Categories
தேசிய செய்திகள்

மரண தண்டனை கெடு – உச்சநீதிமன்றத்தில் மனு….!!!

 நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்க பட்ட  நான்கு குற்றவாளிகள் மீண்டும் மேல்முறையீடு, செய்து இருப்பதால், அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேல்முறையீடுகள் காரணமாக தண்டனை ஒத்திவைக்க படுவதை தவிர்க்க புதிய விதிகளை வகுக்கும்படி,  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்த குற்றவாளிகள் விண்ணப்பிக்க ஏழு நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். என உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. […]

Categories
கோவில்கள் தேசிய செய்திகள்

ராமர் பாலம்… வரலாற்று சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கு….மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

இந்தியா, இலங்கை  இடையே அமைந்துள்ள ராமர் பாலம்,  பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பாக, நிலைப்பாட்டை தெளிவு படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் சேது சமுத்திர கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது இந்து மதத்தின்  அடையாளம் என்பதால் பண்டைய கால வரலாற்று சின்னமாக அறிவிக்க […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

2020 பட்ஜெட் – எதிர்பார்ப்புகள் என்ன? சிறப்பு தொகுப்பு …!!

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட்க்கான எதிர்பார்ப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை உள்ளதால் அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு உள்ளது. முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்றும் , உள்கட்டமைப்பில் அதிக […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பின்…. ”பொது விடுமுறை தினம்”… ஜார்கண்ட் அரசு அறிவிப்பு ..!!

விடுமுறை தின பட்டியலில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜார்கண்ட்  மாநில அரசு அறிவித்தது . ஜார்கண்ட் மாநிலத்தில் நேதாஜி பிறந்த நாளை கடந்த 2014ஆம் ஆண்டு வரை விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் இந்த தினம் பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரான்சில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் …..!!

வருகின்ற பிப்ரவரியின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கின்றார். உலகின் தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கீழ் நோக்கு பார்வையில் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் இந்திய பொருளாதாரமானது  3.5% வளர்ச்சியை மட்டும்தான் அடைந்துள்ளது என்று அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.  காலகட்டத்தில் தான் நிதியமைச்சர் நீர்மலாசீத்தராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இதனால் நாடே உற்று நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றது. இந்திய பொருளாதாரம், இந்திய வணிகம் என அனைத்து சேவைகளும் இந்த பட்ஜெட்டை […]

Categories
தேசிய செய்திகள்

பத்து உயிரை காப்பாற்றிய சிறுமி – துணிச்சலான வீர தீர விருது

மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர் பத்து பேரின் உயிரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் பரேல் கிரிஸ்டல் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்ட ஜென் சடவர்டே என்ற 12 வயது சிறுமி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பிற்குள்  சென்று 10 பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரள இளைஞர்களிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது!

கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு, நால்வரும் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையங்களில் 10 ஆயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் சோதனை..!!

இந்திய விமான நிலையங்களில் சுமார் பத்தாயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக செயலர் ப்ரீத்தி சூடான் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலர் ப்ரீத்தி சூடான் கூறும்போது, “இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் 43 விமானங்களில் வந்த ஒன்பதாயிரத்து 156 பயணிகளுக்கு இதுவரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக, காங்கிரஸ்சுக்கு….. ”தமிழர் என்றாலே கிள்ளுக்கீரை தான்” …. வேல்முருகன் …!!

7 பேர் விடுதலையில் ஆளும் பாஜகவும் , ஆண்ட காங்கிராஸ்ஸும் அரசியல் செய்வதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுங்கியில் , மத்தியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் , பிஜேபி க்கு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளுக்கீரை . 7 பேர் விடுதலை , பரோல் விடுப்பு என தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி  நீதிமன்றம் தான் வழங்குகின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிரிவு 161ஐ  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சவாலுக்கு நாங்க ரெடி – நீங்க ரெடியா…? அமிஷா நோக்கி பாயும் தலைவர்கள் ..!!

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடும்பத்தின் மூத்த பிள்ளைபோல் வேலை செய்தேன் – கெஜ்ரிவால்

வீட்டிலுள்ள மூத்த மகனைப்போலவே வேலை செய்தேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சியினரும் சுறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இன்று பத்லி தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடையே பேசியபோது,”கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தோம். குடிநீரையும், மின்சாரத்தையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் அல்வா அல்ல…… காரமான மிளகாய் ….. பாஜகவை விளாசிய ஓவைசி …!!

