நவம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 498 – திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1307 – ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார். 1635 – சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. 1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான். […]
