Categories
கல்வி மாநில செய்திகள்

BIG BREAKING : TNPSC தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் …!!

TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது.  அதில் , குரூப் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்…!!

சிபிஎஸ்சி பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ- மாணவர்களுக்கான பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2020 பொது தேர்வு எழுதும் மாணவ- மாணவியரை வாழ்த்துகிறேன். […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

BREAKING : சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு …..!!

ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஐ.எப்.எஸ் , ஐ.ஆர்.எஸ் உட்பட 796 பணியிடங்களை நிரப்பபட இருக்கின்றன.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மார்ச் 3ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று UPSC தெரிவித்துள்ளது.

Categories
கல்வி பல்சுவை மாவட்ட செய்திகள்

10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் என்னென்ன? முழு விவரம்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வில் முக்கியப் பணிகளில் தனியார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான வழிகாட்டல் என்னென்ன என்பது குறித்தும் கூறியுள்ளது. அதன் முழு விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம். தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ட்ரீட் ”காலையில் விடுமுறை” மாணவர்கள் உற்சாகம் …!!

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு காலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பல்வேறு தேர்வு வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அடையாள அட்டை அரசுத் பொதுத்தேர்வினை நடத்துவதில் முழுப்பொறுப்பும் மாவட்ட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

சிவில் என்ஜினியர் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பயிற்சி

சென்னையிலுள்ள நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டி லுள்ள நில அளவை பயிற்சி நிறுவனத்தில், 3 மாதகால பயிற்சி வகுப்புகள் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தொடங்கவுள்ளதாக வும், இதில் பங்கெடுக்க விரும்பும் தமிழக அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்வி நிறுவ னத்தில் 3 ஆண்டுகள் டிப்ளமோ சிவில் என்ஜி னியரிங் முடித்தவர்கள், விண்ணப்பங் களை அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள் ளது. தமிழக அரசு இணையதளத்தில் முழு விவரமும் இருப்பதாகவும், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் படிப்பு- கல்வி கட்டணம் உயருகிறது..மாணவர்கள் வேதனை..!!

2020- 2021ம் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில உயர் கல்வித்துறைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்விக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும், அதனால் புதிய வழிகாட்டுதலின்படி கல்வி கட்டணம் மற்றும் பேராசியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : ”கூடுதலாக 484 குரூப் 4 காலிபணியிடங்கள்” TNPSC அறிவிப்பு …!!

டி என் பி எஸ் சி குரூப் 4 பணிக்காக கூடுதலாக 484 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 484 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 9,398ல் இருந்து 9882ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவதும் , குறைவதும் வழக்கமான ஒன்றுதான் என்று TNPSC தெரிவித்துள்ளது.

Categories
கல்வி தேசிய செய்திகள்

9 ,10 வரை போதும்…. ”இடைநிற்றல்”… 100 சதவிகிதம் அதிகரிப்பு… அதிர்ச்சி …!!

கடந்த 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிப்படிப்பின் இறுதிக் கட்டமான 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் இருந்து விலகுபவர்கள் எண்ணிக்கை குறித்து  ராஜஸ்தான்  நாடாளுமன்ற உறுப்பினர்  பி பி சவுத்ரி மற்றும் மகாராஷ்டிர  நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விடை அளித்தார்.   அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது  ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகாவில் பள்ளிப் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

‘இனி எம்பிபிஎஸ் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்’ – துணைவேந்தர்

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அதன் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுச் செயல்படும் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தேர்வுகளை அப்பல்கலைக்கழகம் நடத்துகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் புதிய முறை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

TNPSC  முறைகேட்டால் …  TRB தேர்வாளர்  அதிர்ச்சி …!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு எதிரொலி டி.ஆர்.பி. தேர்வில் சொந்த மாவட்டத்தில் எழுத அனுமதி கிடையாது என தகவல் வெளிவந்துள்ளன. சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்விற்கு சொந்த மாவட்டங்களில் தவிர்த்து வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலர் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

5…8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…… “எல்லாரும் PASS” தேர்வுக்கு முன்பே RESULT வெளியிட்ட கல்வித்துறை அமைச்சர்….!!

தமிழகத்தில் ஐந்து எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் தமிழக பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு சுற்றுச் சூழலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு நற்பணிகள் செய்த 35 பள்ளிகளை தேர்வு செய்து அதில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு: புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு ….!!

குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 39 பேரின் பெயரை தவிர்த்து விட்டு புதிய தேர்ச்சி பட்டியலை TNPSC […]

Categories
கல்வி சினிமா சென்னை தமிழ் சினிமா

கல்விக்கு சூர்யா…. விவசாயத்திற்கு கார்த்தி…. கோடிகளின் அடையாளம் அல்ல எங்கள் குடும்பம்….. நடிகர் சிவகுமார் பேச்சு…!!

