Categories
தேசிய செய்திகள்

WORLD NO:1 பணக்காரர் இந்தியா வருகை! போராட்டத்தில்  குதிக்கப்போகும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு…

அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் வருகைக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான ஜெப் பெசோஸ் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார், இந்தப் பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 300க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை..!!

 சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை மம்தா பானர்ஜி அனுமதிப்பதில்லை – மோடி தாக்கு..!!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் இடைத்தரகர்களை ஒழிப்பதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அத்திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கொல்கத்தா துறைமுக அறைக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, “ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற திட்டங்களை மேற்கு வங்க மாநில அரசு அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஎன்யுவில் இயல்புநிலை திரும்பவில்லை – உதயநிதி ஸ்டாலின்!

ஜேஎன்யுவில் இயல்பு நிலை திரும்பவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5ஆம் தேதி மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் தாக்கப்பட்டனர். இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக அக்கட்சியின் மகளிரணி […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக் லவ்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதனையடுத்து இவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றிய டிஐஜி – துடிதுடித்த ராணுவ வீரர்.!!

குடிக்க வெந்நீர் கேட்டதற்கு ராணுவ வீரர் கொதிக்கும் நீரை கொண்டுவந்ததால் ஆத்திரமடைந்த டிஐஜி, கொதிக்கும் நீரை வீரரின் முகத்தில் உற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் ராஜ்கீர் மாவட்டத்தில் குடிக்க வெந்நீர் கேட்ட சிஆர்பிஎஃப் டிஐஜி டி.கே. திரிபாதிக்கு, கொதிக்கும் நீரை அங்கு ராணுவ உணவகத்தில் இருந்த வீரர் வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிஐஜி, அந்தக் கொதிநீரை ஊழியர் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் முகம் மற்றும் உடம்பில் பயங்கர தீக்காயங்களுக்கு ஆளான அந்த ஊழியர், அருகிலிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஹலோ அமித் ஷா பேசுற….சிக்கிய விமானப்படை அலுவலர்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா போல் ஆளுநரிடம் பேசிய விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டரான குல்தீப் பகேலா, டெல்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். அவரது நண்பரான சந்தரேஷ் குமார் சுக்லா பல் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ள நிலையில் அப்பதவிக்காக சந்தரேஷ் குமார் விண்ணப்பித்துள்ளார். பதவியை எப்படியாவது அடைந்துவிட […]

Categories
தேசிய செய்திகள்

வீதி மீறல் : சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

 கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று காலை வெடிபொருட்களைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரது பகுதியில் ஹெச்2ஓ ஹோலி ஃபெயித், ஆல்ஃபா செரினா என இரண்டு அக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பிட்டிருந்தன. இந்த இரண்டு கட்டங்களும் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை (Coastal Regulations Zone rules) மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கலாம் என நீதிமன்றம் கடந்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

’தர்பார்’ படத்திற்கு மட்டும் செலவு செய்யாதீங்க’ – ப. சிதம்பரம்

‘தர்பார்’ போன்ற படங்களுக்குச் செலவு செய்வதுபோல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்தியபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய ‘சாமானியரைப் பற்றிய குறிப்புகள்’ என்னும் நாவலும் ப. சிதம்பரத்தின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் வெளியிடப்பட்டது. கவிஞர் சிற்பி, கவிஞர் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!

குஜராத்தில் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடியின் திருமணம் வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கடல் தாண்டி ஜொலிக்கும் நம் தமிழ்..!!

துபாயில் நடந்த உலக கலாசார திருவிழாவில் தமிழ் சிறந்த கலாச்சாரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. துபாயில் இஸ்லாமிய சமய அறநிலையத்துறையின் சார்பாக பன்முக கலாச்சார திருவிழா அங்குள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அரபு, ஸ்பானிஷ், ஜெர்மனி, ருமேனியா, தமிழ், மலையாளம் உட்பட உலகம் முழுவதும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கலாச்சார அரங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தமிழ் அரங்கத்தில் இடம்பெற்ற திருக்குறள், தமிழ் வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழரின் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்களின் பண்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை நடுவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

‘என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்’ -நிர்பயா குற்றவாளி உருக்கம்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனு தாக்கல்செய்துள்ள நிர்பயா குற்றவாளி வினய் சர்மா, தன்னுடைய மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் என உருக்கமாகக் கூறியுள்ளார். டெல்லியில் நடுநிசி இரவில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரில் வினய் சர்மாவும் ஒருவர். இந்நிலையில் இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தேதி குறித்துவிட்டது. அதற்கான நீதிமன்ற கறுப்பு உத்தரவு கடந்த 7ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார அறிஞர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதார அறிஞர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி டெல்லி நிதி ஆயோக் அலுவலத்தில் பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார், தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபெக் டெத்ரோய் ஆகியோரும் உடனிருந்தனர். 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

நாட்டில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து அச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் பவன் ஜலாட்!

