வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை […]