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை  நிகழ்வில் நடிகர் சிவகுமார் அவரது மகன்களின் அடையாளம் குறித்து பேசினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை பத்தாண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சூர்யா., அவரது தந்தை சிவகுமார், அவரது சகோதரர்கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் பயின்றுவரும் மாணவர்கள் 3000 பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய சிவகுமார் எத்தனை படங்கள் நடித்து கோடி […]

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

என்னடா நடக்குது…. TNPSCஇல் அடுத்த முறைகேடு…. என்ஜினீயரிங் தேர்வில் குழப்பம்…. CM தனிப்பிரிவில் புகார்….!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புதியதாக குழப்பம் எழுந்துள்ளது.  TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் மாவட்ட  வாரியாக இட ஒதுக்கீடு அடிப்படையில் அடிப்படை மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் ஈடுபட்டிருப்பதாகவும், தகுதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இனி கட் அடிக்க CHANCE இல்ல….. BIO-METRIC வருகைப்பதிவு கட்டாயம்…. DPI அதிரடி….!!

பயோமெட்ரிக் கருவிகளில் வருகையை பதிவு செய்யாத கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி அலுவலகங்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. பயோமெட்ரிக்  கருவிகள் கல்வித் தகவல் மேலாண்மை இணைய தளத்துடன் இணைக்கப் பட்டிருப்பதால் வருகைப்பதிவு நேரம் தகவல் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் தங்களது வருகையை இதில் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்யாத பள்ளிகள் கல்வி அலுவலகங்களுக்கு  பள்ளிக் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

99 பேருக்கு ஆப்பு… வாழ்நாள் தடை…. TNPSC அதிரடி …!!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.இந்நிலையில், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 2019 செப்டம்பர் 01ஆம் தேதியன்று தொகுதி IV தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

5, 8-ம் வகுப்பு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து – அமைச்சர் செங்கோட்டையன்..!!

பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற, பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி சரியாக கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-”மாணவர்களுக்கு அனுமதி இல்லை” திடீர் எச்சரிக்கை …!!

அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதஉள்ள எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் (துவக்க அனுமதி பெற்று முதன்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் புதிய பள்ளிகள் உட்பட) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

யாரும் இல்லை….”காலியான 1,706 ஆசிரியர் பணி” அரசு எடுத்த அதிரடி முடிவு…!!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாக 1,706 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஆசிரியர் இல்லாமல் உபரியாக இருந்தக் காலிப்பணியிடங்களை, அரசிற்கு ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாக உள்ள உபரிப் பணியிடங்களில், வரும் காலத்தில் ஆசிரியர்கள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”10th , 12th வினாத்தாள் தொகுப்பு விற்பனை” பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு …!!

பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் விற்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட வரிசைக்கு வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைந்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

நோ… நோ…. ”தெறித்து ஓடும் மாணவர்கள்” நீட் எண்ணிக்கை குறைந்தது …!!

நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் ஆண்டுதோறும் உயர்ந்ததால், இந்த ஆண்டு அத்தேர்விற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி இரவு 11.50 மணிவரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”திணறும் நீட் பயிற்சி மையங்கள்” பெற்றோர்கள் வேதனை …!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியாமல் 412 இலவச பயிற்சி மையங்கள் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்பீட் என்ற நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான  நீட் பயிற்சி மையங்கள் தாமதமாக தொடங்கியதால் இது வரை முப்பதுக்கும் குறைவான வகுப்புகளே நடந்து  இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் மற்றும் தொடர் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு …!!

அரசு, நகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள ஆண்டுக்கான தற்காலிக செயல்திட்ட அட்டவணையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 97 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பள்ளிகள், கேந்திர வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் பணி புரிவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலரும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”14ஆவது மத்திய ஆசிரியர் தகுதித் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10… 12ஆம் வகுப்பு…. புதிய பாடத்திட்டம்….. மாதிரி வினாத்தாள் வெளியிட்ட PTA…!!

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் தேர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளதால் பாடப் புத்தகங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு பொது தேர்வுக்கு தயாராகும் வகையில், மாதிரிவினாத்தாள் புத்தகங்கள் மற்றும் தீர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் அச்சிட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு..!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தேர்வு எழுதும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”தேர்வுகளுக்கு கால்குலேட்டர் அனுமதி” CBSC அதிரடி உத்தரவு …!!

கற்றல் குறைபாடுள்ள 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வழி மாணவ மாணவிகள் தங்களது பொதுத்தேர்வின் போது கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்நிலையில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தி தங்களது தேர்வினை எழுதலாம் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக […]

Categories
கல்வி சென்னை மாநில செய்திகள்

இதுக்கு தான்…. 5..8ஆம் வகுப்புக்கு பொது தேர்வு வைக்கிறோம்….. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…!!

மாணவர்களின் திறனை கண்டறியவே பிற  மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் ஏழாவது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு வார விடுமுறைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாக […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

“5, 8ஆம் வகுப்பு தேர்வு மையம்” புதிய அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதில் இருந்து வந்த குழப்பம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கையால் நீக்கியுள்ளது. முதல் முறையாக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் விவகாரத்தில் ஒரு முரண்பட்ட தகவல்கள்,  குழப்பங்கள் நிலவி வந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அப்போதிருந்த தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேதுராம […]

Categories
கல்வி மாநில செய்திகள்

‘5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்’

 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் எனஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இந்தத் தேர்வு அறிவிப்பின் மூலமாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கல்வி – பள்ளிக்கல்வித்துறை அறிவுரை!

