Categories
தேசிய செய்திகள்

எல்.ஐ.சி சேவைகளை இனி வாட்ஸ் அப்பிலும் யூஸ் பண்ணலாம்… எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்..!!!!

இந்தியாவில் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமான ஒன்று வாட்ஸ்அப் ஆகும். ஆரம்ப கட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே whatsapp பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் புதிய புதிய வசதிகளை இணைத்து அப்டேட் செய்யப்பட்டது. அதாவது சமீபத்தில் குழுவாக சேர்ந்து கால் பேசும் குரூப் கால் வசதியும், அனுப்பும் செய்திகளை ஒரு தடவை மட்டுமே பார்த்ததும் அழித்துவிடக் கூடிய வசதியும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஒரு முறை மட்டும் தான் மெசேஜை பார்க்க முடியும்…? வாட்ஸ் அப்பின் புதிய அம்சம்… வெளியான தகவல்…!!!!!!

உலகம் முழுவதும் சுமார் 20 கோடி பயனர்களை கொண்டுள்ள  வாட்ஸ் அப் செயலி தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலி ஆகிவிட்டது.  தனது பயனர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள மெட்டா நிறுவனம் அடிக்கடி மேம்பட்ட, புதிய நவீன தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக தனி R&D குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது மற்றொரு புதிய அம்சத்தை whatsapp செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பை பொறுத்தவரை வியூ ஒன்ஸ் எனப்படும் தகவல்களை ஒரு முறை மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிகளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது…? “பெண் குழந்தையின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்”… டெல்லி முதல் மந்திரி பேச்சு…!!!!!

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர்  ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து  டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் “மாணவி மீது ஆசிட்  […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட்  வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் ஆசிட் வீசி  சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….? மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மாணவி   மீது ஆசிட் வீசிய வாலிபரை  போலீசார் தேடி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஒரு  பகுதியில் 17 வயது மாணவி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அருகே அமைந்துள்ள பள்ளிக்கு தனது தங்கையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2  வாலிபர்கள் அவர்  முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர். இதில் அலறி துடித்த அந்த மாணவியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை  பரிசோதித்த மருத்துவர் அதிக  காயங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பீடோ ஸ்பீடு…! 50 நகரங்களில் 5 ஜி சேவை…. எங்கெல்லாம் தெரியுமா…? லிஸ்ட் இதோ….!!!!

இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் , 14 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு  தெரிவித்துள்ளது. இதில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. தமிழகத்தில் சென்னை, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை […]

Categories
தேசிய செய்திகள்

கவர்ச்சியின் உச்சம்….!! தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங் பாடல்…. மத்திய பிரதேச மந்திரி கடும் கண்டனம்….!!!!

பிரபல பாலிவுட் நடிகையின் படத்திற்கு  பலர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவரும் “பதான்” என்ற  திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வெளியாகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரான்சம்வோ் கணினி வைரஸ்: இந்தியா மீது ஏவிவிட்ட சீனா….மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவ..23ம் தேதி இணைய திருடர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் சா்வா்கள் முடங்கியது. இதுகுறித்து மிரட்டி பணம்பறித்தல் மற்றும் இணையதள பயங்கரவாதம் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்ற நவ..25ம் தேதி சைபா் குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலை அடுத்து புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. மத்திய அரசின் சொ்ட்-இன் என்ற இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கைக் குழு, டிஆா்டிஓ, மத்திய புலனாய்வுத் துறை , சிபிஐ, என்ஐஏ […]

Categories
தேசிய செய்திகள்

“விஸ்மயா தற்கொலை வழக்கு”…. தண்டனையை நிறுத்திவைக்க இயலாது…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கேரளா கொல்லத்தை சேர்ந்த 22 வயது விஸ்மயா நாயர் என்ற பெண் சென்ற வருடம் ஜூன் மாதம் 21ஆம் தேதி தன் கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதில் விஸ்மயா வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் அவரது மரணம் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்மயாவை அவரது கணவர் கிரண்குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஜூன் 22ம் தேதி கைதானார். அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…. மூன்றரை மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்…. கோரிக்கை விடுத்த இன்டிகோ ஸ்பைஸ் ஜெட்….!!!!

இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தில்லி மற்றும்  மும்பையில் உள்ள விமான நிலையங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்ய பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். எனவே இனிவரும் காலங்களில் உள்நாட்டுப் பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பும், சர்வதேச அளவில் விமானத்தில் செல்லும் பயணிகள் மூன்றரை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: திருப்பதி பிரசாதம் சாப்பிட்ட பக்தர்… திடீரென போதை மயக்கம்…. பணத்தை சுருட்டிய மோசடி நபர்…. பரபரப்பு…..!!!!

ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் அந்த பக்தருக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாளகஸ்தியிலுள்ள ஒரு லாஜிக்கு அந்த பக்தரை அழைத்துச்சென்ற பெண் ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை வழங்கி இருக்கிறார். அதன்பின் பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த பக்தருக்கு போதை மயக்கம் ஏற்பட்டு உள்ளது. போதை மயக்கத்திலிருந்த அந்த பக்தரிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கப்போகும் ரயில் கட்டணம்?…. பயணிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பேசியபோது “வருகிற காலங்களில் ரயில் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிக்கையை அடுத்து, வருகிற காலங்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று கொரோனா காலத்திற்கு முன் இருந்த மூத்தகுடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகையை, மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மக்களவையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், இப்போது ரயில் வாயிலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் 55% சலுகை அளிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சாதாரண டிக்கெட் எடுத்துட்டு முன்பதிவு பெட்டியில் போகலாமா?…. தெற்கு ரயில்வேயின் சூப்பர் திட்டம்…!!!!

அன் ரிசர்வ் பெட்டியில் பயணிக்க முடியாதவர்கள் முன் பதிவு பெட்டியில் பயணிக்கும் அடிப்படையில் ஒரு திட்டத்தை தெற்கு ரயில்வேயானது நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான். எனினும் பலருக்கும் இதுபற்றி தெரிந்திருக்கவில்லை. அதாவது, டி ரிசர்வ்டு டிக்கெட் திட்டமாகும். இந்த டிக்கெட்டை எடுப்பவர்கள் குறிப்பிட்ட ரயிலின் முன் பதிவு பெட்டியில் அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதே நேரம் முன்பதிவு செய்யாமலேயே இந்த டிக்கெட்டை எடுத்திருப்பவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணம் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு…. இந்த தவறை யாரும் செய்யாதீங்க…. எச்சரிக்கை…..!!!!

வெளிநாட்டிற்கு வேலை செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நேரடி வேலைவாய்ப்பு என்றால் அந்த நிறுவனத்தின் தகவல்களை புலம்பெயர் அதிகாரிகளிடம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை www.meaindia.nic.in, india.gov.in  ஆகிய இணையதளங்களுக்கு சென்று சரி பார்க்கலாம். எந்த ஒரு தகவலையும் உறுதி செய்யாமல் பணம் மற்றும் பாஸ்போர்ட் சான்றிதழ் […]

Categories
தேசிய செய்திகள்

தனிப்பட்ட தகவல்களை நாங்கள் கேட்பதில்லை!…. EPFO விடுத்த முக்கிய எச்சரிக்கை…..!!!!

EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10 ஆம் தேதி வரை…. 144 தடை உத்தரவு அமல்….. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் 25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29 ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று புத்தாண்டை முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை தினங்களை கருதி அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண் ராணுவ அதிகாரிகளின்… பதவி உயர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகியகால பணியில் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். இதனால் தங்களுக்கு நிரந்தரபணி வேண்டும் என அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து இவர்களுக்கு நிரந்தரபணி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தகுதியிருந்தும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை என 34 பெண் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். அதில், இராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுக் குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் பெண்களுக்கு பதவி […]

Categories
தேசிய செய்திகள்

வாலாட்டிய சீனப்படை…. சரியான பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…. மத்திய மந்திரி தகவல்….!!!!