நிர்பயா குற்றவாளிகள் இன்னும் சில நாள்களில் தூக்கில் போடப்பட உள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டனையை பவன் ஜலாட் என்பவர் நிறைவேற்றவுள்ளார். நிர்பயா வழக்கில் தூக்கு கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும்வகையில் பவன் ஜலாட், குற்றவாளிகளைத் தூக்கில்போட வேண்டும் என திகார் சிறை நிர்வாகம் விரும்புகிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் அவர் பணிபுரியும் சிறைக்கு, திகார் நிர்வாகம் ரகசிய கடிதமும் எழுதி உள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பவன் ஜலாட் தேவை என திகார் சிறை நிர்வாகம் விரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

பஸ் யாத்திரா செல்ல முயன்ற சந்திரபாபு நாயுடு கைது.!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஸ் யாத்திரா மேற்கொள்ளவிருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அச்சகத்தில் தீ விபத்து… ஒருவர் பலி..!!

டெல்லி பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் உள்ள அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 35 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வாய்ப்பில்லை ராஜா…. மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்த CSO ….!!

நடப்பாண்டில் ஜிடிபி 5 சதவிகிதத்தைத் தாண்டாது என்று மத்திய புள்ளியியல் அலுவலகமும் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டிற்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Gross domestic product – GDP) குறித்து, தரமதிப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வந்தன. ‘பிட்ச்’ நிறுவனம் 4.6 சதவிகிதம், ‘மூடிஸ்’ 4.9 சதவிகிதம், ‘இந்திய ரிசர்வ்வங்கி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ மற்றும் ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ ஆகியவை 5 சதவிகிதம், ‘ஆசிய வளர்ச்சி வங்கி’ மற்றும் ‘கிரிசில்’ […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… இளைஞர் மீது பாய்ந்த போக்சோ.!!

ராஜஸ்தானில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பிற்பகலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்தபோது வலி தாங்கமுடியாமல் சிறுமி அலறியுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அப்பகுதியில் வேலைசெய்துகொண்டிருந்த சிறுமியின் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்துள்ளனர். அவர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ரூ 2,00,000,00,00,000 நலத்திட்டம் கட்” மத்திய அரசின் அதிரடி முடிவு ….!!

நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி அரசு கைகழுவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-20 நிதியாண்டில் ரூ. 24 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மொத்தவரி வருவாயாக ஈட்டுவதற்கு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இதில் ஜிஎஸ்டி இழப்பீடு போன்றவை தவிர்த்து, மத்திய அரசுக்கு ரூ. 16 லட் சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, 2019-20 நிதியாண்டுக் […]

Categories
தேசிய செய்திகள்

அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக வேறு காவல் ஆணையர்.!!

ஜனவரி 31ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக தேர்தல் பணிக்காக வேறு காவல் ஆணையரை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. டெல்லி மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரை தேர்தல் பணிக்காக நியமனம் செய்கிறது. இந்த நிலையில், டெல்லி பெருநகர காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் வரும் 31ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி, அமித்ஷாவால் நாடு ஆபத்தில் உள்ளது… சிவசேனா எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் நாடு ஆபத்தில் உள்ளதாக, சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அதுநடந்து கொண்டு இருக்கிறது.நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முகமூடி அணிந்துஇருந்தனர். அதேபோலத் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஈரான் வான்வெளியில் ஏர் இந்தியா பறக்காது!

அரசு நிறுவனமான ஏர் இந்தியா, ஈரான் வான்வெளியில் தற்காலிகமாக பறக்காது என்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உட்சபட்ச போர் பதற்றம் நிலவிவருவதால், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும் விமான குழுவின் பாதுகாப்பும்தான் முக்கியம். தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால், ஏர் இந்தியா விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்காலிகமாக ஈரானிய […]

Categories
தேசிய செய்திகள்

”எல்லாம் உங்க ஆதரவோடு நடந்த கொடூரம்” புது குண்டை தூக்கிப் போட்ட சித்தராமைய்யா …!!

