சனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 630 – மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர்.[1] 1055 – தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார். 1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது. 1571 – ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது. 1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது. 1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார். 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச கடற்படையும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றின.[2][3] ஆகத்து […]
வரலாற்றில் இன்று ஜனவரி 11…!!