நான் இனிப்பான அல்வா அல்ல. காரமான சிவப்பு மிளகாய் என்று பாஜகவை கண்டித்து மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி  பேசியுள்ளார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ கிடையாது. […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகள் நிச்சயம் இருக்கும்!

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிச்சயம் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தேவையான அறிவிப்புகள் இருக்கும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முன்பு கணித்ததைவிட தற்போது குறைவாக(4.8) இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரகாஷ் ஜவடேகர், “வரும் பிப்ரவரி ஒன்றாம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி முதலமைச்சருக்கு கருப்புக்கொடி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற பேரணியில் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்கிழமை (ஜனவரி 21), புது டெல்லி தொகுதியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், இன்று மட்டும் இரண்டு பிரமாண்ட பேரணிகளில் பங்கேற்றார். முதல் பேரணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அல்வா என்ற சொல் எங்கிருந்தது வந்தது? பாஜகவுக்கு ஓவைசி கேள்வி

பொதுப் பட்ஜெட் (நாட்டின் வரவு-செலவு திட்டம்) கூட்டத் தொடருக்கு முன்னதாக நடக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு குறித்து அசாதுதீன் ஓவைசி கேள்வியெழுப்பினார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணி…. 30-ஆம் தேதி வயநாடு செல்கிறார் ராகுல்..!!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொள்வதற்கு  காங். கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 30ஆம் தேதி வயநாடு செல்கிறார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்  உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட கட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்?…. வைரலாகும் மோடியின் மனைவி!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி போராட்டத்தில்  கலந்து கொண்டதாக புகைப்படம்  வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வைரல் போட்டோவில் பெண்களுடன் அமர்ந்து மொத்தமாக அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பெண் சிட்டி ரோபோ” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்….. இஸ்ரோ சிவன் பேட்டி….!!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள ரோபோவை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.  விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் ககன்யான். இதற்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கிவிட்டது. ஏற்கனவே விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் இதுவரை செயல்படுத்தியது இல்லை. எனவே அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஆளில்லா இயந்திரத்தை வைத்து சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

2 பால் பாக்கெட்டுக்களால்….. 2 காவலர்கள் பணியிட மாற்றம்…. நொய்டாவில் சிரிப்பூட்டும் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2 பால் பாக்கெட்டுகளை காவல்துறையினர்   திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும்  பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில்  உள்ள கடை ஒன்றில் வெளியே கடந்த 19ம் தேதி இரவு கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்டுகள் ட்ரேவில்  அடுக்கி கடை வெளியில் வைக்கப்பட்டது. அப்போது ரோந்து வாகனத்தில் அங்கு வந்த இரண்டு காவல்துறை  அதிகாரிகளில் ஒருவர் மட்டும் கீழே இறங்கி வந்து, இரண்டு பால் […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழி இல்லா துர்க்கை கோயில்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவை நெகிழி இல்லா நகரமாக மாற்றும் நோக்கில், அங்கு பிரசித்தி பெற்ற கனக துர்க்கை கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் நெகிழிக்கு தடை விதித்துள்ளது. கிருஷ்ணா நதி கரையோரத்தில் உள்ள இந்திரகிலாட்ரி மலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற துர்க்கை அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர். அவர்கள் கோயிலுக்குள் நெகிழியை கொண்டுவரக்கூடாது என கோயில் நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கோயில் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது” – ராஜ்நாத் சிங்

இந்திய பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்கிடம் சீன ராணுவத்தினரால் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக நாட்டை ஒட்டி எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து வருவது குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்தவர், எல்லையில் பிரச்சினை ஏற்பட்டால் பாதுகாப்பு படைவீரர்கள் அதை கவனித்துக் கொள்வார்கள் என்றும் ஆதலால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 10 வயது […]

Categories
தேசிய செய்திகள்

எங்கு இருக்கிறார் நித்தி ? ”ப்ளு கார்னர் நோட்டீஸ்” களமிறங்கிய சர்வதேச போலீஸ் …!!

தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறிய சர்வதேச போலீசார் ப்ளு கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக்கொண்டு ஆசிரமம் நடத்திவந்தவர் நித்யானந்தா. இவர் மீது பாலியல் வழக்கு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. இதற்கிடையில் அகமதாபாத் ஆசிரமத்தில் இரண்டு சிறுமிகள் மாயமானார்கள்.இதுதொடர்பாக அச்சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை தேடிவந்தனர். இந்நிலையில் நித்யானந்தா ஈகுவடார் அருகில் கைலாசம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

தூங்க விடாமல்….. ”பாலியல் வன்புணர்வு”….சிக்கிய டைரியால் அதிர்ச்சி …!!

பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது தொடர்பாக சிக்கிய டைரியை (குறிப்பேடு) வைத்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் 14 பேர் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்த மாணவன் சுதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். மாணவன் தற்கொலை இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சுதீப் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

“ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு”….. தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியில் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், புது வழியில்  தெரிவிக்கும்  முயற்சி தொடங்கியிருக்கிறது. ஆரம்பிய செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிர்வாகக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும,  முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக ரிசர்வ்  வங்கி தெரிவித்துள்ளது. இந்த முயற்சி ஆரம்பமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சண்டிகரில் நடைபெற்ற இயக்குனர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை […]

Categories
கோவில்கள் தேசிய செய்திகள்

“சபரிமலை சீசனில் ரூ.263 கோடி வருமானம் – தேவஸ்தான போர்டு” ….அறிவிப்பு…!!!

 சபரிமலை தரிசனத்தில் கிடைத்த வருமானம், மண்டல மற்றும் மகரவிளக்கு  பூஜை தரிசனத்தின்  போது  சுமார் 263 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த வருமானத்தை விட இது 95 கோடியே 35 லட்சம் அதிகமாகும். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை நேற்று அதிகாலையில் சாத்தப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

“பாக். புதிய முகாம்” 700க்கும் மேற்பட்டோருக்கு தீவிரவாத பயிற்சி….. இந்திய உளவுத்துறை தகவல்….!!

பாகிஸ்தானில் பயங்கரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க புதியதாக ஏராளமானவர்கள் பயிற்சி முகாம்கள் கட்டப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளனர்.  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை இந்திய உளவு அமைப்புகள் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதிகளில் புதிதாக ஏராளமான முகாம்களை ஏராளமான நவீன வசதிகளுடன் பாகிஸ்தான் கட்டி இருப்பதையும், ஒவ்வொரு முகாம்களிலும் 700 பேர் வரை பயிற்சி பெற முடியும் என்பதையும் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

6 கிமீ….. நடுகாட்டில் கட்டில் பயணம்….. தாய்..சேய்… உயிர்களை காப்பாற்றிய CRPF வீரர்கள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய அரசு பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.  சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் மத்திய அரசு பாதுகாப்பு படையின் 85 ஆவது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டனர். அப்போது கிராமத்தின் அருகே மருத்துவமனையோ வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்தில் வெடிகுண்டு….. கருப்பு பை…. தொப்பி போட்ட நபர்….. காவல்நிலையத்தில் சரண்….!!

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர்  காவல்நிலையத்தில்  சரண் அடைந்தார்.  கடந்த திங்கட்கிழமை மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற பை ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆளில்லாத மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கபட்டன. விமான நிலைய சிசிடிவி காட்சிகளின்படி ஆட்டோவில் வந்து இறங்கிய தொப்பி அணிந்த நபர் கருப்பு பையை வைத்து விட்டு  சென்றது […]

Categories
தேசிய செய்திகள்

இனி கள்ள ஒட்டுக்கு குட்பை – வாக்காளர்களின் ஃபேஸ் ஸ்கேன் செய்யும் தெலுங்கானா!

 மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்த பிறகே ஒட்டு போட வைக்கும் சோதனை முயற்சியை தெலங்கானா தேர்தல் அலுவலர்கள் அறிமுகம் செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்த பிறகே ஒட்டு போடவைக்கும் முறையை முதல்முறையாக தெலுங்கானா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தேர்தல் அலுவலர்கள் செல்போன் செயலி மூலம் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்கின்றனர். அடுத்த நொடியே, இந்த வாக்கு சாவடியில் ஒட்டு உள்ளதா, ஏற்கனவே ஒட்டு போட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜிர்வாலை எதிர்கொள்ள பாஜகவின் புதிய ஆயுதம்!

நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை அறிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இத்தேர்தலில், 70 தொகுதிகளிலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து போட்டியிடவுள்ளன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக டெல்லி மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி, டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

பப்ஜி’ கேம் – மனநலம் பாதித்த இளைஞர்!

விஜயபுரா மாவட்டத்தில் ‘பப்ஜி’ கேமின் மீதுள்ள மோகத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகூலி அகாசி பகுதியில் மனநலம் பாதித்த இளைஞர் ஒருவர், சாலையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்துள்ளார். அவர், பப்ஜி கேமில் விளையாடுவது போல் சாலையில் வரும் வாகனங்களின் மீது கற்களை எறிவது, தூப்பாக்கியை கையில் வைத்திருப்பது, குதிப்பது, தாவுவது என்று பல்வேறு விநோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை வைத்து , பப்ஜி கேம் மீதுள்ள மோகத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ திரும்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா திட்டவட்டம்.!

போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக இன்று பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் பாஜகவின் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர்  ஆட்சியில் இருந்தவரை ராமர் கோவிலை கட்டுவதற்கு தங்களால் முடிந்தவரை பல்வேறு வழிமுறைகள் மூலமாக காலத்தை கடத்திவந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் அயோத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஏலத்துக்கு வரும் நீரவ் மோடியின் சொத்துகள்..!!

வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் சொத்துகளை ஏலத்தில் விற்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பின்னர், அமலாக்கத் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல்….. ஒரே நாடு…. ஒரே ரேஷன் அமுல்….. உணவுத்துறை அமைச்சர் தகவல்….!!

ஜூன் 1 முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்துள்ளது. ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அன்றாட கூலிகள் நாட்டின் எந்த இடத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் இந்த திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கொடூரனை அடித்து உதைத்த பொதுமக்கள்..!!

பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண். காவல் துறைக்குச் செல்லும் முன்னரே பொதுமக்கள் குற்றவாளியை சரமாரியாகத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்த நபரை பெண் காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து சுனிதா தாகா என்னும் காவல் அலுவலர் கூறுகையில், ஹரியானா மாநிலத்தில் பம்மி சௌக் பகுதியில் வசிக்கும் பவன் என்னும் நபர் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

‘விலங்குகள்போல குழந்தைகள் பெற்றுக்கொள்வது நாட்டுக்கு தீங்கு’!

விலங்குகளைப்போல் குழந்தைகளைப் பெற்றெடுப்பது நாட்டுக்கு தீங்கானது என்று உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் குறித்து யோசனை கூறியதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி இதுகுறித்தான தனது கருத்தினை பகிர்ந்தார். அதாவது விலங்குகளைப்போல் மக்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டிற்கு தீங்கானது என்று வாசிம் ரிஸ்வி கூறினார். சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழி ஒழிப்பில் ஆந்திர மாணவர்கள் சாதனை!

நெகிழிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து ஆந்திர மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த நவீன காலகட்டத்தில் மாசுவின் மறுவுருவமாக நெகிழி பார்க்கப்படுகிறது. ஆனால், அதனைச் சரியாகக் கையாண்டால், அது அதிசயமாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கே.பி.என். கல்லூரியில் பயிலும் மூன்று முதுகலை மாணவர்கள் நெகிழிக் கழிவுகளை கச்சா எண்ணெய்யாக மாற்றிவருகின்றனர். அவர்களின் முயற்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பி.வி.சி. நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளிப்படும் நீராவிகளிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றனர். 2 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதன் முறையாக…. மூன்று தலைநகரங்கள்…. புதுமை படுத்தியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி ….

ஆந்திராவில்,  தனி தெலுங்கானா போராட்டங்களுக்கு பிறகு, மிக பெரிய போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் பார்த்து வருகிறது, ஆந்திர மாநிலம். மாநிலமாக இருந்தாலும்  சரி நாடாக இருந்தாலும் சரி, தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தும்  போராட்டங்களை, பொதுமக்கள் தலைநகரம் நடத்துவதுதான் வாடிக்கை. ஆனால் ஆந்திராவில்  எது தலைநகர் என்பதை நிர்ணயப்பதற்காக  போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள்  மட்டுமின்றி விவசாயிகளும்,  பெண்களும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் பேரணிகளை நடத்தி வருவதால்,  மாநிலமே பரபரத்து கொண்டிருக்கிறது. கடந்த 2014 ம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள் மதுரை

“குடியரசு தினம்” மதுரை விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு….. பார்வையாளர்களுக்கு தடை…!!

பெங்களூர்  விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று பெங்களூர் விமான நிலையத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பில் இருந்த மதுரை விமான நிலையத்திற்கு  7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“கொரோனா வைரஸ்”…. மிரட்டுகிறதா…. சீனாவை…தமிழகத்திலும் பரவும் அபாயம் ..