டெல்லி ஜே.என்.யு.வில் நடைபெற்ற தாக்குதல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ஒன்று என சித்தராமைய்யா குற்றஞ்சாட்டினார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்திருந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், “அண்மையில் ஜே.என்.யு.வில் நடத்தப்பட்ட தாக்குதல் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒன்று. குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு எதிராகவே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

”அமெரிக்காவை வச்சு செய்யுங்க” இந்திய அரசே உடனே செய்யுங்க …..!!

ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், “அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 40,000 கொடுங்க… குழந்தையை வாங்கி கிட்டு போங்க… மருத்துவர் மீது பெற்றோர் பரபரப்பு புகார்!

மருத்துவ கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தாததால் குழந்தையை கொடுக்க மருத்துவர் மறுப்பதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பாத் நகரிலுள்ள ‘உஷா நர்சிங் ஹோம்’ என்ற மருத்துமனையில் 2018ஆம் ஆண்டு ஷிகா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அப்போது மருத்துவச் செலவு ரூ. 40 ஆயிரம் செலுத்த பெற்றோர்களிடம் பணம் இல்லாததால் மருத்துவர் குழந்தை தர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஷிகா கூறுகையில், “செப்டம்பர் 2018ஆம் ஆண்டு எனக்கு ஆண் குழந்தை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதி போராட்டம்: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக ஜனவரி 30ஆம் தேதி மாபெரும் அமைதி போராட்டத்தை நடத்தவிருப்பதாக ஐக்கிய இஸ்லாமிய நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. ஐக்கிய இஸ்லாமிய நடவடிக்கை குழு சார்பில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் அகமத் கான், அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் தலைவரும் ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வரும் 30ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : போர் பதற்றம்…. ஈரான், ஈராக், செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்.!!

ஈரான், ஈராக், வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க மேற்கொண்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், ஈராக்கில் அமைந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை- மத்திய அரசு

புதுடெல்லி: நாளை நடைபெறவுள்ள பாரத் பந்தில் பங்கேற்கக் கூடாது என பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நாளை பொது அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்திவரும் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும், இந்த பொது அடைப்பில், சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள பாரத் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவை விற்க இறுதி வரைவு தயார்

பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கான இறுதி வரைவறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள், விற்பனை ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என அரசு சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: தூக்கு தேதி அறிவிப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், “இவ்வழக்கு குறித்த எந்த மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேல் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ், பாஜக மாணவர் அமைப்புகளுக்கிடையே மோதல்!

ஜே.என்.யூ. தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஆகியவைக்கு இடையே குஜராத்தில் மோதல் வெடித்துள்ளது. ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்த ரயில் நிலையம்.!!

வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, அதற்கு பதில் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியன் ரயில்வே அதன் ரயில்களிலும் நடைமேடைகளிலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு பதில் பானைகள், கண்ணாடிகள், தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பானை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி கீழ் இயங்கும் கடைகள், […]

Categories
தேசிய செய்திகள்

பேரழிவு சேதத்திற்கு நிவாரணம்: 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி ஒதுக்கீடு!

உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பல்வேறு பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ.5,908.56 கோடியை வழங்க ஒப்புதல் அளித்தது. அதில், அஸ்ஸாமுக்கு ரூ.616.63 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகன் , மருமகள் கைது …. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன சிதம்பரம் ….!!

நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். 2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும்  வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு ….!!

மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜெய்சுகின் என்பவர்தான் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதற்கு மூல மனுதாரராக இருந்தார்.அவர்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சட்ட போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தார். இவர் தற்போது தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்து இருக்கிறார். உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது  இது […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : JNU மாணவர் சங்க தலைவி மீது வழக்கு பதிவு …..!!