இந்தியாவிற்கும், சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் சென்ற 9-ஆம் தேதியன்று அருணாசலபிரதேசம் தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் சீனா மீண்டும் அடாவடியில் ஈடுபட்டது. அதாவது எல்லைக்குள் ஊடுருவி இதுவரையிலும் இருந்து வந்த நிலைமையை மாற்ற முயற்சித்தது. எனினும் இந்திய படைவீரர்கள் சரியான பதிலடி கொடுத்ததால், சீனப் படை ஓட்டம் எடுத்தது. இம்மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இத்தகவல்களை இந்திய ராணுவ வட்டாரங்கள் நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் நிலையங்களை தனியார் மையமாக்குவதை கைவிட முடிவு”…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தி  நிதி திரட்டும் திட்டத்தை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேக்கு சொந்தமான 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், மலை ரயில் சேவை, ரயில்வே காலனிகள், விளையாட்டு மைதானங்களை பொது தனியார் பங்களிப்பு அல்லது செயல்படுத்துதல், […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 3 வருடங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு… சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 2020-2022-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர் கூறியதாவது, தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இதய நோய், புற்றுநோய், வலிப்பு நோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பாக தொழில்நுட்ப உதவியும், நிதி […]

Categories
தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஊடக விளம்பர செலவு… எவ்வளவு தெரியுமா..? மக்களவையில் அமைச்சர் தாகுர் தகவல்…!!!!!

மக்களவையில் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகுர் ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.168.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விளம்பரங்களுக்காக மத்திய அரசின் செலவினங்கள் பற்றி மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தாகுர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதி ஆண்டில் அச்சு ஊடகங்களில் ரூ.91.96 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதாவது அச்சு […]

Categories
தேசிய செய்திகள்

“என் அம்மாவுக்கு நான் ஒரு துணையை கண்டுபிடித்தேன்”…. மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்….!!!!

மும்பையை சேர்ந்த ஆர்த்திரியா சக்ரவர்த்தி என்ற பெண் தன் தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஆர்த்திரியா கூறியதாவது “அப்பா இறந்தபின், அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடி பெயர்ந்தேன். நான் அங்கு தான் வளர்ந்தேன். அப்போது எனக்கு 2 வயது, அம்மாவுக்கு 25 வயதாகும். இதற்கிடையில் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என அனைவரும் என் தாயிடம் கூறுவார்கள். எனினும் எனது தாயார் அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் நான் திருமணம் செய்தால் எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்த பெண்கள்…. பான் கார்டில் பெயர் மாற்றுவது எப்படி?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

திருமணத்துக்கு பிறகு ஒரு பெண் பான்கார்டில் தன் பெயரை மாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். # பான்கார்டில் மாற்றங்களைச் செய்வதற்கு TIN-NSDL இணையதளம் (அ) UTIITSL-க்கு செல்லவும். # அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான துணை ஆவணங்களையும் இணைக்கவும். # இதையடுத்து பான் எண்ணை படிவத்தில் நிரப்பி, உங்களது பெயருக்கு எதிராகவுள்ள செல்லை மட்டும் டிக் செய்யவும். # படிவத்தில் இருக்கும் தகவல்களை சரிபார்த்த பிறகு “வேலிடேட்” என்பதனை […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க வேற லெவல்….!! 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள “1 ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய வாலிபர்”….

வாலிபர் ஒருவர் 2.5  லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கியுள்ளார். தெலுங்கானாவில் உள்ள தாரகராம காலணியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே  சொந்தமாக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. இதற்காக அவர் தினந்தோறும் ஒரு ரூபாய் நாணயங்களை சேர்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில்  பைக் வாங்க  தேவையான பணம் சேர்ந்த உடனே பைக் ஷோரூம் […]

Categories
தேசிய செய்திகள்

1,811 அரசு சாரா நிறுவனங்களின் NGO லைசன்ஸ் ரத்து…. மத்திய மந்திரி சொன்ன மிக முக்கிய தகவல்…!!!!

