அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டு 291 ஆம் நாள். நெட்டாண்டு 292 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 74 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. 1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. 1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. […]
