Categories
அரசியல் தேசிய செய்திகள்

எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம் ….!!

சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் எவ்வித ஆதாரமுமின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தனது ஆதங்கத்தை ப. சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே உங்களுக்காக…. ”ரூ 20,000,00,00,000 நிதி” BSNL_யின் அதிரடி முடிவு ….!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சொத்துகளின் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதித்திரட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் உள்ள நிலையில், அதை லாபகரமானதாக மாற்ற பல்வேறு திட்டங்களை அரசு தீட்டிவருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிர்வாக இயக்குநர் பி.கே. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் 25 வயதான சீக்கியர் கொலை…!!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நன்கான சாஹிப் குருத்வாரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சீக்கியர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் சிறுபான்மைப் பிரிவினரான சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசு சீக்கியர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை மட்டுமல்லாது, பாஞ்சாப் மாநிலத்தலைவர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பெஷவார் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பாவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் மரணம்: வாயை திறக்காத பாஜக முதலமைச்சர்.!!

மருத்துவமனைகளில் ஏற்படும் குழந்தைகள் மரணம் தொடர்பான கேள்விக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளிக்காமல் சென்றார். குஜராத்தின் முக்கிய நகரான ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 111 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். அதேபோல், குஜராத்தின் மற்றொரு முக்கிய நகராக அகமதாபாத் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் மரணமடைவது தொடர்கிறது. அரசு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் ராஜ்கோட்டில் 1,235 குழந்தைகளும் ஜாம்நகரில் 639 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்.!!

குஜராத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 111 குழந்தை உயிரிழந்துள்ளன. 111 குழந்தைகளில் 96 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் அல்லது எடை குறைந்து பிறந்ததாகும். தீவிர சிகிச்சைப்பிரிவு மோசமாக செயல்பட்டதால் குழந்தை உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்திய இஸ்லாமியர்கள் என்பதில் பெருமையே! – இம்ரான் கானுக்கு ஓவைசி பதில்.!

இந்திய இஸ்லாமியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அசாதுதீன் ஓவைசி பதில் அளித்துள்ளார். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் நிறுவனரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, “வங்கதேசத்தில் நடந்த ஒன்றை, இந்தியாவில் நடந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் காணொலிக் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். முகமது அலி ஜின்னாவின் தவறான கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்கள் என்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிய குருத்வாரா தாக்குதல்: சோனியா காந்தி கண்டனம்!

பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது வெள்ளிக்கிழமை (ஜன. 3) இஸ்லாமியர்கள் சிலர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள் காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

3% அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை….. ரூ1,88,36,400 வருமானம் ஈட்டிய இந்தியா…. சுற்றுலாதுறை அமைச்சகம் தகவல்…!!

வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மூன்று விழுக்காடு அதிகம் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு 2019 ஆம் ஆண்டு வந்து சென்ற வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதன் மூலம் வந்த வருமானம்  குறித்த அறிக்கையை சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 96,69,233 சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2018 […]

Categories
தேசிய செய்திகள்

பாக் ராணுவம் அத்துமீறி தாக்குதல்…… காஷ்மீர் எல்லையில் பதற்றம்…!!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது. காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கிருஷ்னகர்த்தி பகுதியில் இராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரூ22,500 கோடியில் திட்ட அறிக்கை…. 100 ரயில்வே வழித்தடங்கள்… இனி தனியாருக்கு சொந்தம்…!!

  சென்னை-ஹவுரா சென்னை-ஹூக்கிலா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  தனியார் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விவாதம் நடத்தப்பட உள்ளது. அந்த அறிக்கையின்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 100 வழித்தடங்கள் தனியார் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் சட்டப்படி திருமணம் செய்யலாம்…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…!!

21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவரை தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 21 வயது பூர்த்தி அடையாத ஒரு ஆண் 21 வயது பூர்த்தி அடைந்த ஒரு பெண்ணை  அதாவது வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணம் ஆகாது என்று நீதிபதி மோகன் சந்தானம் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. 17 வயது சிறுவன் ஒருவன் 21 வயது […]

Categories
தேசிய செய்திகள்

“சமரச திட்டம்” வரி செலுத்தாதவர்களுக்கு மேலும் ஒரு மாத காலஅவகாசம்….. நேரடி வரிகள் வாரியம் தகவல்….!!

வருமானவரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் குறித்து நேரடி வரிகள் வாரியம் அறிக்கை விடுத்துள்ளது. அதில், வருமானவரி ரீதியாக குற்றங்கள் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி வருமானவரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வழி மற்றும் கூடுதல் வரி செலுத்தி வழக்குகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஏர் இந்தியா ஊழல்” ப.சிதம்பரத்துக்கு சம்மன்…. 6 மணி நேர விசாரணை…. அமலாக்கத்துறை அதிரடி…!!

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. 2005-2006 ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 111 விமானங்களை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சாதகமாக வழித்தடத்தை வழங்கியதில் பல கோடி அளவிற்கு லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த விதிகளை ஏற்படுத்திய மூத்த […]

Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவிலையே முதல்முறை….. மெட்ரோ ரயில்களில் இலவச WI-FI….!!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வை-பை வசதி டெல்லியில்  கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் லைன்  வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வைஃபை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரயில் சேவையில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இலவச வைஃபை மெட்ரோ  சேவையில் அறிமுகப்படுத்திய நாடாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய 1000 பேர் கைது…. சர்வதேச எல்லை பாதுகாப்பு படை தகவல்….!!

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தமது குடிமக்கள் ஆயிரம் பேரை கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாக வங்கதேச அரசு  தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வங்கதேசத்தின் சர்வதேச எல்லை பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலும் சட்டவிரோதமாக வசித்தவர்கள் குறித்து கடந்த மாதம் டெல்லியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விவாதித்தனர். அதனடிப்படையில் முதன்முறையாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்திய எல்லையை கடந்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு சொன்னால் போதும்….. தாக்குதலுக்கு தயார்…. ராணுவ தளபதி அதிரடி பேட்டி…!!

அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்த தயார் என்று புதிய தலைமை தளபதி  நவரானே தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து பேசிய புதிய ராணுவ தலைமை தளபதி, எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும் ஊடுருவல் நடக்காமல்  இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு. காஷ்மீரில் ராணுவம் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ராணுவத்திடம் ஏராளமான திட்டங்கள் உள்ளதாகவும் அரசு கேட்டுக்கொண்டால் அவற்றை  […]

Categories
தேசிய செய்திகள்

2 சக்கர வாகன விற்பனை….. இந்தியாவில் சரிவு….. புள்ளி விவரத்தை வெளியிட்ட முன்னணி நிறுவனங்கள்…!!

கார் விற்பனையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கடந்த வருடம் இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  கடந்த டிசம்பர் மாதம் தங்களது உள்நாட்டு விற்பனை பல மடங்கு குறைந்துவிட்டது என முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகியோர் தெரிவித்தனர். 2018 ஆம் ஆண்டு 4,36,596 பைக்குகளை விற்ற ஹீரோ ஹோண்டா கடந்த ஆண்டு 4,12,000 பைக்குகளை மட்டுமே  விற்பனை செய்துள்ளது. பஜாஜ் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் பின் வாங்க மாட்டோம்….. காங்கிரஸ் தான் வெட்கப்படணும்…… பொதுக்கூட்டத்தில் அனல் தெறிக்க பேசிய அமித்ஷா…!!

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக ஒரு அடிகூட பின்வாங்காது என  அக்கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி மக்களிடையே பேசினார். அதில், குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையும் பறிக்கும்  சட்டம் கிடையாது என்றும், பிறருக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும் சட்டம் எனவும் கூறினார். அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்ட விவகாரம் : ஒரு இன்ச் கூட பின் வாங்கப் போவதில்லை – அமித்ஷா திட்டவட்டம்.!

குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின் வாங்கப் போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய நாட்களில் இச்சட்டத்தினால் […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு” என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…… ராணுவ தளபதி பேட்டி….!!

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுமா  என்ற கேள்விக்கு ராணுவ தளபதி ஜெனரல் நவரானே பதிலளித்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் முன்பு இருந்த இடத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவற்றை இந்திய ராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ராணுவ தளபதி ஜெனரல் அவர் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை குறித்து விமர்சித்த அவர் தீவிரவாதம் என்ற பிரச்சனை புதிதானது அல்ல,  பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் சந்தித்து வருவது தான் என்று தெரிவித்தார். தற்போதைய மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

என் தலைமை பண்பிற்கு மோடி தான் காரணம்….. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி….!!

