மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று சிவகாசி- திருத்தங்கல் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் பூமிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் காயமடைந்த கௌரி சங்கர், சீனிவாசன், ராகுல், […]
