குளிர்காலத்தில் சளி இருமலுக்கு சிறந்த மருத்துவம்: குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம். சளி தொந்தரவுக்கு, தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் […]