பிரதமர் மோடி தான் எனது தலைமை பண்பை வெளிப்படுத்தினார் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 திட்டம் தோல்வி அடைந்த பொழுது பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய, மற்றும் அன்பு செலுத்திய காட்சிகள் இணையத்திலும் ஊடகங்களிலும் வைரலாக பரவியது. தற்போது இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சந்திராயன்-3 திட்டத்தை வெற்றியாக கடுமையான முயற்சிகளை தற்பொழுது இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

1,190இல் ஒரு ஊழல் புகார் கூட இல்லை…… பிரதமர் மோடிக்கு லோக்பால் CERTIFICATE….!!

பிரதமர் மோடி மீது எந்தவித ஊழல் புகார்களும் லோக்பால் அமைப்புக்கு இதுவரை செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் உயர் பதவிகளில் வகிப்போர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் லோக்பாலுக்கு 1190 புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் 1,120 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கலாசாரத்திற்கு மாமல்லபுரம் தான் எடுத்துக்காட்டு…… காலண்டர் வெளியிட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் 2020க்கான புத்தாண்டு காலண்டரில் மாமல்லபுர காட்சிகள் இடம்பெற்று உள்ளன.  மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ புத்தாண்டு காலண்டரை வெளியிடுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்காண காலண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், மக்களை ஊக்குவிக்கும் வகையில் வசனங்கள் போன்றவை அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பிரதமர் மோடி சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் சுற்றுப்பயணம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹெலிகாப்டர் – ஊழல்” அரசியல் தலைவர்களுக்கு உதவியதால் சிக்கல்…… பிரபல தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை…!!

டெல்லி புனே உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.  டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மோகன் குப்தா மற்றும் புனேவை சேர்ந்த தொழில் அதிபர் மனோ ஆகியோரின் வீடுகள்  மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதில் அரசியல் தலைவர்களுக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும் தொழிலதிபர்கள் இருவரின் வீடுகளிலும் வருமான வரித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமனம்.!!

ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, ஈவ்டீசிஸ், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று மாதம் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பெண்கள் முப்பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளில் இருந்து பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதில் கல்லூரி மாணவிகள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களும் அடங்குவர். இந்த நிகழ்வில் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

‘அம்பேத்கர் மணிமண்டபம் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்’ – அஜித் பவார்!

அம்பேத்கர் மணிமண்டப கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஹிந்து மில்ஸ் பகுதியில் நடைபெற்றுவரும் அதன் கட்டுமானப் பணிகளை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க நாங்கள் முயற்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கைல செல் போன் வச்சு செய்யுறாங்க” ஸ்டாலின் உண்ணாவிரதம் ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுப்பதாகவும் , இதனால் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக , திமுக சமபலத்துடன் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் திமுக வெற்றியை ஆளும் கட்சி தடுத்ததாக கூறி  மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , முதலமைச்சரின் மைத்துனர் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்த முடியாது……. கெத்து காட்டும் கேரளா….. சட்டத்துறை அமைச்சர் எச்சரிக்கை….!!

குடியுரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கேரள சட்டமன்றம் உட்பட எந்த ஒரு மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது என்றும்  மத்திய அரசு எச்சரித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை அனைத்து மாநில அரசும்  அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

”திருப்பி அடிக்கும் பாஜக” முதல்வருக்கு எதிராக தீர்மானம்…. தேசிய அரசியலில் பரபரப்பு …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்ம ராவ் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டு தீர்மானத்தை கொண்டுவந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.19 உயர்வு

மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை (கியாஸ்) ரூ.19 உயர்வை சந்தித்துள்ளது. இந்த விலையேற்றம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. மானியம் அல்லாத சமையல் உருளை விலை ரூ.19 அதிகரித்துள்ளது. இது 2.6 சதவிகித உயர்வாகும். கடந்த நான்கு மாதங்களுடன் ஒப்பிடும்போது சமையல் எரிவாயு உருளை ரூ.139.50 காசுகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் டெல்லியில் மானியம் அல்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளை ரூ.695லிருந்து ரூ.714 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தா, சென்னை முறையே ரூ.684.50, ரூ.734 […]

Categories
தேசிய செய்திகள்

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்- இஸ்ரோ தலைவர் கே.சிவன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருப்பதாகவும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் மேலும் தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருப்பதாகவும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கபட்டுவிட்டதாகவும். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொருளாதாரம் குறித்து ப. சிதம்பரத்தின் பிரத்யேக பேட்டி..!!