JNU பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லி JNU பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியினுள் நுழைந்த கும்பல் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாக தாக்கினார். கொடூர ஆயுதங்களோடு நுழைந்து மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP தான் காரணம் என்று ஒரு தரப்பினரும் , இடதுசாரி மாணவர் அமைப்புதான் […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யு. விவகாரம் எதிரொலி: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அம்மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஹைதராபாத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகமூடி அணிந்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இடதுசாரி மாணவ அமைப்பச் சேர்ந்த பலரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், மவுலான ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஒஸ்மானிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பல்கலைக்கழகத்தைச் […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் மோடி திடீர் ஆலோசனை

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். வரும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல், அதானிக் குழுமத் தலைவர் கவுதம் அதானி, […]

Categories
தேசிய செய்திகள்

JNU மாணவர்களை தாக்கியது நங்கள் தான்…. இன்னும் தாக்குவோம் – கொக்கரிக்கும் இந்து அமைப்பு ..!!

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியது தாங்கள்தான் என்று இந்து ரக்‌ஷா தல் என்ற இந்து அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் பருவநிலை (செமஸ்டர்) தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்த முகமூடி கும்பல் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், பேராசிரியர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் சர்வதேச சூதாட்ட தரகர் கைது!

கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் பந்தய மோசடி மற்றும் ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக சர்வதேச சூதாட்ட தரகர் ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். கே.பி.எல் சூதாட்ட மோசடி செய்த ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் இதை பற்றி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் விமான நிலையாளங்களில் ஜிதின் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் சர்குலர் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை அவர் நெதர்லாந்தில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கு: குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி, உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய பருவநிலைத் தேர்வுக்காக ஜேஎன்யு மாணவர்கள் தங்களது விவரங்களைப் பல்கலைக்கழக இணைதளத்தில் பதிவிடுவதைத் தடுக்கும் விதமாக, ஜனவரி 3ஆம் தேதி குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இணையதள மையத்துக்குள் புகுந்து வைஃபை கருவியைச் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கும், இன்னொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அது கை கலப்பில் முடிந்துள்ளது. வைஃபை கருவிகளைச் செயலிழக்கச் […]

Categories
தேசிய செய்திகள்

‘மூழ்கும் பொருளாதாரம், தவிக்கும் அரசாங்கம்’: ப.சிதம்பரம் கவலை

டெல்லி: இந்தியப் பொருளாதாரம் தினந்தோறும் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், தடுக்கும் வழி தெரியாமல் நரேந்திர மோடி அரசாங்கம் தவிக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் திங்கட்கிழமை கூறியதாவது: அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த உயர்வால் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும். 1991ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தில் நடந்த கடும் சரிவுடன் தற்போது அதிக […]

Categories
தேசிய செய்திகள்

ஊழல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: நரேந்திர மோடி அதிரடி 

டெல்லி: ஊழல் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும், இதனை பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) தவறாக புரிந்துக் கொள்ள கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் நரேந்திர மோடி, ”ஊழல், ஒழுக்கமின்மை நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பெருநிறுவனங்கள் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது” எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, “சட்டம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன்’ – மம்தா ஆவேசம்!

ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன் என ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் விடுதிகள், வரவேற்பறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் தேதியை அறிவித்தார் சுனில் அரோரா.!

டெல்லி சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.   70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி பேரவையின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுனில் அரோரா பேசியதாவது, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யூ. பல்கலைக்கழக வன்முறை… 4 பேர் கைது.!

ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மாணவர்கள் விடுதிகள், வரவேற்பு அறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து உடைத்தது. இதில், […]

Categories
தேசிய செய்திகள்

சி.ஏ.ஏ-வில் இஸ்லாமியர்களை நீக்கியது தவறு – மத்திய அமைச்சரிடம் நேரடி எதிர்ப்பை தெரிவித்த கேரள எழுத்தாளர்.!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்துள்ளதில் தனக்கு உடன்பாடில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேரள எழுத்தாளர் ஜார்ஜ் ஓனக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், பொதுமக்கள், எதிர்கட்சிகள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை பாஜக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யூ. தாக்குதல்: பின்புலம் என்ன?

ஜே.என்.யூ. பல்கலைக்கழக்கத்தில் மாணவர்கள் மீது முகமூடி கும்பல் நடத்திய வன்முறைத் தாக்குதலின் பின்புலம் குறித்து பார்ப்போம். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் பருவநிலைத் (செமஸ்டர்) தேர்வுப் பதிவை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்து அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல்: பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

பாகிஸ்தானிலுள்ள சீக்கிய குருத்வாரா மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஆகவே அனைத்துக் கட்சி சீக்கிய குழுவினரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் எனக் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினரான பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் நிலை பரிதாபமாக உள்ளது. குருநானக் […]

Categories

Tech |