Categories
தேசிய செய்திகள்

“அசத்திய BSNL” மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம்….. மானிய விலையில் வழங்க நடவடிக்கை….!!

ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விசை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தூரம் தெரியாமல் எல்லை தாண்டி செல்வது, புயலில் சிக்கி காணாமல் போவது, அண்டை நாட்டு கடற்படையிடம் சிக்குவது என பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் தரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றதும் செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது பயன்படுத்தி வரும் சேட்டிலைட் போனில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 10 நாட்கள் தான்…. ”சிறை ரெடியா இருக்கு”……. தயார் நிலையில் உ.பி. அரசு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.   இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

”யாரை பார்த்து என்ன சொல்லுறது” கொதித்தெழுந்த கேரள கம்யூனிஸ்ட் ….!!

கேரள அரசின் தலைமைச் செயலாளர் மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளுக்குக் கூட தகுதியற்றவர்கள் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கனம் ராஜேந்திரன், அவரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு என்றும், ஆளும் அரசு அறியாமல் இந்த கருத்தை […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி குறித்து கருத்துகள் வெளியிட வேண்டாம்” மோடி அறிவுரை …!!

அயோத்தியா வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார். அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.அமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கு குறித்து 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க அரசு, அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: ”கருணை காட்டுங்க” வினய் சர்மா மனு …!!

 நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அதில் ஒருவர் 16 வயதிற்குள்பட்ட சிறுவன் என்பது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

Q2 காலாண்டு முடிவில் சரிவை சந்தித்த கோத்ரேஜ்..!!

வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான கோத்ரேஜ் இந்த ஆண்டு காலாண்டு முடிவில் 28 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோத்ரேஜ் நிறுவனம் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீட்டு பூச்சிக்கொல்லிகள், சோப்புகள் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படும் இந்நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் இந்த வருடம் Q2 காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 28 விழுக்காடு சரிவை சந்தித்து 413.88 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காலாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய காற்றில் விஷவாயு கலந்த பாகிஸ்தான் – பகீர் குற்றச்சாட்டு ..!!

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த எண்ணத்தில் ஆசைப்படும் எண்ணத்தில் பாகிஸ்தானும் சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் காற்று தரமதிப்பீடு அளவு ஆபாய உள்ளது. நகரம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க வாகன கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் காற்று மாசுபடுத்தும் தீய எண்ணத்தில் பாகிஸ்தானும் , சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை பெண்களின் உரிமை” தீர்ப்பை அமுல்படுத்தவது அரசின் கடமை – பினராயி விஜயன்

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது அரசின் கடமை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து […]

Categories
தேசிய செய்திகள்

600 தமிழர்கள்….. 13 நாட்கள்…. உணவு , தண்ணீர் இன்றி வாடும் அவலம்…. உதவுமா அரசு?

உணவு, தண்ணீர், டீசல் இன்றி 13 நாட்களாகத் தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குஜராத்தில் சிக்கியுள்ள 600 தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று மகா புயலாக மாறியது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்காமல் இருக்க கடற்கரை பகுதியில் ஒதுங்க கடற்படை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் கரை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

10,000 பேருக்கு….. வேலை கிடையாது…. வீட்டுக்கு போங்க…. இன்போசிஸ் நோட்டீஸ் ..!!

இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு நிலை ஊழியர் என 10,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவை மையமாக தலைமையிடமாக கொண்டு செயல்படக் கூடிய மிகப்பெரிய நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 12,000 பேருக்கு வேலை இழப்பு செய்தது. அதில் 5 ஆயிரம் பேரை மீண்டும் வேலையில் சேர்த்த நிலையில் 7,000 பேருக்கு வேலை கிடையாது வீட்டுக்கு போங்க என்று சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

”பசு உடலில் தங்கம் இருக்கு” அதிர வைத்த பாஜக MP கருத்து …!!

