ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டின் 112 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 113 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 253 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப் பேஅரரசர்களாக அறிவித்தது. 1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார். 1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட சரகோசா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.. 1809 – ஆத்திரிய இராணுவம் நெப்போலியன் தலைமையிலான முதலாம் பிரஞ்சு […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 22…!!
