Categories
தேசிய செய்திகள்

இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

நரேந்திர மோடி அரசில் நிதியமைச்சராக அங்கம் வகிக்கும் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்திக்கு பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சீனாவில் இருந்து 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் ….!!

சீனாவில் சிக்கி தவித்த 324 பேரும் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இமய மலைப்குதியில் முதல் பயோடீசல் ராணுவ விமானம்!

இரு இன்ஜின்களும் பயோடீசலில் இயங்கும் முதல் ஏ.என். 32 ராணுவ விமானம் காஷ்மீரின் லே விமான தளத்திலிருந்து புறப்பட்டது. இந்திய விமானப் படை சமீப காலங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறது. இந்திய விமானப் படையின் மற்றொரு சாதனையாக இன்று பயோடீசலில் இயங்கும் ஏ.என். 32 ரக ராணுவ விமானம், உலகில் மிக உயரத்தில் இருக்கும் விமான தளமான காஷ்மீரின் குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான தளத்திலிருந்து புறப்பட்டது. கடல்மட்டத்திலிருந்து லே பகுதி சுமார் 10,682 அடி உயரத்தில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வளர்ச்சி சார்ந்த பட்ஜெட், பொருளாதார ஆய்வறிக்கை சமிக்ஞை!

பொருளாதார ஆய்வுகளின் முன்னறிவிப்பு சமிக்ஞைகளை பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டு பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக நேற்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது. அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் 754இல் […]

Categories
தேசிய செய்திகள்

நிதி அமைச்சர்களில் அதிகமுறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவர்கள் யார்?

இந்திய நிதி அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய் பத்து முறையும், ப. சிதம்பரம் ஒன்பது முறையும், எட்டு முறை பிரணாப் முகர்ஜியும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்து இருக்கின்றனர். இந்திய அரசின் நிதி அமைச்சகம் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் துறையாகும். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதித்துறை அமைச்சராக ஆர். கே. சண்முகம் பணியாற்றினார். தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். கே. சண்முகம் […]

Categories
தேசிய செய்திகள்

வளர்ச்சி சார்ந்த பட்ஜெட், பொருளாதார ஆய்வறிக்கை சமிக்ஞை!

ஹைதராபாத்: பொருளாதார ஆய்வுகளின் முன்னறிவிப்பு சமிக்ஞைகளை பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டு பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது. அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஜாமியா துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு 14 நாள்கள் காவல்!

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. மானிய விலையில் வெங்காயம்….. கிலோ ரூ23 தான்…. மத்திய அரசு தகவல்….!!

இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை ரூபாய் 22 முதல் 23 வரை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் விலையை கட்டுப்படுத்த அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. அதன்படி  எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் ஏராளமான வெங்காயம் இன்னும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் தேக்கம் அடைந்து இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாள்….. 78,550 பேர் விருப்ப ஓய்வு…. கலங்கி நிற்கும் கனெக்ட்டிங் இந்தியா…

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வு பெறுவதால் சேவையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என அந்நிறுவன தலைமை பொது மேலாளர் சந்தோசம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். இது குறித்துப் பேசிய தலைமை மேலாளர் சந்தோசம், 78,550 பேர் இன்று விருப்பு ஓய்வு பெறுவதாகவும், இதில் சென்னை வட்டத்தில் மட்டும் 2,699 பேர் விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சென்னையில் 40 எக்ஸ்சேஞ்ச் அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்குதண்டனை கிடையாது..!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா : தூக்கு தண்டனை ஒத்திவைப்பு ….!!

கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 குற்றவாளிகளில் 32 வயதான முகேஷ் குமார் சிங் தூக்கு தண்டனையில் இருந்து கருணை காட்ட கோரிய மனுவை ஜனாதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பைக்…. சைக்கிள்…. ரூ 2க்கு கோதுமை …. பாஜக தேர்தல் அறிக்கை ..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை  வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக தேர்தல் அறிக்கையில்  பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட இருக்கின்றது. டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘என்ட்ட கேக்காம குணாலுக்குத் தடை விதிச்சிருக்கக் கூடாது’ – இண்டிகோ கேப்டன்..!!