இந்திய பசு மாடுகளில் தங்கம் உற்பத்தி ஆகின்றது என்று பாஜக MP திலீப் கோஷ் பேசியதை சமூகவலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர். மேற்கு வங்கத்தின் புர்த்வான் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக MP திலீப் கோஷ் , இந்திய நாட்டு மாடுகளின் திமிலில் தங்கமணி உள்ளது என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த திமில் மீது சூரிய ஒளி படும் போது அது பசுவின் உடலில் தங்கத்தை உற்பத்தி செய்கிறது என்றும் பலரையும் உறைய வைத்தார்.இதனாலேயே இந்திய நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு

திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர்களை காப்பாற்ற முயற்சி: பார் கவுன்சில் நோட்டீசு

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட காவல் உயர் அலுவலர்களை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாக பார் கவுன்சில் நோட்டீசு அளித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு கைதிகளை ஏற்றிக் கொண்டு காவலர் வாகனம் ஒன்று கடந்த 2ஆம் தேதி வந்தது.இந்த வாகனம் மீது, வழக்குரைஞர் வாகனம் ஒன்று மோதியது. இதையடுத்து காவலர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறினைத் தொடர்ந்து அந்த வழக்குரைஞரை காவலர்கள் கைது […]

Categories
தேசிய செய்திகள்

“நுரையீரல் நோய்” லட்சத்தில் 4000 பேர் பாதிப்பு…… 2300 பேர் உயிரிழப்பு…… ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் நுரையீரல் நோயினால் ஆண்டுக்கு 2300 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிக கொடிய நோய்களாக கருதப்படும் காசநோய், எய்ட்ஸ் மலேரியா உள்ளிட்ட நோய்களில் இறப்பவர்களை காட்டிலும், நுரையீரல் சார்ந்த நோய்கள் இறப்பவர்கள் விகிதம் அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நுரையீரல் அடைப்பு, நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த நோய்களினால் ஆண்டுக்கு 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

தங்கம் வென்றார் மானு பாக்கர்….. முதல் நாளிலே 2 தங்கம் உட்பட 5 பதக்கம்……. இந்திய அணி சாதனை…!!

சீன நாட்டில் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சூடு போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானு பாக்கர் என்பவர் தங்க பதக்கம் வென்றுள்ளார். சீன நாடான புசௌவில் ஆசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட விபின்,மனிஷா கபூர் ஆகியோர் அடங்கிய ஜூனியர் டிராப் கலப்பு மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. குறிப்பாக மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 244.3 புள்ளிகள் பெற்று இந்தியாவைச் சேர்ந்த மானு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

18 மணி நேரத்திற்குள்…… கரையை கடக்கும் மஹா புயல்…… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு….!!

அதிதீவிர புயலாக மாறியுள்ள மஹா புயல் நாளை குஜாத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவான மகா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து போர் பந்தலுக்கு தென்மேற்கு பகுதியில் 650 கிலோ மீட்டர் தொலைவில்நிலை கொண்டுள்ளது. இந்த புயல் குஜராத்தில் போர்பந்தர் டையூர் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான மித வேகத்தில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது “புல்புல் புயல்”- இந்திய வானிலை ஆய்வு மையம் …!!

“புல்புல் புயல்” உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என்று இந்திய இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றும் என்று கூறி உள்ளது இது புயலாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : மோடியுடன் GK வாசன் தீடீர் சந்திப்பு ….!!

முன்னாள் மத்திய அமைச்சர் GK.வாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றார். முன்னாள் மத்திய அமைச்சரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஜி கே வாசன்  தற்போது டெல்லியில் இருக்க கூடிய பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது தான் இந்த சந்திப்பானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் , மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவையும் சந்திப்பதற்கு ஜி கே வாசன்  தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் – பெயர் வைத்தது யார் ? எங்கே கரையை கடக்கும் ….!!

வங்கக்கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையத்தில் தெரிவித்தது அந்த புயல் குறித்த விவரங்களைப் பார்க்கலாம். கடந்த 4_ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பிறகு 5 ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் அப்படின்னு கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் தப்பிய திருடனை விமானத்தில் விரைந்துசென்று ‘வரவேற்ற’காவல் துறையினர் !

நகைகளைத் திருடிவிட்டு ரயிலில் தப்பிய திருடனை அவனுக்கு முன்னால் விமானத்தில் சென்று பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் மெஹக் வி பிராகல் (Mehak V Piragal’s) வீட்டை ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த குஷால் சிங் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுத்தம் செய்வதற்கு வந்துள்ளாளார் . மெஹக் தனது குடும்பத்தினருடன் துணிக்கடைக்குச் செல்லும்போது குஷால் சிங்கிடம் வீட்டை சுத்தம் செய்யச் சொல்லிச் சென்றுள்ளார். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் லாக்கரிலிருந்த நகைகளைத் திருடியுள்ளார். பின்னர் மெஹக் […]

Categories
தேசிய செய்திகள்

”யோகி அரசுக்கு சிக்கல்” வருங்கால வைப்புத்தொகை முதலீடு விவகாரம் …!!

