Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இருக்க வேண்டுமா? பாரத் மாதா கீ ஜே சொல்லுங்கள்- பாஜக அமைச்சர்.!!

இந்தியாவில் வாழவேண்டுமானால் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புனேவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி..யின் 54ஆவது வருடாந்திர மாநாட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ‘இந்திய விடுதலைக்காக பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து நுழைந்து வாழ்வதற்கு, இந்தியா என்ன தர்ம சத்திரமா?, அல்லது அப்படியொரு […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் ஜெனரல் பிபின் ராவத்.!

முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது முப்படைகளுக்கும் ஒரு தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அதைத்தொடர்ந்து  அண்மையில் முப்படைகளுக்கும் தலைமை தளபதியை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்தநிலையில் ராணுவம், விமானப்படை கடற்படை ஆகிய முப்படை தளபதிகளின்  ஆலோசகராக ஜெனரல் பிபின் ராவத் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராணுவ  தளபதியாக உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

சமூக ஆர்வலர் நாசர் நந்தி துபாயில் மரணம்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்த கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாசர் நந்தி மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாசர் நந்தி. துபாயில் வசித்து வந்த இவர், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்துவந்தார். அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் இறந்தால், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேயே அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வந்தார். கடவுச்சீட்டு பிரச்னையால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் செல்லுங்கள்… உ.பி., ஏடிஜிபிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் – முக்தார் அப்பாஸ் நக்வி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் செல்லுங்கள் எனப் பேசிய மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று (டிச. 29ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பிரசாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு 100 நாள்கள் விடுமுறை- அமித்ஷா உறுதி..!!

சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆண்டுக்கு 100 நாள்கள் செலவிடும் வகையில் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய ஆயுதக் காவல் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) அலுவலகத்தின் புதிய தலைமையக கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். விழாவில் பேசிய அமித் ஷா, “நரேந்திர மோடி அரசாங்கம் சிஆர்பிஎஃப் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு சிஆர்பிஎஃப் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் இருக்கும் தொண்டர் குடும்பத்தைச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் உத்தரப் பிரதேசக் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்ற பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரின் வீட்டிற்குச் சென்று, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி வந்தா போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கை விடுத்த மாணவர் அமைப்பு!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூருக்கு செல்லவுள்ளார். திட்டமிட்டப்படி மோடி திஸ்பூருக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அஸ்ஸாம் மாணவர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங், வயிற்றுப் பிரச்னை காரணமாக மும்பையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு (80) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததைத்தொடர்ந்து அவரை மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும்படி  அறிவுறுத்தினார்கள். அதன்படி முலாயம் சிங், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிறு சம்மந்தமான  பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் தடுத்து நிறுத்தம்!

ஸ்ரீநகர் : காஷ்மீரின் எல்லைக்கோடு அருகே பெரும் வெடிகுண்டு தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கோடு அருகே கெரி செக்டாரில் இன்று மாலை நான்கு மணியளவில் பாதுகாப்புப்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியில் சந்தேகப்படும்படியான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுள்ளனர். பின் வாகனத்தில் இருந்து இறங்கிப் பார்த்தபோது, அது சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பது தெரியவந்தது. பின்னர், அதனைச் செயலிழக்கச் செய்து அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வரும் 31ஆம் தேதிக்குள் இதை மறக்காம செஞ்சிடுங்க!

2019 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மூன்று விஷயங்களை மறக்காமல் செய்துவிடுங்கள்.இந்த ஆண்டு இறுதிக்குள் மறக்காமல் முடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் பான்-ஆதார் இணைப்பு பான் கார்டை (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 31ஆம் தேதிக்குள் வருமானவரி நிரந்தர கணக்கு எண் – ஆதார் இணைப்பு மேற்கொள்ளவில்லை என்றால் பான் கார்டு எனப்படும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம்: நீதி கிடைத்தது எப்படி?