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், நாட்டின் பொருளாதாரம் குறித்து தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 1) கேள்வி – நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள். ஆனால் அரசு இதனை மறுத்து வருகிறதே? பதில் – பொருளாதாரம் குறித்து நான் அவ்வாறு கூறவில்லை. அதனை அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனே தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் இதுதொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் பொருளாதார நிலை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

‘ககன்யான் வீரர்களுக்கான பயிற்சி இன்னும் 3 வாரங்களில் தொடங்கப்படும்’ – இஸ்ரோ சிவன்!

ககன்யான் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும். சந்திரயான் – 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் […]

Categories
தேசிய செய்திகள்

இக்கட்டான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: 2020 கசப்பு மருந்துக்கான நேரம்!

அபாயகரமான நிலையில் உள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய அளவில் அறுவை சிகிச்சை அவசியமாகிறது; அதனை உணர்த்தியது 2019. பொருளாதாரத்தை நீடித்த நல்ல நிலையில் நிலைநிறுத்த 2020ஆம் ஆண்டில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அது குறித்த சிறப்புக் கட்டுரை… மந்தநிலைக்கான அடிப்படைக் காரணம்: 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிலவிய மந்தமான பொருளாதாரம், மிகப்பெரிய அளவில் அபாயமாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள, பொருளாதார மந்தநிலை, இயல்பானதா அல்லது கட்டமைப்பிலுள்ள பிழையால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவாதமே, […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல; குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் புத்தாண்டின்போது மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நள்ளிரவில் சென்னை சைதாப்பேட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

2020 புத்தாண்டே வருக… வருக…! – வானை வண்ணமயமாக்கிய வாணவேடிக்கைகள்..!!

2020 புத்தாண்டை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வாணவேடிக்கைகள், கொண்டாட்டங்களுடன் வரவேற்றன. பசிபிக் நாடுகள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள பெருநகரங்கள் வழக்கம்போல வாணவேடிக்கைகளால் வளிமண்டலத்தை அலங்கரித்தனர். இதனைக்காண குடும்பத்துடன் திரளாக வந்த மக்கள் அன்னாந்து பார்த்து புத்தாண்டை வருக வருக என வரவேற்றனர். கொரியாக்கள் வடகொரியர்கள் தங்களுக்கே உரிய பாணியில் பாரம்பரிய கொரிய பாடலைப் பாடியும், வாணவேடிக்கைகள் நடத்தியும் புத்தாண்டை வரவேற்றனர். தலைநகர் பியாங்யாங்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.!!

2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.   1. முற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு: (ஜனவரி 9) அரசியல் சாசனப்பிரிவு 124இன்படி சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டை பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2. புல்வாமா தாக்குதல்: (14 பிப்ரவரி) ஸ்ரீநகரிலிருந்து காஷ்மீருக்கு மத்திய ஆயுத காவல்படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்வு!

நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இரண்டு நாள்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் ரயில்வே கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், குளிரூட்டப்பட்ட வசதி இல்லாத பயணிகள் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விரைவு ரயில்களுக்கு இரண்டு பைசாவும், குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட ரயில்களுக்கு நான்கு பைசாவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நள்ளிரவு முதல் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

2019இல் விடைபெறும் டிரெண்டிங் ஸ்டார் கான்ட்ராக்டர் நேசமணி.!!