தொழிலாளர் வைப்புத்தொகை முதலீடு விவகாரம் உத்தரப் பிரதேச யோகி அரசு மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் எழக் காரணமாயிற்று. இது தொடர்பாக அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா […]

Categories
தேசிய செய்திகள்

ஆபத்தான முறையில் நிற்கும் பாறைகள் போடிமெட்டு அருகே அச்சத்தில் மக்கள் …

கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்வதற்குத் திரும்பும் வளைவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு வளைவுப் பகுதி மிகவும் ஆபத்தாகக் காட்சியளிக்கிறது. போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்லும் பாதையில் இருக்கும் பாறைகள் மண் அரிப்பின் காரணமாக, போதுமான பிடிமானம் இல்லாமல் காட்சி அளிக்கின்றன. இது அப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு பாறைகள் விழுந்து விடுமோ என்னும் அச்சத்தை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராம ராஜ்ஜியம் அல்ல, நாதுராம் ராஜ்ஜியம்” – யோகி அரசு குறித்து அகிலேஷ் ….!!

உத்தரப் பிரதேச அரசு மின்சார தொழிலாளர் வைப்பு நிதி ரூ.2,600 கோடியை வங்கிசாரா தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். மேலும் தற்போது நடப்பது ராம ராஜ்ஜியம் (ஆட்சி) அல்ல நாதுராம் (கோட்சே) ராஜ்ஜியம் என்றும் அவர் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Akilesh Yadav) செய்தியாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

நீதித்துறைVSகாவல்துறை ….. ”தலைநகரின் அவமானம்”….. தேசியளவில் ட்ரெண்டிங் …!!

தலைநகர் டெல்லியில் சட்டத்துறையும் , காவல்துறையும் மோதிக்கொண்டு போராட்டம் நடைபெறும் சம்பவம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரும் , காவல்துறையினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.  இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதில் காவல்துறை மற்றும் வழக்கறிஞ்சர் மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 8-க்கும் மேற்பட்ட வழக்கறிஞ்சர்கள் தாக்குதலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் குண்டு வெடிப்பு : திக்… திக் CCTV பதிவு வெளியானது….. !!

மணிப்பூரில் குண்டு வெடித்த CCTV காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. மேலும் இதற்க்காக அனைத்து மாநிலத்தில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து அமைத்து மாநிலமும் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மணிப்பூரின் தங்கல் பஜாரில் தீடிரென குண்டுவெடித்தது. பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் குண்டு வெடித்ததில் 4 போலீசார் மற்றும் 1 பொதுமக்கள் காயமடைந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

வள்ளுவரின் குறளாலேயே பாஜகவுக்கு பதிலடி! – ப. சிதம்பரம் அசத்தல் பதிவு …!!

திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட பாஜகவை சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கே பாதுகாப்பு இல்லையா ? போலீசார் முற்றுகை போராட்டம் …!!

வழக்கறிஞ்சர்களை கண்டித்து டெல்லி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தாக்கப்பட்டார்கள். இது தவிர பல போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதை தொடர்ந்து போலீஸ்_க்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று  போலீஸ் கமிஷனருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருக்கிறார்கள்.அதே போல போலீசார் தங்களை தாக்கியதாகவும் , துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் வழக்கறிஞ்சர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை” பின்வாங்கிய பினராயி விஜயன் …!!

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் 50 வயதிற்குள்பட்ட பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வருடத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது.இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் சபரிமலை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, […]

Categories
தேசிய செய்திகள்

பொலிவிழக்கும் தாஜ்மஹால்……. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க….. கவலை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்…!!

காற்று மாசு இல் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரும் அடையாளமான தாஜ்மஹால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹால்முழுக்க முழுக்க வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக தனது இயல்பான நிறத்தை விடுத்து மஞ்சள் நிறத்தில் மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. இதையடுத்து மரங்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் ரகசிய தகவல்கள் கசியவிடப்படுகிறதா?

கட்சி எடுக்கும் ரகசிய முடிவுகள் மற்ற கட்சிக்குச் சென்றடைவதைக் கட்டுப்படுத்தும்விதமாக முக்கிய கூட்டங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னை, பொருளாதார மந்தநிலை போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்விதமாகவும் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நவம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.இது குறித்து விவாதிக்க பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளடக்கிய கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாட்சப் சரியில்லைங்க…….. 13 எதிர்க்கட்சி தலைவர்கள்…… குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க திட்டம்…..!!

