நாட்டின் வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. டெல்லியில் நேற்று (டிச.27) கடுங்குளிர் நிலவியதோடு, காலை வேளையில் மிகுந்த பனிமூட்டமும் காணப்பட்டது. அத்துடன் டெல்லியில் ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 -7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. இதன் காரணமாக உறைய வைக்கும் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், […]