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை எப்சிஆர்ஏ விதிகளை மீறிய 1811 அரசு சாரா நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு வெளிநாட்டு நிதி பெறும் என்ஜிஓக்கள், எப்சிஆர்ஏவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் 1811 அரசு சாரா நிறுவனங்களிலும் வெளிநாட்டு நிதியானது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதன் காரணமாகத்தான் அந்த நிறுவனங்களின் என்ஜிஓ  லைசன்ஸ் ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுமி பாலியல் பலாத்காரம்”….. வீட்டில் பிணமாக கிடந்த முதியவர்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி இதோ….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் குப்பண்ணா (73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க சென்ற 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதன்பிறகு  சிறுமியை காணாததால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிய நிலையில், குப்பண்ணாவின் வீட்டில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. அந்த சிறுமியை குப்பண்ணா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் முதியவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் மறுநாள் காலை முதியவர் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் ரூ. 10 லட்சம் கோடி வாரா கடன்கள் தள்ளுபடி”…. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்…!!!!!

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, வங்கிகளில் உள்ள நிர்வாக இயக்குனர்கள் குழு அளிக்கும் ஒப்புதலின் பேரிலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரிலும் வாரா கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த வாராக்கடன்கள் வங்கிகளின் இருப்பு நிலை ஏட்டை சரி செய்வதற்காகவும், வரி பயனை பெரும் வகையிலும், முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி சொன்ன தகவலின் படி கடந்த 5 நிதி ஆண்டுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!…. 8 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்…. பரபரப்பு….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிழக்கு சீங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை தலைமையாசிரியர் புதருக்குள் அடிக்கடி இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த ஒரு பெண்மணி தலைமை ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சிறுமியின் பெற்றோர் உட்பட கிராம மக்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி […]

Categories
தேசிய செய்திகள்

“பீகாரில் தேஜஸ்வி யாதவ், தேசிய அரசியலில் நிதிஷ்குமார்”…. பாஜகவுக்கு எதிராக அனல் பறக்கும் அரசியல் களம்….!!!!!

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் இருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அதன் பிறகு பாட்னாவில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் நிதீஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 2024-ம் ஆண்டு நடைபெ றும் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நான் இல்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை தூக்கி எறிய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வயதில் இப்படி ஒரு பக்தியா…? 99 வயதில் ஐயப்பனை தரிசிக்க வந்த மூதாட்டி…. ஆச்சரியத்தில் மூழ்கிய கோவில் நிர்வாகம்….!!!!

சாமியை தரிசிக்க வந்த ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த தேவ் என்ற  99 வயது மூதாட்டி மாலையிட்டு ஐயப்பனை  தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர் பிற  பக்தர்கள், போலீசார், நம்பூதிரிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்து அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“PM கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு தவணைத்தொகை…. மத்திய அரசு சொன்ன மிக முக்கிய தகவல்….!!!

நாடாளுமன்றத்தில் பி.எம் கிசான் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்தார். அப்போது கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 12-வது தவணையில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 13-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

WOW!….. சீனியர் சிட்டிசன்களுக்காக இத்தனை விதமான நலத்திட்டங்களா….? மத்திய அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

நாடாளுமன்றத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் 60 வயதை கடந்தவர்கள் சீனியர் சிட்டிசன்கள் என்றும், 80 வயதை தொட்டவர்கள் மிக சீனியர் சிட்டிசன்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். அதன்பிறகு சீனியர் சிட்டிசன்களுக்காக மத்திய சமூக நீதித்துறை அடல் வயோ அபியுதய் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீ திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்”…. இந்த குறியீட்டில் சிலிண்டர் புக் செய்தால் “1000 ரூபாய் வரை கேஷ்பேக்”…. உடனே பண்ணுங்க….!!!!