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேவு பார்க்கப்பட்டு வந்ததாக வந்த தகவலை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் தளங்கள் இஸ்ரேலி நாட்டின் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களை உளவு பார்த்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

டீச்சர் எங்களவிட்டு போகாதீங்க – கேரளாவில் ஒரு பாசப்போராட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்காகப் பள்ளிக் குழந்தைகள் நடத்திய பாசப்போரட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் பணியிட மாற்றத்தில் வேறு பள்ளிக்குச் செல்லவிருந்த ஆங்கில ஆசிரியர் பகவானை விட்டுப் பிரிய மனமில்லாமல் திருவள்ளூர் அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய பாசப்போரட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். இப்போது, அதே போன்ற ஒரு சம்பவம் கேரளாவிலும் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் இடுக்கி மாவட்டம் கரிம்குன்னம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமிர்தா. இவர் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கடும் தொந்தரவு கொடுப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்குக் கருணை காட்டமாட்டோம் – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

நாட்டின் தலைநகர் பகுதியில் காற்று மாசு அதிகரிக்கக் காரணமாக உள்ள விவசாயிகளுக்குக் கண்டிப்பாகக் கருணை காட்ட மாட்டோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தலைநகர் பகுதியில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் காற்று தர அளவீடு 450-க்கு மேல் உள்ளது. காற்று மாசு காரணமாகத் தலைநகர் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. அபாயகரமான அளவை எட்டியுள்ள காற்று மாசு குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 1,00,000 அபராதம்….. ”மாசுவை கட்டுப்படுத்துங்க” ஆப்படிக்கும் உச்ச நீதிமன்றம்…!!

மாசு அபாய நிலைத் தாண்டியதைத் தொடர்ந்து கட்டுமான தொழில்களை மேற்கொள்ளவும் கழிவுகளை எரிக்கவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மாசு அபாய நிலையைத் தாண்டியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும் பல முன்னெச்சரிக்கை எடுத்தும் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் டெல்லி மாசு குறித்து தொடரப்பட்ட வழக்கை அருண் மிஸ்ரா, தீபக் குப்தா கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது. காற்று மாசு மிகவும் மோசமான நிலையை அடைந்ததாகக் […]

Categories
தேசிய செய்திகள்

ஹெல்மட் போடலனா ”செத்துபோவிங்க” மரண பீதியில் அரசு ஊழியர்கள் ….!!

உத்தரப்பிரதேசத்தில் அரசு கட்டிடம் சரி செய்யப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து வேலை செய்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்வதே அரசின் பிரதான கடமை. அதற்காகவே அவர்களை நாம் வாக்கு அளித்து தேர்வு செய்கின்றேன். சொல்லப் போனால் அரசாங்கம் மக்களுக்கான வேலைக்காரன் என்றும் சொல்லலாம். ஆனால் தற்போது நிலைமை வேறு , மக்களுக்கு சேவை செய்யாமல் ஒவ்வொரு அரசும் மக்களை வஞ்சித்து வருகின்றனர். இதனால் தான் அங்கங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்” கதறி அழுத மாணவர்கள்….!!

கேரள இடுக்கி பள்ளி  ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த மாணவர்கள் கதறி அழுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.  கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பள்ளியில் மாணவர்களை அடித்ததாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை பள்ளியை விட்டு வெளியேறியபோது மாணவ மாணவிகள் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தொடுப்புழா_வில் செயல்பட்டு வரும் பள்ளியில் அமிர்தா என்பவர் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு சென்ற 1100 இந்தியர்கள்…!!

சீக்கிய மதத்தின் நிறுவிய பாபா குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக 1100 இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் சென்றுள்ளனர். சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவ்-இன் 550ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நாகர் கீர்த்தன் ஊர்வலத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 1100 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.இதற்காக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் அம்ரிஸ்டர் வழியாக சென்றனர். இதுகுறித்து ETPB துணை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டு மக்களால் 2004 டிசம்பர் 26ஆம் தேதியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? சுனாமி தாக்குதல் நடந்து ஆண்டுகள் 14 கடந்துவிட்டாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அதன் ஆங்காரமான சப்தம் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆழிப்பேரலையில் சிக்கி கடலுக்குள் மரணித்த அந்த மக்களின் மரண ஓலத்தின் சப்தம், ஒருகணம் நம் உயிரை நிறுத்திவிடும். இதுபோன்ற ஆபத்தான இயற்கை பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி? ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது போல் சுனாமியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியலைத் தீர்மானிக்கும் இரு சந்திப்புகள்….!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 […]

Categories
தேசிய செய்திகள்

சிக்குவாரா சின்மயானந்தா? – வலுக்கும் ஆதாரம்!