சீனாவின் முக்கிய நகரங்களில் கொரோன வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. சீன  தலைநகரம் பெல்ஜியம் மற்றும்  வர்த்தக நகரமான ஷாங்காய்  உள்ளிட்ட இடங்களில் கொரோனோ  வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை  இந்த நோயால் 4 பேர்   உயிரிழந்து விட்டனர். மேலும் சுமார் 300  பேர் கொரோனா  வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனோ  வைரஸ் காய்ச்சல் பரவும் ஆபத்து  உள்ளததால்,  கண்காணிப்பு கேமரா  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பேரறிவாளன் விடுதலை வழக்கு: அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தாமதமாவது தொடர்பாக இன்னும் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார். பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, ஒரு மாதம் பரோல் வழங்கிய நீதிமன்றம் பின்னர் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்தது. பரோல் முடிந்து ஜனவரி 12ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார். இதனிடையே, தன் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சாய்பாபா பிறப்பிடம் பாத்ரி என அறிவிக்கப்படாது – உத்தவ் உறுதி

சாய்பாபாவின் பிறப்பிடமாக பாத்ரி கிராமம் அறிவிக்கப்படாது என உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளதாக சிவ சேனா மூத்தத் தலைவர் கம்லாகார் கோதே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஜனவரி 9ஆம் தேதி அமைச்சரவை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சாய்பாபாவின் பிறப்பிடமாக பாத்ரி கிராமத்தை அறிவித்து அதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சாய்பாபாவின் பிறப்பிடம் ஷிரடிதான் எனக் கூறி அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, காலவரையற்ற பந்த்தையும் அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், சிவ […]

Categories
தேசிய செய்திகள்

திப்பு சுல்தான் வரலாறு குறித்த சரச்சை – அமைச்சர் விளக்கம்..!!

 பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கர்நாடக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திடமாகப் போராடியவர் திப்பு சுல்தான். இவரின் பிறந்தநாளை அரசு விழாவாக காங்கிரஸ் அரசு கொண்டாடியது. ஆனால், பாஜகவோ திப்பு சுல்தான் இந்துக்களைக் கொடுமைப்படுத்தியவர் என்றும் அவர் ஒரு தீவிரவாதி எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தது. இது பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும் பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் வரலாற்றை நீக்குவோம் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அந்தஸ்து பெற்ற நாள்… வாழ்த்து தெரிவித்த மோடி!

மாநில அந்தஸ்து பெற்ற நாளை கொண்டாடும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1972ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்று தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அம்மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அதன்படி விளையாட்டு, இசையில் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

திரிபுரா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

ஏடிஎம் ஹேக் செய்த வழக்கின் விசாரணைக் கைதி சுசந்த கோஷின் மரணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காததால் திரிபுராவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை திரிபுரா சட்டப்பேரவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஏடிஎம் இயந்திரத்தை ஹேக் செய்த வழக்கின் விசாரணைக் கைதி சுசந்த கோஷின் மரணம் குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அச்சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் கட்சி குறித்து பாத்து பேசுங்க – ஓவைசி காட்டம்.!

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.வுக்கு அக்பருதீன் ஒவைசி பதிலடி தந்துள்ளார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான தலசானி ஸ்ரீநிவாஸ் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்தார். ஹைதராபாத்தில் மட்டும்தான் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இயங்கிவருகிறது என அவர் தெரிவித்திருந்தார். இதற்கு அசாதுதீன் ஓவைசியின் சகோதரர் அக்பருதீன் ஓவைசி பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து அவர், உங்கள் நாவை அடக்க வேண்டும். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அப்படி பேசாதீங்க…. ”வாபஸ் வாங்குங்க C.M”…. மம்தாவிடம் ஆளுநர் சரண்டர் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா தெரிவித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். அக்கருத்துக்கு அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று இது குறித்துப் […]

Categories
தேசிய செய்திகள்

அமலுக்கு வரும் ‘ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு’ மத்திய அமைச்சர் உறுதி …!!

ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு திட்டம்’ ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் ‘ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு திட்டம்’ அமலுக்கு வரும். இந்த திட்டம் மூலம், ஒரு குடும்ப அட்டை மூலம் தங்களின் பயன்களை பெறலாம். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

CAA, NRC, NPR உள்ளிட்டவை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை’ – திக் விஜய்சிங்

CAA, NRC, NPR உள்ளிட்ட சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். ஒரு மாத காலத்திற்கும் மேலாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராடிவரும் போராட்டக்காரர்களைக் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்க்கிறோம். இச்சட்டங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஊழலை ஒழிப்பதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால்

ஊழலை ஒழித்து மாநிலத்தை முன்னோக்கி அழைத்து செல்வதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. காலதாமதமாக சென்ற காரணத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனுது வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் […]

Categories

Tech |