இந்த குறியீட்டில் கேஸ் முன்பதிவு செய்தால் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் மக்கள் கேஸ் புக் செய்ய வேண்டும் என்றால் கேஸ் கடைக்கு சென்று புக் செய்து வந்தனர். ஆனால் தற்போது Paytm உள்ளிட்ட பணபரிவர்தனை செயலிகள்  மூலமாக  முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் Paytm மூலம் முன்பதிவு செய்தால் நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்குகிறது. தற்போது 4  கேஷ்பேக் சலுகைகளை வழங்கியுள்ளது. அதில் GAS 1000 என்ற ப்ரோமோகோடைப்  பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் புக் பண்ணா 1000 ரூபாய் கேஷ் பேக்…. உடனே முந்துங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. பேடி எம் நிறுவனம் தங்களது அப்ளிகேஷன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

FasTag பதிலாக புதிய வசதி…. இனி கொஞ்சம் கூட நிற்க வேண்டிய அவசியமில்லை…!!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.  பல வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறியிருந்தாலும் அந்த அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்யாமலிருப்பது, செயல்படாத பாஸ்டேக் வைத்திருப்பது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. இந்திய டோல் பிளாசாக்களை FasTag வசதி பெருமளவு […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: PF வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை…. இதை மட்டும் செஞ்சிராதீங்க…!!!

EPFO அமைப்பானது ஊழியர்களுடைய பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுடைய பணிக்காலத்தில் ஊதியத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை கொடுக்கிறது. ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், அதே அளவிற்கு ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் ஊழியரின் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இந்த பிஎஃப் பணத்திற்கு வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊழியருக்கு அதிகபட்சமாக ஓய்வூதியமாக 15000 கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் EPFO மூலம் PF பிடிக்கப்படும் ஊ ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அப்படி போடு…!! ஜியோவில் வந்தது smart phone…. மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

பிரபல  நிறுவனம் முதல் முறையாக 5g ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில்   ஜியோ நிறுவனம்  முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக 5ஜி தொழில்நுட்பம் அடங்கிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். மேலும் இதில் பெரிய 6.5 இன்ச் HD+LCD டிஸ்பிலே  வசதி, 90HZ refresh rate,snapdragon 480+SoC சிப்,4GB Ram,32GB ஸ்டோரேஜ் போன்ற  பல வசதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. நடிகை ரம்யா தயாரித்த பட தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்…. குழப்பத்தில் ரசிகர்கள்…..!!!!!

பிரபல நடிகை  தயாரித்துள்ள படத்தின் தலைப்பிற்கு  இயக்குனர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா. இவர் தற்போது ஆப்பிள் பாக்ஸ் என்ற  பட தயாரிப்பு நிறுவனத்தை தனியாக நடத்தி வருகிறார். தற்போது “சுவாதி முத்தின மலே ஹனியே” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த  தலைப்புக்கு மூத்த இயக்குனராக பணிபுரிந்து வரும் எஸ். வி. ராஜேந்திர சிங் பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அவர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

நேபாளத்தில் சோகம்..! பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி..!!

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தின் கவ்ரேபாலன்சோக் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். “மத விழாவிற்கு வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாலை 6.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்துக்குள்ளானது. 20 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Nepal | At least 13 dead in a road accident in Kavrepalanchok district of central Nepal "The bus […]

Categories
தேசிய செய்திகள்

செய்முறைத் தேர்வுகளை தவறவிட்டால் என்ன நடக்கும்?…. மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்….!!!!

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் 2023ம் வருடம் ஜனவரி 1ம் தேதியும், பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியும் தொடங்கும். இதற்கான தேர்வு அட்டவணையானது விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என குறிப்பிட்டு, சமூகஊடகங்களில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்!…. கடல் கடந்து காதலியை கரம் பிடித்த நபர்….. இதோ ஒரு சுவாரசியமான காதல் கதை….!!!!

