேலைகளை சிறு, குறு, நடுத்தர தொழில்தான் அளித்ததாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… 3 தீயணைப்பு வீரர்கள் காயம்..!!

டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு முதல் தற்போதுவரை தீ எரிந்து வரும் தீயை அணைக்க முற்பட்ட 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தலைநகர் டெல்லியை அடுத்து பீராகரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. வேகமாகப் பரவிய தீ அருகிலுள்ள கட்டடங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வேகமாகப் பரவிவரும் இத்தீயைக் கட்டுப்படுத்த 28 தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றனர். மேலும், தீயைக் கட்டுப்படுத்த முயன்றதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது கடல்வளம்” – வெங்கையா நாயுடு.!!

கடல்வளம் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், “கடல் வளம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி- மீட்புப்பணி தீவிரம் …!!

ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று விளையாடிக்கொண்டு இருந்த  5 வயது சிறுமி 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர். ஆழ்துளை கிணற்றை சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு …!!

 காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ தொழில்நுட்ப நிறுவனம், ’பெகாசஸ்’ என்ற மால்வேரை (Pegasus malware) அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பி அவர்களை உளவு பார்த்ததாகக் கூறி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்திவரும் நிலையில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கழுதை பாலில் அழகு சாதனப் பொருட்கள்: அசத்தும் கேரள பொறியாளர்…!!

கழுதை பாலின் மூலம் அழகு சாதனப் பொருட்கள் தயாரித்து, விற்பனையில் அசத்தி வரும் பொறியாளர் எபி பேபி குறித்து அறிந்துகொள்வோம். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் எபி பேபி. பொறியியல் பட்டதாரியான எபி, முதலில் பெங்களூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். தன்னுடைய எண்ணோட்டங்கள் பல உயரிய சிந்தனைகளை நோக்கி நகர்ந்ததால், வெகு காலம் அங்கு எபியால் பணியாற்ற முடியவில்லை. சொந்த ஊரிலேயே ஏதாவது தொழில் செய்ய வேண்டும், அந்த தொழில் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கல்லூரிகளுக்கு ஆப்பு …. அங்கீகாரம் ரத்து…. AICTE எச்சரிக்கை …!!

பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்குக் காட்டினால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைச் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகக் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும். வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

”வேறு பெண்ணுடன் நெருக்கம்” உயிரை மாய்த்த மனைவி ….!!

கணவனின் செயல்பாட்டினால் மன அழுத்தத்திற்கு உள்ளான பெண் பொறியாளர் (என்ஜினீயர்) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அமர்பேட் பகுதியில் கணவருடன் வசித்து வந்தவர் பவானி. இவருக்கும் சுகித் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இவ்வாறான நிலையில் சுகித்துக்கு வேறோரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் அதீத நெருக்கத்தை ஏற்படுத்தியது. இது பவானியின் காதுக்கும் எட்டிய நிலையில்., […]

Categories
தேசிய செய்திகள்

சமூக அமைதிக்குத் துணை நிற்கும் இஸ்லாமிய அமைப்புகள்….!!

 சமூகத்தில் அமைதி நிலவிட அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்து வைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

5 ட்ரில்லியன் டாலர் இலக்கு…… தொழில் செய்ய இந்தியாவுக்கு வாங்க….. அந்நிய நாட்டாருக்கு மோடி அழைப்பு….!!

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும்  உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”முதலீடு செய்ய உகந்த நேரம் இது” அழைப்பு விடுத்த மோடி …!!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம் என பிரதமர் மோடி தாய்லாந்து தொழில் அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற 16 வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.அப்போது பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒரே மேடையில் வீற்றிருந்த மோடி அவர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கினார். இதையடுத்து இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வரவேற்பதாகவும், இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொள்ளும் கொள்கைகள் முக்கியமானதாக உள்ளது என்று மோடி தெரிவித்தார். கடல் வழிப் […]

Categories
தேசிய செய்திகள்

“ககன்யான் திட்டம்” 19-ல விட்டத 21இல் பிடிப்போம்….. இந்தியாவுடன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரஷ்யா….!!