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாமல் இருந்தால் இந்த நாடு எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால், இன்றுவரை அது ஒரு அழகான கனவாக மட்டும்தானே இருக்கிறது.   அழிந்துவரும் சமகால சமூக அறம் இந்தியாவில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவை, சர்வதேச அளவில் தலை குனியவைத்துள்ளன. கொடியவனை நல்லவன் வீழ்த்துவதை பண்டிகைகளாகக் கொண்டாடுவது நம் இந்திய சமூகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்” – நெட்டிசன்கள் பாராட்டு..!!

ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணம் செய்கையில் பிரசவ வலியால் துடித்த பயணி ஒருவருக்கு இந்திய இராணுவ மருத்துவர்கள் இருவர் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்திய இராணுவ மருத்துவர்கள், கேப்டன் லலிதா மற்றும் 172 ராணுவ மருத்துவமனையின் கேப்டன் அமன்தீப் ஆகியோர் ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். தகவலறிந்த இருவரும் அந்தப் பயணிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில் தாய் […]

Categories
தேசிய செய்திகள்

சாக்லெட் கொடுத்து சிறுமியை சீரழிக்க முயற்சி… இளைஞருக்கு வலைவீச்சு.!!

யாத்கிரில் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 23 வயது இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் யாத்கிர் பகுதியைச் சேர்ந்தவர் நிங்கப்பா (23). இவர் தனது வீட்டருகே வசிக்கும் 4 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர், குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட பெற்றோர், சம்பவ இடத்திற்கு வரும் முன்னே […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!

திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார். தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் […]

Categories
தேசிய செய்திகள்

‘சாதியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை இளைஞர்கள் வெறுக்கின்றனர்’ – பிரதமர் மோடி..!!

சாதியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை இளைஞர்கள் வெறுக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இந்தாண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி இன்று உரையாற்றியுள்ளார். அதில் அவர், “நம் இளைஞர்கள் அமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கென தனிப்பட்ட கருத்து உண்டு. அந்த அமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனின் மகன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா… ஆறு முதலமைச்சர்கள், ஸ்டாலின் பங்கேற்பு..!!

ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில், ஆறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்றது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் இன்று (டிச.28) ஆலோசனை நடத்தினார். டெல்லி ஜீவந்தீப் கட்டடத்தில் நடந்த இந்த ஆலோசனையின்போது “வங்கிகளால் இணைக்கப்பட்ட சொத்துகளை ஆன்லைனில் ஏலம் எடுப்பதற்கான மின் ஏல போர்ட்டலையும் (மின்னணு தளம்) தொடங்கி வைத்தார். பொதுத்துறை வங்கிகளின் (பி.எஸ்.பி) தலைவர்கள், இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி மற்றும் முன்னணி தனியார் துறை வங்கிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

என்ன செய்வது….. மரணம் உறுதி…. அதிர்ச்சியோ அதிர்ச்சி…… உயிர் குடிக்கும் மாசு…!!

உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் கருத்துருக்களில் ஒன்று சுற்றுச்சூழல் மாசு. சுற்றுச்சூழல் மாசுபாட்டில் சர்வதேச தலைநகராக இந்தியா திகழ்வதாக கூறப்பட்டும் நிலையில், அது எதிர்காலத்திலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக Global Alliance on Health and Pollution (GAHP) என்ற சர்வதேச அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்களின் ஆரோக்கியத்தை கெடுப்பதில் சுற்றுச்சூழல் மாசுக்கு உள்ள பங்கு குறித்து சர்வதேச அளவில் 40 நாடுகளில் 400 அமைப்புகள் நடத்திய ஆய்வில், கடந்த 2017ஆம் ஆண்டில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

தொழில் முனைவோர் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கத் திட்டம்!

 தொழில் முனைதலை ஊக்குவிப்பதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சிறிய சோப் மற்றும் டிடர்ஜெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக “சோப் தயாரிப்பில் நவீன முறைகள்” குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான கூடுதல் தலைமைச் செயலர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் – குடியரசு துணைத் தலைவர் நம்பிக்கை

இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை சந்தித்தாலும், அது விரைவில் மீண்டு வரும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் உள்ள பி.டி.ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய பொருளாதார சங்கத்தின் 102ஆவது ஆண்டு மாநாட்டைத் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த நிதியாண்டின் வளர்ச்சி குறைந்துள்ளதால், இந்திய பொருளாதாரம் தற்போது சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த காலங்களிலும்கூட, கிழக்கு ஆசிய நிதி […]

Categories
தேசிய செய்திகள்

’இஸ்லாமியர்கள் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள்?’