உத்தரபிரதேசம் ருத்ராபூர் தாலுகாவிலுள்ள நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்த சன்வார் என்பவர் பொழுதுபோக்கிற்காக பேஸ்புக்கில் கணக்கு துவங்கி நண்பர்களுடன் உரையாடி வந்தார். இவர் கடந்த 2015ம் வருடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கற்றுக்கொண்டிருந்தபோது, இந்தோனேசியாவின் மேடானைச் சேர்ந்த மிப்தாகுல் என்பவருக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்கியூஸ்ட் அனுப்பினார். இதையடுத்து இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்தனர். அதன்பின் நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த 2018-ம் ஆண்டு கடல் கடந்து மிப்தாகுலை சந்திக்க முதன் முறையாக அவர் விமானத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பெயரில் மோசடி…. பயனர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு……!!!!

EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஷாஜஹான் மும்தாஜின் அசல் கல்லறைகளை பார்க்கணுமா?… சுற்றுலா பயணிகளுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

தாஜ்மஹாலிலுள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் போன்றோரின் அசல் கல்லறைகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை வந்திருக்கிறது. இம்முறை தாஜ்மஹாலை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்த்து ரசிக்க இயலும். அதாவது, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 போன்ற தேதிகளில் சுற்றுலாப்பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனெனில் உர்ஸ் நிகழ்வு கடைபிடிக்கப்படுவதால் இந்த அனுமதியானது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தாஜ்மஹாலில் நடைபெறும் நிகழ்சிக்கான பொறுப்பாளர் ராஜ்குமார் படேல் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. புதிய ரேட் இது தான்…..!!!!

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஏழு முதல் 45 நாட்களுக்கு மூன்று சதவீதம் வட்டி, 46 முதல் 179 நாட்களுக்கு 4.50 சதவீதம் வட்டி, 180 முதல் 210 […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய வீரர்கள் காட்டிய வீரத்தை நான் வணங்குகிறேன்”.. உள்துறை மந்திரி அமித்ஷா நெகிழ்ச்சி…!!!!!

கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேச எல்லையில் தவாங்  செக்டார் பகுதியில் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய – சீன படைகளுக்கு இடையேயான மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதில் இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை நேற்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. 1 இல்ல 2 இல்ல…. 450 மருத்துவ பரிசோதனைகள் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற உதவிய மக்களுக்கு 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்து இருக்கிறது. வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில் 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு தெரிவித்து உள்ளது. இப்போது தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையானது 212ஆக இருக்கிறது. இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு சுகாதாரத்துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை: ஐஐடி, ஐஐஎம்-ல் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து…. மத்திய அரசு சொன்ன தகவல்….!!!!

நாட்டில் மொத்தமுள்ள ஐஐடிகளில் 4,502 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கல்வித்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது, நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகிய இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் இப்போது 493 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டி இருக்கிறது என்று கூறினார். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய மத்திய பல்கலைகளில் 11,000 பேராசிரியா் பணி இடங்கள் காலியாகயிருப்பது மத்திய கல்வி அமைச்சக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் 450 வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் அதிகரித்துள்ளதால் மக்களால் பரிசோதனைகள் நடத்த முடியாமல் இருக்கின்றன. அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமிக்கு “ஜிகா வைரஸ்” பாதிப்பு…. மாநில அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு “ஜிகா வைரஸ்” பாதிப்பானது உறுதியாகி இருக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சிறுமிக்கு ஜிகாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது “மாநிலத்தில் முதன் முறையாக ஜிகா வைரஸ் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக நிலைமையை அரசு […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் ஏராளமான பயணிகள் இப்போது IRCTCன் இணையதளம் (அ) ஆப் வாயிலாக தங்களின் டிக்கெட்டை ஆன்லைனில் முன் பதிவு செய்கின்றனர். எனினும் தாங்கள் கடைசியாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை எப்போது பதிவுசெய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவு இருக்கிறதா..? இந்த வருடம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் IRCTC 30 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் IRCTC இப்போது செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமான ஒன்று. கொரோனா தொற்றுக்கு பின் ரயில்கள் இயக்கப்பட்ட […]

Categories

Tech |