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு காற்று, நீர், உணவு உள்ளிட்டவை விநியோகிக்கும் பணிகளை ரஷ்யா ஏற்க உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான  ராகாஸ்மோஸ் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக இஸ்ரோவும் […]

Categories
தேசிய செய்திகள்

5_ஆம் தேதிக்குள் வாங்க ”குடும்ப நலன் கருதி வாய்ப்பு” சந்திரசேகர ராவ் கெடு …!!

தெலுங்கானாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘தெலங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பை வழங்குகிறோம். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வருகிற 5ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். உங்களின் குடும்ப […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் பாஜக…..!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையே மாற்றுக் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் பாஜக வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே அமித்ஷா தான்…. ”ஆட்சியை கவிழ்த்தோம்”…. எடியூரப்பா_வின் சர்சை ஆடியோ

கர்நாடகா அரசியலில் குமாரசாமி அரசு கவிழ்ப்பதற்கு நடைபெற்ற அனைத்தும் அமித்ஷா_வுக்கு தெரிந்தே நடந்ததாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா  கூறிய ஆடியோ ஓன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக அந்த கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

30 மாதம்…. 34 டயர் …. சர்சையில் சிக்கிய கேரள கம்யூனிஸ்ட் அமைச்சர் …!!

காருக்கு காருக்கு 30 மாதங்களில் 34 டயர்கள் அரசு பணத்தில் மாற்றியது குறித்து எழுந்த விமர்சனத்திற்கு கேரள அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். கேரள மின் துறை அமைச்சரான மணி தனது இன்னோவா காருக்கு 30 மாதங்களில் 34 டயர்கள் மாற்றி உள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்தது. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டயருக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஊடகங்கள் மீது கடுமையான உத்தரவு… திரும்பப்பெறும் வரை ஓயமாட்டோம்… சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை..!!

ஊடகங்கள் மீது மாநில அரசு செயல்படுத்திவரும் கடுமையான உத்தரவுகளை திரும்பப்பெறும் வரை ஓயப்போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வண்ணமே ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அரசுத் துறைகளின் செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கிய உத்தரவு தொடர்பாக ஒய்.எஸ். […]

Categories
தேசிய செய்திகள்

50 வயது அம்மா…. ட்விட்டரில் மாப்பிளை தேடும் மகள்… வைரல் பதிவு..!!

‘எனது 50 வயதான அம்மாவுக்கு ஹேண்ட்சமான மாப்பிள்ளை வேணும்’ என பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பலர் சொல்வார்கள். பல இடங்களில் திருமணம் நடத்துவதில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவார்கள். பலர் முன்னிலையில், பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்தத் திருமணங்களை பெரும்பாலும் பெற்றோர்களே நடத்திவைக்கின்றனர். ஆனால் இங்கு இளம்பெண் ஒருவர் தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கே மணமகன் வேண்டும் என ட்விட்டரில் தைரியமாக பதிவிட்டுள்ளார். […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அதிர்ச்சி…. 13,00,000 பேர் ….. ”கிரெடிட், டெபிட் கார்டு” தகவல் விற்பனை ….!!

இந்தியாவைச் சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அனைவராலும் இந்த டார்க வெப்-க்கு செல்ல முடியாது. சர்வதேச அளவில் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த டார்க வெப்தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, டார்க் வெப்பிலுள்ள ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் (Joker’s Stash) என்ற தளத்தில் 13 லட்சம் இந்திய பயனாளர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

”என்னையும் வேவு பார்த்தார்கள்” – திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட மம்தா….!!

இந்தியாவைச் சேர்ந்த பலர் வாட்ஸ்அப் மூலம் வேவு பார்க்கப்பட்ட நிலையில், தன்னையும் மத்திய அரசு வேவு பார்த்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு…..!!

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிலிப்பிட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது விவசாய கழிவுப் பொருட்களை தெருக்களில் வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சுமார் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் பில்சந்தா, நேரியா, அமரியா, புரன்பூர், சேரமாவூ, மதோடண்டா, ஜகனபாத், பிசால்பூர் மற்றும் கஜ்ராவூலா கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு எச்சரிக்கை” தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்……. உளவுத்துறை எச்சரிக்கை….!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நிகழ்த்த ஜெய்ஷ்-இ-முகமது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.  ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் திரும்பும் அமைதியை  சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தளபதி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்தியாவில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலை சந்திக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் போரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 தீவிரவாத அமைப்புகளின் […]

Categories
தேசிய செய்திகள்

3 முக்கிய ஒப்பந்தம்……. பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை…… ராஜ்நாத்சிங் அதிரடி….!!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உஸ்பெகிஸ்தான்  தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ மருத்துவமனை கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஒப்பந்தத்தில் உஸ்பெகிஸ்தான் உடன்  கையெழுத்திட்டார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், அதனை மேம்படுத்தவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற சாகி அமைப்பு மாநாட்டிலும் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியிடவுள்ள நரேந்திர மோடி…..!!

தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றவுள்ள நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். அங்கு நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியின் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிடவுள்ளார். திருக்குறளை தாய்லாந்து மக்களின் பிரதான மொழியான ‘தாய்’ மொழியில் வெளியிட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை ….!!

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்ண்ட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இருநாள்கள் நடக்கும் மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்தியா சார்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவை வலுப்படுத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டிலா? – பாஜகவை கலாய்க்கும் சிவசேனா

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 145 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தானியர்கள்….!!

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு முக்கிய நகரங்களில் பேரணி நடத்தினர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக்கொண்டது. இந்நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் கனமழை… 3 கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன..!!

அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் டிமா ஹசோ மாவட்டத்தில் மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.  அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து டிமா ஹசோ மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அதேபோல் கபிலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியா வருகிறார் இளவரசர் சார்லஸ்.!!

இளவரசர் சார்லஸ் இரண்டே ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.  பிரிட்டிஷ் அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும், இந்த பயணம் நிலையான சந்தைகள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக நிதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது எனவும் அவரது அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது. 70 வயதான இளவரசர் சார்லஸ் நவம்பர் 13ஆம் தேதி புதன்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இது சார்லஸின் 10ஆவது […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் சிக்கல்: ஆளுநரை சந்தித்தார் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்துவரும் பரபரப்பான சூழலில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்துப் பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியுள்ளது. 104 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பாஜக-வுக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, வெறும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். மேலும் பல்வேறு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான எரிசக்தி, பாதுகாப்பு, கொள்முதல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.இப்பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். மோடியின் 2016ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தீபாவளியன்று 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து.!!

டெல்லியில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்ததால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் எந்தவொரு சம்பவத்திலும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளியன்றும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக நகரம் முழுவதும் இருந்து தங்களுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்றும், அதில் அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் விமானத்திற்கு அனுமதி தர மறுத்த பாகிஸ்தான்….!!

சவுதி அரபியாவிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி …!!

ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களைச் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய ராணுவம் காஷ்மீருக்குச் […]

Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பி நீ வா…! அப்ப தான் உண்மையான தீபாவளி…. எழுந்து வா தங்கமே – ஹர்பஜன் ட்வீட்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று ஹர்பஜன் சிங்க் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஊடகத்தின் வெளிச்சம் படாத சுர்ஜித்துகள்…!!

பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல சுர்ஜித்துகள், தன் இன்னுயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் கதறல்கள் வெளியே கேட்காவிட்டாலும், நீதிமன்ற வாயில்களில் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் அனைவரின் கவனமும் திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. அதற்கான காரணம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் அழுகுரல். அந்த குழுந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஐஐடி குழுவினர் என அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுபோன்று பல ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

தொழிலாளர்கள் அதிர்ச்சி …. மீண்டும் வேலையில்லா நாளை அறிவித்து டிவிஎஸ்…!!

ஓசூர், சென்னையில் இயங்கிவரும் சுந்தரம் கிளைட்டன் நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல முதலீடுகள் குறைப்பு, தற்காலிக ஊழியர் பணி நீக்கம், உற்பத்தி நாள்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.டிவிஎஸ் (TVS) குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கிவருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சாலையின் நடுவே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை….!!

ரவுடியை மூன்று பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுவே ஓட ஓட துரத்தி சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரவுடி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலை நடந்தது எப்படி? ரவுடி மஞ்சுநாத் அவரது காதலியுடன் மகாதேவாபுரம் அருகே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மஞ்சுநாத்தை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அலறியடித்து […]

Categories
தேசிய செய்திகள்

மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட புத்தர் சிலை…!!

