நவம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1100 – இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார். 1028 – பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார். 1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது. 1572 – டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார். 1673 – உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன. 1675 – குரு […]
