பிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 10-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் […]