திரிச்சூரில் மூங்கில் மூலம் ஒருவர் புத்தர் சிலை வடிவமைத்துள்ளதை அடுத்து மூங்கிலிலிருந்து வீணாகும் பொருள்களை வைத்தும் அவர் சிலைகள் வடிவமைத்து அசத்திவருகிறார். கேரள மாநிலம் திரிச்சூர் கலாசார, பண்பாடு மிகுந்த கைவினைப் பொருள்கள் அதிகம் தயாரிக்கப்படும் இடம். பல்வேறு கைவினைப் பொருள்கள், சிலைகள் உள்ளிட்டவை இப்பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதனிடையே, திரிச்சூரில் உள்ள வடக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மோகனன் தச்சராக உள்ளார். இவர் சிலைகள் செய்து அசத்திவருகிறார். சிலைகள் அனைத்தும் மூங்கில் மூலமும் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை…. எல்லையில் இனிப்புகளை பரிமாறிய இரு நாட்டு ராணுவத்தினர்.!!

இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவப் படையினரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, திரிப்புரா மாநிலம் அகர்தலா பகுதியில் எல்லை ராணுவப் படையினர் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக இந்திய-வங்கதேச எல்லைப் படை ராணுவத்தினர் அகவுரா ஒருங்கிணைந்த சோதனைப் பகுதியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இரு நாடும் நல்லுறவை மேம்படுத்த ஆண்டு தோறும் தேசிய நிகழ்ச்சியில் இதுபோல இனிப்புகளை பரிமாறிக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆதித்ய தாக்கரே முதலமைச்சராக வாய்ப்பு..?

மகாராஷ்டிரா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வொர்லி தொகுதியில் வெற்றிபெற்ற ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவிடம் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்டு, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற விருக்கிறது. இருந்தபோதிலும், யாருக்கும் தனிப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டிய மண்ணில் அமைச்சராகும் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன்?

மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மும்பையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சியோன் கோலிவாடாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் இரண்டாவது முறையாக வெற்றி வாகைச் சூடியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்து சமாஜ் கட்சியின் தலைவரானார் கிரண் திவாரி.!!

இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி கிரண் திவாரி அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அக்டோபர் 18-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. அதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சிறப்பான ஏற்பாடு… தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு.!!

இந்தியா – சீனா இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்ட வரவேற்பு […]

Categories
தேசிய செய்திகள்

“JAN-1 முதல்” 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா…??? ரிசர்வ் வாங்கி சார்பில் விளக்கம்…!!

வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவருகின்றன. இதற்கு சரியான விளக்கத்தை தற்பொழுது வங்கிகள் அளித்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதன் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது எனவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி அமைக்கும் சாவி….”10 மாதத்தில் 10 இடம்” கிங் மேக்கர் துஷன் சவுதாலா…!!

ஹரியானாவில் ஓராண்டு கூட நிறைவடையாத ஜனநாயக் ஜனதா கட்சி கிங் மேக்கராக உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. 90 சட்டப்பேரவை கொண்ட ஹரியானாவில் தனிப்பெரும்பான்மை பெற 46 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும். ஆனால் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. சாவி சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதற்கான சாவியையும்  கைப்பற்றியிருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக் ஜனதா கட்சியின் இளம் தலைவரான துஷன் சவுதாலா ஆட்சியை தீர்மானிப்பவராக இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா சட்டமன்ற இடைத்தேர்தல் : காங்கிரஸ்_ஸா ? கம்யூனிஸ்ட்_டா ?

கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கேரளா மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்ட்து. கேரளா சட்டமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி ….!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரா  மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 21_ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் தேர்தலை சந்தித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக , […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் கூவத்தூர் பார்முலா ? கைகொடுக்குமா ஆட்சி அமைக்க ….!!

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு இழுபறி ஏற்பட்டு வருவதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒன்றாக டெல்லி_க்கு அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 21_ஆம் தேதி நடைப்பெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசுமுறை பயணம் நிறைவு…. தாயகம் திரும்பினார் குடியரசு தலைவர்..!!

அரசுமுறை பயணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தாயகம் திரும்பினார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழைப்பின் பேரில் கடந்த 17ஆம் தேதி அந்நாட்டிற்கு அரசுமுறை பயணமாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தார். அங்கு தலைநகர் மணிலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் […]

Categories

Tech |