இஸ்லாமியர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சிறும்பான்மையினர் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவர்களை நீங்கள் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள் என்று சீத்தாராம் யெச்சூரி மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஹைதராபாத்திலுள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘சேவ் இந்தியா – சேவ் கான்ஸ்டியூசன்’ (save india – save constitution) நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “தேசிய குடியுரிமை பதிவேட்டால் அசாமில் 19 லட்சம் மக்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லியின் சிலையை திறந்து வைத்த பீகார் முதலமைச்சர்!

மத்திய முன்னாள் நிதியமைச்சர் மறைந்த அருண் ஜெட்லியின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அருண் ஜேட்லி. மகாராஜ் கிஷன் ஜேட்லி, ரத்னா பிரபா ஆகியோருக்கு 1952 டிசம்பர் 28ஆம் தேதி மகனாகப் பிறந்த ஜேட்லி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராகப் பதவி […]

Categories
தேசிய செய்திகள்

”நிலம் கொடுக்க மாட்டோம்”…. 3 நகர கனவுக்கு மண்ணை அள்ளி போட்ட மக்கள்…. அதிர்ச்சியில் ஜெகன்

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரை உருவாக்கும் முடிவை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும்போது ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தானது புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆந்திராவின் முகமாக அறியப்பட்ட ஹைதராபாத்தை இழந்தது ஆந்திர அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் அம்மாநில மக்களுக்கும் அதை ஏற்றுக்கொள்வதில் உள்ள கடினம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்தச்சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சராக […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பொதுமக்களிடம் நாடகமாடிய நடிகை திஷா சவுத்ரி வழக்கின் கிளைமக்ஸ்…!!

பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுதப்படைகளுக்கு மனித உரிமைச் சட்டங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு – பிபின் ராவத்.!

ஆயுதப் படைகளுக்கு மனித உரிமைச் சட்டங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார். ராணுவத் தளபதிகள் மனித உரிமைச் சட்டங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவதாகவும் அவர்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் எதிரிகளையும்கூட ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லி மனவ் அதிகார பவனில், ‘போர் நடைபெறும் நேரங்கள் மற்றும் போர்க் கைதிகளில் மனித […]

Categories
தேசிய செய்திகள்

சி.ஏ.ஏ. வன்முறை குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரமிது – அமித்ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட சிறு குழுக்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். டெல்லி மேம்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்பான எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. டெல்லியில் நிலவிய அமைதியான சூழ்நிலையை அவர்கள் சீர்குலைத்துவிட்டனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின்போது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நான் ஹிந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்னிடம் பாகுபாடு காட்டியது உண்மைதான் டேனிஷ் கனேரியா

பாகிஸ்தான்  முன்னாள்  கிரிக்கெட் வீரர்  டேனிஷ் கனேரியா ஒரு  ஹிந்து என்பதால்  அவர் மீது  பாகுபாடு  காட்டப்பட்டது என்று சோயப் அக்தர் கூறியிருந்தார் .இதனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் டேனிஷ் கனேரியா .                                                                  […]

Categories
தேசிய செய்திகள்

நான் கொல்லவில்லை… பிசாசுகள் கொன்றுவிட்டது… நாடகமாடிய கணவன் கைது..!!

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, பிசாசுகள் கொன்றுவிட்டதாக நாடகமாடியவரை காவலர்கள் கைது செய்து விசாரித்துவருகின்றனர். கர்நாடக மாநிலம் நிலமங்களா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்ஷிப் உல்லா. இவரது மனைவி ஹீனா கவுசர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரின் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக ஹீனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம்… மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்…!!