 சின்மயானந்தாவுக்கு எதிரான ஆதரங்கள் இருக்கும் மடிக்கணினியை சிறப்பு புலனாய்வுக்குழு கைப்பற்றியது. பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார்.இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார். இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உத்தரப் பிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திடீர் அரசியல் திருப்பம்….. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி… கோட்டை விட்ட பாஜக…..!!.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சிவசேனா ஆதரவில் அமைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வருகிற 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ளது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழா (தேர்தல்) கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்தது. வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா […]

Categories
தேசிய செய்திகள்

‘பால் தாக்கரே இருந்தால் தைரியம் வருமா?’ பாஜகவுக்கு ரோஹித் பவார் கேள்வி…!!

பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், பாரதிய ஜனதாவுக்கு இத்தனை தைரியம் வருமா? என்று தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிரா மாநிலத்தின் கார்ஜட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஹித் ராஜேந்திர பவார் முகநூலில் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பல தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி மகாராஷ்டிரா. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் பால […]

Categories
தேசிய செய்திகள்

2 வாரம் தான் ….. ”முதல்வருக்கு கெடு”….. அசால்ட் கொடுக்கும் தெலுங்கு ‘தல’

ஆந்திராவில் உள்ள மணல் தட்டுப்பாட்டை இரண்டு வாரங்களில் தீர்க்கவில்லை என்றால் பெரும் விளைவுகளை மாநில அரசு சந்திக்க நேரிடும் என்று நடிகர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். ஜெகன் தற்போது அங்கு அதிரடியான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையில் ஆந்திராவில் தற்போது மணல் மீது ஜெகனின் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக கடுமையாக ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியாவில் அமலுக்குவருமா தேசிய பாதுகாப்புச் சட்டம்?

அயோத்தியா தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங் தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசிலிருந்து தப்பிக்க… கேரட், கீரை சாப்பிடுங்கள்… மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.!! 

அபாயகரமான நிலையிலுள்ள காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேரட் சாப்பிடுமாறு கூறியுள்ளார். நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன. இந்நிலையில்  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கேரட் சாப்பிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசிலிருந்து தப்பிக்கனுமா… பாட்டு கேளுங்க… பிரகாஷ் ஜவடேகர் புது ஐடியா..!!

காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.   இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்து கொள்… “வற்புறுத்திய தாய்”… கம்பியால் அடித்து கொன்ற மகள்..!!

மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). இவர் மின்சார வாரியத்தில் உதவி தனி அலுவலராகப் பணியாற்றிவருகிறார். கணவரைப் பிரிந்த நீரு பஹா, தனது தாய் சந்தோஷ் பஹாவுடன் வசித்துவந்துள்ளார். கணவரைப் பிரிந்து வந்ததற்காக மகளை சந்தோஷ் பஹா தினமும் திட்டிவந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், நீரு பஹாவை மறுமணம் செய்துகொள்ளுமாறு சந்தோஷ் […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய வரைபடம்” ஐநா விதிமுறையை மீறியதா இந்தியா…?? பாகிஸ்தான் கடும் கண்டனம்….!!

இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரை பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய இந்தியவரைபடம் வெளியிடப்பட்டதாக பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃசி  ஜம்மு காஷ்மீர் ஆகிய பாகிஸ்தான் பகுதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

”நீதிமன்ற சிஸ்டம் சரி இல்லை” உச்சநீதிமன்றமே இப்படி சொன்னா எப்படி ?

கிரிமினல் வழக்குகளை கையாள்வதை அலகாபாத் நீதிமன்றம் சிஸ்டம் செயலிழந்து விட்டது என்று உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை அமர்வில் அலகாபாத் உயர்நீதிமன்றம் செயல்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. அதாவது 20 வருடங்களுக்கு மேலாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை சரியாக  கையாளவில்லை என்று எங்களால் பார்க்க முடிகிறது. இது தொடர்பாக பதில் அளியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் சுர்ஜித் துயரம்….10 மணி நேர போராட்டம்…. ஹரியானா சிறுமி மரணம் …!!

ஹரியானா மாநிலத்தில் ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுமி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று விளையாடிக்கொண்டு இருந்த  5 வயது சிறுமி 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர். ஆழ்துளை கிணற்றை சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தினர். மேலும் 50 அடி ஆழத்தில் இருந்த சிறுமிக்கு தொடர்ந்து ஆக்ஜிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. சிறுமியை மீட்டதும் […]

Categories

Tech |