கிரிகோரியன் ஆண்டு: 241 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 242 ஆம் நாள். இன்றைய தின நிகழ்வுகள் 708 – செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது. 1009 – செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. 1261 – நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1350 – வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன. 1484 – எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் நான்காம் சிக்சுடசு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1498 – வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 29…!!
