வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் […]
