மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா காங்கிரஸ் தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், ‘கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸிடம் எண்ணிக்கை இருந்தது. மொத்தம் 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவை எங்கள் கூட்டணி பெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலை […]
