வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பராசக்தி காலனி பகுதியில் கேத்திரபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக கேத்திரபாலன் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவரது வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கேத்திர பாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