டிரெண்ட் மன்னனாக இந்தியாவையே கலக்கிவந்த கான்ட்ராக்டர் நேசமணி 2019 ஆண்டோடு விடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ்நாட்டுக்காரர்கள் குசும்புக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நூற்றாண்டை இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் காலமாக மாறிவிட்டது. ஒரு செய்தி காட்டுத்தீபோல் வைரலாக வேண்டும் அதுவும் மக்கள் மத்தியில் விஷ்வரூபம் எடுத்து விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முக்கியமாக ஒரு காணொலி, புகைப்படம், முக்கியத் தகவல்கள் எதுவாக இருந்தாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் டிரெண்டாக்குவது வழக்கமாகிவிட்டது. […]

Categories
திருப்பூர் தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியானது – பர்வீன் ஃபாத்திமா.!

பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியாக உள்ளதென பர்வீன் ஃபாத்திமா தெரிவித்துள்ளார். லடாக் பகுதியிலிருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்திற்கு 90 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றி வரும் இவர்கள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.  குறிப்பாக, பர்வீன் ஃபாத்திமா என்ற பெண் சிறிய கிராமத்தில் எந்தவிதமான வேலையுமின்றி இருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.!!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிரது. இதற்காக கடந்த 2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை (31ஆம் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீட் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத் மரியாதை.!!

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க கார்கில் ஆய்வுக் குழு பரிந்துரை செய்தது. இருந்தபோதிலும், பின்னர் ஆட்சி அமைத்த அரசுகள் இப்பதவியை உருவாக்காமல் இருந்தது. இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜக அரசு இப்பதவியை உருவாக்க முடிவெடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலும் அளித்தது. இந்நிலையில், ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத்தை முப்படைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்.!!

பிளாஸ்டிக்கால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் தன்னால் முடிந்த பங்கினை குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லாட் நகரம் ஆற்றிவருகிறது. பெட்லாட் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அக்கழிவுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதிகளவிலான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. மறுமுனையில், ஐந்து விழுக்காடு கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது. நொடிக்கு நொடி உலகத்தின் பெரிய பிரச்னையாக பிளாஸ்டிக் மாறிவருகிறது. தரம் குறைந்த பிளாஸ்டிக்குகளின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள்தொகை பிரச்னையை கையாள்வது எப்படி?

பெருகிவரும் மக்கள்தொகை நாட்டின் முன்னேற்றத்தை தொய்வுறச் செய்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை எந்தளவுக்கு சிக்கலாக உள்ளது, இதனை திறம்பட எதிர்கொள்ளவது எப்படி உள்ளிட்டவை குறித்து அலசி ஆராயும் கட்டுரை தொகுப்புதான் இது…. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, 2027ஆம் ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள்தொகை பெருக்கம் தற்காலமட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்துக்கும் தீங்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள்..!!

பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் வளர்வதற்கான ஆர்வத்தை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என ஐ.நா-வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அசோக்குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட ஆண்டு 2019. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள், மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடுதல் வலிமையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகியிருக்கிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க இது வழிவகுத்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறைக்கு ஆகஸ்ட் மாதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்ட போராளிகளுக்கு காங்கிரஸ் சட்ட உதவி?

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராடும்  போராளிகளுக்கு காங்கிரஸ் சட்ட உதவி அளிக்க முன்வந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போராடிவருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்களின் குடும்பங்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்துவருகிறார்.   இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் பெண் செய்தியாளர் மீது தாக்குதல்…வணிக வளாக ஊழியர்கள் கைது!

ஒடிசாவில் வணிக வளாக பெண் ஊழியர்கள் பெண் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞரை தாக்கினர்.  இதனையடுத்து காவலர்கள் பெண் ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர்.  ஒடிசாவில் அமைந்துள்ளது பிரபலமான வணிக வளாகம்.  இந்த வளாகத்தில் பெண் செய்தியாளர் ஸ்வாதி ஜெனா புகைப்பட கலைஞருடன் செய்தி சேகரிக்கச் சென்றார். அப்போது வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில்  பெண் ஊழியர்கள் இரண்டு பேரும் பெண் செய்தியாளர் ஸ்வாதி ஜெனாவை  தாக்கினார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனா, வணிக வளாகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

‘CAA – NRC குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை’ – வெங்கையா நாயுடு..!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாரி சன்னா ரெட்டியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும். சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது, […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் அமைச்சரவையில் இடம்பிடித்த ஆதித்யா.!!

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் 36 பேர் இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். […]

Categories

Tech |