மார்ச் 2 கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார். 1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார். 1498 – வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார். 1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 1797 – இங்கிலாந்து வங்கி முதலாவது ஒரு-பவுண்டு, இரண்டு-பவுண்டு வங்கித்தாள்களை வெளியிட்டது. 1807 – அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது. 1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் […]
வரலாற்றில் இன்று மார்ச் 2…!!