அர்னாபிடம் கேள்வி கேட்ட விவகாரத்தில் தன்னிடம் விளக்கம் கேட்காமல் குணாலுக்குத் தடை விதித்தது தனக்கு வருத்தமளிப்பதாக இண்டிகோ விமான கேப்டன் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். சமூக வலைதளம் முழுவதும் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ராதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். இண்டிகோ விமானத்தில், மூத்தப் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் அவர் நடத்திய உரையாடல்தான் அதற்குக் காரணம். மும்பையிலிருந்து லக்னோவுக்குச் செல்லும் விமானத்தில் அர்னாப்பும் குணாலும் பயணம் செய்துள்ளனர். அப்போது அர்னாபிடம் சில கேள்விகளை முன்வைத்த குணால், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோன… மாநில அமைச்சர் அளித்த விளக்கம்

கேரளாவில் கொரோன  வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நலம் சீராக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “கொரோன வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. ஆனால் அந்த மாணவியிடம் தீவிர அறிகுறிகள் தென்படவில்லை. மாணவியின் உடல் நலம் சீராக தான் இருக்கிறது” ஏதேனும் மருந்து கண்டுபிடிக்க பட்டுள்ளதா என்னும் கேள்விக்கு   ” கொரோன வைரஸ் பாதிப்பை குணப்படுத்த மருந்துகள் எதுவும் கிடையாது. மற்ற வைரஸ் பாதிப்புகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை போலவே […]

Categories
தேசிய செய்திகள்

182 பெண்களின் அந்தரங்க வீடியோ …. மிரட்டி பணம் பறித்த 2 தொழிலதிபர்கள் …. விசாரணையில் பகீர் பின்னணி …!!

மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த 3 பேர்  கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காளத்தில் பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகாமற்றும்  பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகிய இருவரும் நண்பகள் ஆவர். கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை எடுப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதலில்  ஒரு பெண்ணுடன் நட்புடன் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல ஐ.டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திடீர் ராஜினாமா..!!

பிரபல ஐ.டி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து ஆபித் அலி திடீர் ராஜினாமா செய்துள்ளார். பிரபல ஐ.டி நிறுவனமான விப்ரோவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தவர் ஆபித் அலி நீமுச்வாலா (Abidali Z. Neemuchwala). இந்நிலையில் இவர் திடீரென பதவி விலகியுள்ளார். இவர் தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் காரணமாக பதவி விலகுவதாக முடிவெடுத்துள்ளார் என்றும், புதிய நபர் பொறுப்பேற்கும் வரை ஆபித் அலி பதவிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: ஆட்டோமொபைல் செக்டாரின் தேவைகள் என்ன…?

பட்ஜெட் 2020 ஆட்டோமொபைல் செக்டாரின் தேவைகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019ஆம் ஆண்டு ஆட்டோமொபைல்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் சுமார் 50 விழுக்காடு பங்களிப்பை தரும் துறையாக ஆட்டோமொபைல் துறை விளங்குகிறது. இந்த சரிவு காரணமாக நாட்டில் பலர் வேலை இழந்தனர். பல தொழிற்சாலைகளில் வேலை இல்லாத நாட்களில் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும், கிராமப்புற மக்களின் தேவைகள் குறைந்ததாலே ஆட்டோமொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு…. குற்றவாளியின் திட்டமிட்ட தாக்குதல் ..! பேஸ்புக் பதிவால் வெளிச்சம் ..!! 

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்கு வெளியே மாணவர்கள்  நடத்திய போராட்டத்தின் போது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டார் இதில்ஒருவர் காயம் அடைந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. CAA  திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் என்பதால், ராஜ்காட்டில் அமைந்துள்ள  காந்தியின் நினைவிடத்திற்கு  அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர்.  பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜகவில் சாய்னாக்கு பதவி” – தலைவர்கள் கருத்து …!!

சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக நிச்சயம் வழங்கும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் புதன்கிழமை பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து தெலங்கானாவில் உள்ள பாஜக பிரமுகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மன், ‘சாய்னா போன்ற பிரபலங்கள் பாஜகவில் இணைவது மோடி ஆட்சியின் செயல்திறனை குறிக்கிறது’ என்றார். மேலும், பாஜகவின் ஹைதராபாத் பிரிவு தலைவர் என்.ராமசந்தர், ‘சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக வழங்கும்’ […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”நாடு திரும்புவோர் தனிமைப்படுத்தப்படுவார்கள்” சுகாதாரத்துறை தகவல் …!!

சீனாவில் இருந்து இந்தியா திரும்புவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மருத்துவம் மாநில செய்திகள்

கொடூர ”கொரோன வைரஸ்” தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன ?

உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கொரோன வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.   சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமிநாசினி கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும். சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜாமியா பல்கலை துப்பாக்கிச் சூடு : ப.சிதம்பரம் கண்டனம்..!!

டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மாணவர்கள் நேற்று ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே அங்கே வந்த மர்மநபர் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டுள்ளார். இதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : ”கேரள மாணவி உடல்நிலை சீராக உள்ளது” அமைச்சர் பேட்டி …!!

கொரனா வைரஸ் பாதித்த கேரளா மருத்துவ மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு: சென்னையில் புதிய ஆய்வகம்..!!

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் புதிய ஆய்வகம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வெளியுறவுத்துறை, […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING: இந்திய விமானம் 12.30 மணிக்கு சீனா பயணம் …!!

கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் செல்ல இருக்கின்றது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன் 78,300 ஊழியர்களுக்கு ஓய்வு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வரலாறு காணாத அளவு  ஒரே நாளில் 78,300 பேர் ஓய்வு பெறவுள்ளனர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை மீட்க, இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டத்திற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை டிசம்பர் 3ஆம் தேதி வரை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,300 பேரும், […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஸ்என்எல்: இன்று ஒரே நாளில் 79000பேர் ஓய்வு – தப்பிப் பிழைக்குமா?

இன்று ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள்  விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில்  மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர். 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் , 2010 முதல் தொடர்ந்து நஷ்டத்தைசயே சந்தித்து வருகிறது. இதைதொடர்ந்து எம்டிஎன்எல் நிறுவனமும்  கடந்த  9 ஆண்டுகளாக  நஷ்டத்தில்தான் இயங்கிவந்ததுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இதில் சுமார் 51 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் மகனா? சகோதரானா? பயங்கரவாதியா ? மக்கள் முடிவு செய்வர்கள் – கெஜ்ரிவால்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் ஆபாச வீடியோ கைது லிஸ்டில் வடமாநில இளைஞர்!

சலூன் கடையில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வையாபுரி நகரில் உள்ள சலூன் கடை ஒன்றில் உத்தரப் பிரதேச மாநிலம் கச்சனால் என்ற பகுதியைச் சேர்ந்த நியாஸ் அலி (வயது 23) என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தார். இவர் தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து கரூர் நகர காவல் உதவி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் : பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை ….!!

சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எப்படி அப்படி சொல்லலாம் ? ”பாஜக எம்.பி.யை கைது செய்யுங்க”ஆம் ஆத்மி போராட்டம் …!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜக எம்.பி. வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்தினர். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

திக் திக் கொரனா…. 4 பேருக்கு அறிகுறி …. மாணவிக்கு பாதிப்பு ….. அமைச்சர் உறுதி ….!!

கேரளவில் 4 பேருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் ஒரு மாணவிக்கு கொரனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தகவல் வெளியாகி மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா பாதிப்பு – அமைச்சர் அவசர ஆலோசனை ….!!

திருவனந்தபுரத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு….!!

ஜாமியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கே வந்த மர்மநபர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு மாணவர்கள் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் ? என்ன […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கேரள மாணவனுக்கு கொரோனா”… அதிர்ச்சி தகவல்..!!

சீனாவிலிருந்து கேரளா திரும்பிய  மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.   கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவிலும் கெரானா பாதிப்பு ….!!

சீனாவை தாக்கிய கெரானா வைரஸ் கேரளாவை  மாணவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்ட சபை தேர்தல் : ஆதரவு தெரிவித்த கமல்.. நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்..!!

நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட் செய்ததையடுத்து, தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.   தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்ட சபை தேர்தல் : ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு…!!

டெல்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் ‘திரிணாமுல் காங்கிரஸ்’ கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

‘மோடி 2.0’ அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்: பட்ஜெட் 2020இல் அதைச் செய்யுங்க ஃபர்ஸ்ட்!

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வழங்கியுள்ளார். இந்தியப் பொருளாதாரம் தள்ளாடும் நிலையில், மத்திய அரசு வருவாயை அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்குமா கேள்வி நிலவிவருகிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய சிறப்பு கட்டுரை இதோ… வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ போராட்டத்தில் சர்ச்சை பேச்சு; உ.பி. மருத்துவர் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அலிகர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்ளே வராதீங்க ….. ”அமித்ஷா_க்கு ஸ்கெட்ச்” ஆட்டம் காட்டும் ஆம் ஆத்மி ….!!

அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடிதம் எழுதியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் – காங். வலியுறுத்தல்

வரும் நிடுநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சருமான பிரித்விராஜ் சவான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று பாஜக வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர வேண்டுமெனில் அத்துறையின் ஆண்டு வருமானம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி 2020: ஆம் ஆத்மி மக்களை தவறாக வழிநடத்துகிறது

அனைத்துத் துறைகளிலும் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதால் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக விஜய் கோயல் விமர்சித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் கோயல், “ஆம் ஆத்மி அரசு பொய் கூறிவருகிறது. கல்வி துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது. இதுகுறஇத்து அறிந்துகொள்ள நான் முஸ்தபாபாத்திலுள்ள பள்ளிக்குச் சென்றேன். அவர்கள் கூறியதற்கு மாறாக அது மிக மோசமான நிலையில் இருந்தது. அப்பள்ளியின் நிலைமையை கண்டாலே, ஆம் ஆத்மி கல்வியை முன்னேற்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போரட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 70 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யு-வில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பேருந்துகளும் மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

‘தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சீனாவிலிருந்து வந்த மாணவர்கள்’..!!

சீனாவில் மருத்துவ படிப்பு பயின்ற மாணவர்கள் இருவர் புதுச்சேரி வந்துள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்றாலும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் காய்ச்சல் நோய் சீனாவில் பரவிவருகிறது. தற்போது இந்த வைரஸ் காய்ச்சல் நேபாளத்தில் பரவியதையொட்டி. இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

போக்சோ வழக்கை விரைந்து முடிக்க மாநிலங்களுக்கு உள் துறை அமைச்சர் வலியுறுத்தல்..!!

போக்சோ சட்டத்தின்கீழ் உள்ள வழக்கு விசாரணையை இரண்டு மாத காலங்களுக்குள் முடிக்கமாறு மாநில முதலமைச்சர்களை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுகொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மத்தியப் பிராந்திய கவுன்சிலின் 22ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியப் பிராந்திய கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர், ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் 2 அமைச்சா்கள், தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர். இந்தச் சந்திப்புக்கு உள் துறை அமைச்சர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வருக்கு நன்றி…. ”கடவுள் அவரை ஆசிர்வதிப்பார்”…. பிரசாந்த் கிஷோர்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து தன்னை நீக்கிய முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார். பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்த அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபகாலமாக நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்துவந்தார். இதனிடையே, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்தை எதிர்த்து கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர், […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு அது வேண்டாம்… இத வாங்கிட்டு வாங்க… அலைந்து திரிந்து பரிசளித்த கணவன்… மகிழ்ச்சியின் உச்சத்தில் மனைவி…!!

கேரளாவில் மணப்பெண் கேட்ட அனைத்து  புத்தகங்களையும் வாங்கி கொடுத்து அவரை திருமணம் செய்து கேரள வாலிபர் அசத்தியுள்ளார். இன்றைய காலத்தில் புத்தகம் வசிப்பவர்களை நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் செல்போன் வந்ததிலிருந்து முற்றிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறந்து போனது என்றே சொல்லலாம்.  ஏதோ ஒரு சில பேர் புத்தகம் வாசிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்தநிலையில் கேரளாவில் இந்த ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் இஜாஸ் ஹக்கீம் மற்றும் அஜ்னா நிஜாம் […]

Categories
தேசிய செய்திகள்

கீழே கிடந்த பாட்டில்… “காக்கை செய்த செயல்”… வியப்படைந்த மக்கள்..!!

கீழே கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலை காகம் ஓன்று வாயால் கவ்விச் சென்று, குப்பைத் தொட்டியில், லாவகமாக போடும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் குப்பை மற்றும் நெகிழி பொருட்கள் பறந்து விரிந்து கிடக்கிறது. அதை உபயோகப்படுத்தி விட்டு கண்ட இடங்களில் பலர் தூக்கி போட்டு விட்டு செல்கின்றனர். பலர் குப்பை மற்றும் நெகிழிபொருட்களை குப்பை தொட்டியில் போடாமல் நமக்கு என்ன என்று கடந்து போய் விடுவார்கள். ஆனால் காகம் ஓன்று செய்த செயல் அனைவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு வேலை…. இணையதள விளம்பரங்களை நம்ப வேண்டாம்….. சிபிஐ எச்சரிக்கை…!!

சிபிஐயில் பயிற்சி அளித்து வேலை வாங்கித்தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு நடக்கும் மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சிபிஐ எச்சரித்துள்ளது.  சட்டம், சைபர் தரவு, பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், உள்ளிட்ட பாடங்களில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றை  சிபிஐ நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிஐ பயிற்சி அளித்து வேலையை வாங்கித் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு […]

Categories

Tech |