சூரிய கிரகணம் நிகழ்ந்ததையொட்டி கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இதனை கங்கன சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தஜதன்ஸ்புரா கிராமத்தில் சிலர் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் […]

Categories
தேசிய செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள்

மதுரைக்கு சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர்..!!

சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர். அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

போராட்ட வாழ்க்கை… பொதுவுடைமை வேட்கை… அவர்தான் நல்லகண்ணு!

மக்கள் உரிமைகளுக்கான போராட்டக் களத்தில் எப்பொதும் முன்னிலையில் நின்று சமரசமின்றி போராடும் தோழர் நல்லகண்ணு இன்று தனது 95ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறிய தொகுப்பு… போராட்டமே வாழ்க்கையென வாழும் நல்லகண்ணு, தனது 15 வயதிலிருந்து சமூக முன்னேற்றத்துக்காக போராடிவருகிறார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வைகுண்டத்தில் பிறந்து, தனது 18 வயதில் செங்கொடியேந்தி போராட்ட களம் சென்றவர் தோழர் நல்லகண்ணு. அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்களே என்று கூறுபவர்கள் கூட நல்லகண்ணுவை அதற்குள் அடக்குவதில்லை. அதற்கு அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : மாணவர்களே…. ”பயப்படாமல் போராடுங்கள்”…. கவனத்தை ஈர்த்த முதல்வர் …!!

குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமை பதிவேட்டுக்கு எதிராக மாணவர்கள் பயமின்றி போராட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிராக நாடுமுறுவதும் போராட்டம் வலுத்து வருகின்றது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகம் , உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலத்தில் வன்முறை சம்பவமும் , அடக்குமுறையும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பதிலடி… 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

 பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவம் திவா பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்கள் – மோகன் பகவத்..!!

இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது. இங்குள்ள மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் 130 கோடி மக்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் போட்டோ மீமாக மாறுகிறது”… கூலாக பதிலளித்த மோடி..!!

ட்விட்டர் பக்கம் ஓன்று உங்கள் புகைப்படம் மீமாக மாறுகிறது என தெரிவித்ததற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள், குழந்தைகள் உட்பட  பலரும் பார்த்து ரசித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியாத சூழ்நிலையால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளும் சூரிய […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள்

அயோத்தியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவல்-உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர்  அயோத்தியில் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து அயோத்தியில்  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 9-ந்தேதி தீர்ப்பளித்தது.இதற்காக 3 மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தவும், முஸ்லிம் தரப்பினர் புதிதாக மசூதி கட்டிக் கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

130,00,00,000 ஹிந்துக்கள்…. அதிரடி காட்டிய மோகன் பகவத் …!!

இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது. இங்குள்ள மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் 130 கோடி மக்களையும் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“ஆர்வமாக இருந்தேன்”… ஆனால் பார்க்க முடியவில்லை… பிரதமர் மோடி ட்வீட்..!

மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். சூரிய கிரகணம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் சிறுவர்கள் என பலரும் பார்த்து ரசித்தனர். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்பதால் சோலார், சூரிய கண்ணாடி மூலம் பார்த்து கண்டுகளித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் பார்க்க […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா, ராகுலை சந்தித்த ஹேமந்த் சோரன்..!!

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி (ஜே.எம்.எம்.) தலைவர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஜார்க்கண்ட் சட்டபேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன், டிச.29ஆம் தேதி பதவியேற்கிறார். இந்நிலையில் இன்று அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… இந்திய வீரர் ஒருவர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரப்பில் இருந்து  அடிக்கடி, அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது.  இத்தாக்குதலுக்கு இந்தியாவும் தனது பதிலடியை கொடுத்து  வருகிறது. இந்நிலையில் இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்துவருகின்றன. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி என்னும் பிரிவில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர்நிறுத்த […]

Categories
தேசிய செய்திகள்

கொத்தடிமைகளாக இருக்க விருப்பமில்லை – மத்திய அமைச்சருக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் கடிதம்..!!