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மாநிலத்திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ” 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உடல் நலம், மன நலம், பழகும் தன்மை, தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், ஆசிரியர் மாணவிகள் உறவு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை பொதுத்தேர்வு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் …!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது . நீட் தேர்விற்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11:50 மணியுடன் முடிவடைகிறது .நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது .விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும் . மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .முறைகேடுகளை தவிர்ப்பதற்கான […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

தவறு கண்டறியப்பட்டால்…. பாரபட்சமின்றி நடவடிக்கை… டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை..!!

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது  கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு […]

Categories
கல்வி பல்சுவை மாவட்ட செய்திகள்

BREAKING: TNPSC தேர்வில் முறைகேடு ? விசாரணை தொடக்கம் ….!!

குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக அதன் விசாரணை TNPSC தொடங்கியுள்ளது. கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு?

ஒரே தேர்வு மையத்தில் TNPSC எழுதியவர்கள் அடுத்தடுத்து 100 இடத்தை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றே தேர்வு… அதிர்ச்சியில் மாணவர்கள்.!!

விடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதத்தால் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வுகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

வாவ்..!.. நல்ல அறிவிப்பு ….. குதூகலத்தில் மாணவர்கள் ….!!

தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி  தற்போது வரை  நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த தொடர் விடுமுறையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 2_ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும் , அந்த வாக்கு எண்ணும் […]

Categories
Uncategorized கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : ”ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” மாணவர்கள் உற்சாகம் …!!

தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி  தற்போது வரை  நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த தொடர் விடுமுறையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 2_ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும் , அந்த வாக்கு எண்ணும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

திட்டமிட்டபடி நாளை (4ஆம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை!

திட்டமிட்டபடி நாளை 4ஆம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் -துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி  நடைபெறும் என்பதால்  வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாலும், ஒரு சில இடங்களில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன் “-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி …!!!

டி .என் பி எஸ் சி  நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் . சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ,ஐ .டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐ டி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார் . தற்போது அத்தேர்வில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் ஜன. 4ஆம் தேதி திறக்கப்படும்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி… பள்ளிகள் விடுமுறையில் மாற்றம்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி காரணமாக 4ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிக்கு வராதீங்க… ’மோடியின் பேச்சை வீட்டிலேயே பாருங்க’ – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!!

பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கேட்கலாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12-ஆம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மதிய உணவுத் திட்டம் : அனைவருக்கும் பயனுள்ளதாக்க உரிய திட்டமிடல் அவசியம்!

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு விஷயத்தில், தற்போது ஒரு திடமான மற்றும் விரிவான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. மதிய உணவுத் திட்டம்… பசிக் கொடுமையால் பள்ளி செல்ல இயலா சிறுவர்களை ஈர்ப்பதற்காக, 25 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட திட்டம் இது. ஆனால், ஆண்டுகள் பல கடந்த பின்னும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல மாநிலங்களிலும் ஏராளமான குளறுபடிகள் தொடர்வது துரதிர்ஷ்டமானது. பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயில வரும் […]

Categories
கல்வி

தண்ணிர் குடிக்க தனியாக நேரம் ஒதுக்கப்படும்…!!கர்நாடகா அரசு அறிவிப்பு…!!

கர்நாடக பள்ளிகளில்’ பெல்’ முறையில் குடிநீர் குடிக்க அனுமதி வழங்கபடுகிறது…!!  பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்ல, இதனால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன.இந்த நிலையில் கேரளா மாநிலத்தில், குடிநீர் குடிக்க காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை  கர்நாடக பள்ளிகளில்  அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து கர்நாடகத்தில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இப்படியா ? பண்ணுவீங்க….. ”ஷாக் கொடுத்த கல்வித்துறை”….. ShareChat_டில் வினாத்தாள்…!!

முன்கூட்டியே வெளியான கேள்வித் தாள்களை வைத்து பள்ளிக் கல்வித் துறை தேர்வினை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரையாண்டுத் தேர்வின் கடைசி நாளான இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் தேர்வும் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் முழுமையாக சமூக வலைதளத்தில் நேற்றிரவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான கேள்வித்தாள் சமூக வலைதளத்தில் வெளியான கேள்வித்தாள்களில், அந்த […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

JUST IN : அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு ….!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளக்காக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் , உள்ளாட்சி தேர்தல் , புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை முதல் ஜனவரி 1_ஆம் தேதி வரை என 12 நாட்களுக்கு விடுமுறை என உயர்கல்வித்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த விடுமுறை நாட்களில் பட்டியலிடப்பட்டு இருந்த அட்டவணை படுத்தப்பட்டு இருந்த  தேர்வுகள் அனைத்தும் ஒத்தி […]

Categories
கல்வி பல்சுவை

மாணவர்களே…!.. ”நாளை முதல் யாரும் வராதீங்க”….. 12 நாட்களை கொண்டாடுங்க …!!

தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்கள் மத்திய , மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தால் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பருவத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும் கல்லூரிகளுக்கு […]

Categories

Tech |