மே 3 கிரிகோரியன் ஆண்டின் 123 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 124 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1616 – லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1715 – எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. 1791 – ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது. 1802 – வாசிங்டன், டி. சி. நகரமாக்கப்பட்டது. 1808 – சுவீடன் சுவீபோர்க் கோட்டையை உருசியாவிடம் இழந்தது. […]
வரலாற்றில் இன்று மே 3…!!