 தங்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தியும் தாங்கள் கொத்தடிமைளாக இருக்க விருப்பமில்லை என்றும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மத்திய விமானத் துறை இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில், தங்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி ‘இந்திய கமர்ஷியல் பைலட்ஸ் அசோஷியாஷேன்’ என்ற விமானிகள் […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைகளுக்கும் தலைமை தளபதி… இந்த முடிவுக்கு வர காரணம் என்ன?

1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்தான் முப்படைகளுக்கும் ஒரே தளபதி தேவை என்பதை இந்திய ராணுவம் வலுவாக உணர்ந்தது. ஏனென்றால், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், இரண்டு வாரங்களுக்கு பின்னரே பாகிஸ்தானின் ஊடுருவல் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தெரியவந்தது குளோபல் பயர்பவர் (Global Firepower) எனப்படும் உலகில் சக்திவாயந்த ராணுவங்கள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பின் நான்காம் இடத்திலுள்ள இந்தியாவில் பாதுகாப்புதுறையை மேம்படுத்த புதியதொரு சீர்திருத்த நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனுக்கு வலை விரிக்கிறதா பாஜக? – எச்சரிக்கும் அரசியல் தலைவர்!

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) என்ற போர்வை மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) மத்திய அரசு செயல்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் எச்சரித்துள்ளார். குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்த மசோதாவை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த வேளையில், மற்றொரு விவகாரமும் பூதாகரமாக எழ தொடங்கியுள்ளது. அண்மையில் அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு (என்.ஆர்.சி.) விவகாரம்தான் அது. அசாமில் நடத்தப்பட்ட இந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரிலிருந்து 7,000 வீரர்களை வாபஸ் வாங்கிய உள்துறை..!!

காஷ்மீரில் பாதுகாப்பு மறுஆய்வு செய்த பின்னர் 7,000 பாதுகாப்புப் படை வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் அந்தஸ்த்தை நீக்குவதற்கு முன்பு வன்முறைச் சம்பவங்கள் வெடிக்காமல் இருப்பதற்காக ஏராளமான துணை ராணுவ பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அதில், மத்திய ஆயுத காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லைக் காவல் படை உள்ளிட்ட 72 பாதுகாப்புப் […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்.இன் திட்டம்…. அமித் ஷா விளக்கத்தை ஏற்க முடியாது – டி.கே.ரங்கராஜன்!

தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த அமித் ஷா விளக்கத்தை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2021 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நடத்த மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடத்துவதற்கான முன்னோட்டம் என்றும், குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக அமையும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”NRC_க்கும் NPR_க்கும் தொடர்பில்லை” அமித்ஷா விளக்கம் …!!

என்.ஆர்.சிக்கும், என்.பி.ஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என  அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் பொதுமக்களிடையே பெரிய குழப்பங்கள் ஏற்பட்டநிலையில் இதன் மூலமாக குடியுரிமை பறிக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ANI செய்தி நிறுவனத்துக்கு விரிவான விளக்கம் அளித்தார். அப்போது அமித்ஷா கூறுகையில் NRC , NPR_க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக  விளக்குகின்றார். இதனை தனித்தனியாக  பாருங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

கவர்ச்சிகர சைவ உணவுப் பிரியர் மனுஷி சில்லர்..!!

அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) வழங்கும் இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதருக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் வென்றுள்ளார். முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரை இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதராக அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கமுறையை பின்பற்றிவரும் மனுஷி சில்லர், இதுவரை தனக்குக் கிடைத்த பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“இளம்பெண் கூட்டு பலாத்காரம்”… முறையான விசாரணை இல்லை… குடும்பத்துடன் விஷம் அருந்திய சோகம்..!!

கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், காவல் துறையினரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் காவல் துறை அலுவலகம் முன் விஷம் அருந்தினார். சில மாதங்களுக்கு முன் மும்பையில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வாரணாசியிலுள்ள மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு முறையான […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதி மறுக்கப்பட்ட மாணவி; ஆதரவாக குரல் கொடுத்த சிதம்பரம்!

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிக்கு குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ரபியா. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெறவிருந்த இவருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். குடியரசு தலைவர் சென்ற பின்னரே மாணவி நிகழ்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவர் மேடையில் ஏறி […]

Categories

Tech |