Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில்… பட்டதாரி பெண்ணிற்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் நிலா என்கிற சர்மிளா(24). இவர் எம்எஸ்சி முடித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார்.  இந்நிலையில் சர்மிளா நேற்று பசுமாட்டை மேய்ச்சலுக்காக  தங்களுடைய நிலத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு  திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சர்மிளாவை  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படி போகுறது ? பலமுறை மனு கொடுத்தாச்சு…. மையானதுக்கு வழி இல்லை… வயலில் செல்லும் அவலம்

விழுப்புரம் அருகே மையானத்திற்கு பாதை இல்லாததால் விளைநிலங்கள் வழியாகவே சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை தொடர்வதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோழியுனுர் அருகே உள்ள காவணி பாக்கம்  கிராமத்தில்  மையானத்திற்க்கு  செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சடலங்களை விளைநிலங்கள் வழியாக சுமந்து செல்ல வேண்டிய நிலை பல ஆண்டுகளாக தொடர்வதாக கிராம மக்கள் […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடன் கட்ட முடியல …. வேதனையில் பெண்….எடுத்த விபரீத முடிவு….!!

கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்-பரமேஸ்வரி தம்பதியினர். பரமேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த நிலையில் இவர் அண்மையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் அவர்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில்  மனமுடைந்த பரமேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். நெருப்பின் வெப்பத்தை தாங்கமுடியாத காரணத்தினால் பரமேஸ்வரி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தண்ணீர் எடுக்க… சகோதரனுடன் கிணற்றுக்கு சென்ற சிறுமி… பின்னர் நடந்த கொடூரம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நாகலாம்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகள் பிரேமலதா. இவர்  அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிரேமலதா தனது தம்பியுடன் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது பிரேமலதா கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது சிறுமி கிணற்றுக்குள் எந்த அசைவும் இல்லாத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரஜினிகாந்த் என் வாழ்க்கை”… கட்சி தொடங்காத விரக்தியில்… உயிரிழந்த தீவிர ரசிகன்..!!

ரஜினி தன் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் விரக்தியில் இருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு “இப்ப இல்லனா வேற எப்பவும் இல்லை” எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி, ஜனவரியில் இருந்து கட்சி தொடங்குவார் என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாத்த பட பிடிப்பில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உயிரிழந்த தேசிய பறவை…. மரியாதை செலுத்தி அடக்கம் பண்ணுங்க…. ஆட்சியர் உத்தரவு….!!

இறந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி அடக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பெரியதச்சூரில் வராக ஆற்றின் கரையோரம் நேற்று காலை மயில் ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அதனை நேரில் பார்வையிட்ட பெரியதச்சூர் வி.ஏ.ஓ லோகநாதன் மற்றும் கால்நடை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் அம்மயிலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின் விவசாய நிலத்தில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்து கலந்த உணவை உண்டு மயங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரயில் மோதி விபத்து…! ”பராமரிப்பு ஊழியர் மரணம்” போலீசார் விசாரணை …!!

உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரயில்வே கேங்மேன் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழநதார். இது குறித்து தகவலறிந்ததும் விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்‍கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி…! நண்பர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்…!

நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் கோவுலாபுரம் கிராமத்தில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் என்னும் மகன் இருந்தார்.  பரத் அயன்வேலூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.  பரத் விடுமுறை தினமான நேற்று மதியம் நண்பர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் குளிக்கும்போது திடீரென பரத்தை காணவில்லை. இதனையடுத்து பரத் நீரில் மூழ்கியதை அறிந்த அவரது சக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு… புகார் இருந்தால் தெரிவிக்கலாம்…!!

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் கொடுக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு போன்ற பொருட்கள் மற்றும் ரூபாய் 2500 ரொக்கம் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து […]

Categories
விழுப்புரம்

பெற்றோரின் அலட்சியத்தால்…. பறிபோன 2வயது குழந்தை உயிர்… விழுப்புரத்தில் நடந்த துயர சம்பவம் …!!

திருவெண்ணைநல்லூர் அருகே தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன்.  இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு ஹரிணி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.  ஹரிணியும் அவளது தாய் வித்யாவும் மாலையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.  அப்பொழுது இரண்டு வயது குழந்தையான ஹரிணி பூ பறிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை… பரிதவிக்கும் பெற்றோர்…விழுப்புரத்தில் சோகம்…!!!

விழுப்புரத்தில் 8 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாருதி நகரைச் சேர்ந்தவர் ஜான் பால் என்பவர். இவருக்கு 40 வயதாகிறது. அரசு பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி ஜேஸ்மின்(35)   கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 8 வயதுடைய ரெமி எட்வின் எனும் மகன் இருந்துள்ளார். ரெமி எட்வின் தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 வயது சிறுவன்… 10 அடி கழிவுநீர் தொட்டியில்… நடந்தது என்ன..?

கழிவு நீர் தொட்டியில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்பால் – மேரி ஜாஸ்மின். ஜான்பால் அங்குள்ள  அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.  மேரி ஜாஸ்மின் எண்ணாயிரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார் . இவர்களது மகன் எட்டு வயதுடைய ரெமி எட்வின். இவன்  அங்குள்ள  தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். நேற்று மாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் துணிகரம்… ஆசிரியை வீட்டில் கத்தி முனையில் கொள்ளை… மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்…!!

ஆசிரியை மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சகாயராஜ் – வசந்தி. சகாயராஜ் தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . வசந்தி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார் . இவர்களது வீட்டில் 2 தளங்கள் உள்ளது . மேல்தளத்தில் ஆசிரியை சார்லட் என்பவர்  வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறிபோன கால்கள்…. மருத்துவர்களின் விடாமுயற்சி…. மறுவாழ்வு பெற்ற இளைஞர்…!!

கால்களை இழந்த இளைஞருக்கு மருத்துவர்கள் செயற்கை கால் பொருத்தி மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய பிரதாப் .இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மழை பெய்யும் பொழுது வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த குடையின் மேற்புற கம்பி தவறுதலாக மின்சார கம்பி மீது பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தின் காரணமாக பிரதாப் கடுமையாக பாதிக்கப்பட்டார்.இதனால் அவருக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை… சேதமடைந்த நெல் மூட்டைகள்… விவசாயிகள் கவலை…!!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேல்மலையனூர், அனந்தபுரம், ஆலம்பூண்டிமற்றும் சுற்றுப்புற வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் தங்களது சொந்த நிலத்தில் விளைந்த தானியங்களையும், பயிர்களையும் செஞ்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஒழுங்குமுறை கூடத்திற்கு 4000  நெல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சித்தியுடன் தகாத உறவு” பிறப்புறுப்பை வெட்டிய சித்தப்பா…. அதிர்ச்சி சம்பவம்…!!

நபர் ஒருவர் தனது சித்தியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவருடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே காலனி பகுதியில் வசிப்பவர் விஜி(36). இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு சித்தப்பாவான சிலம்பரசன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சண்முகபுரம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கும் தன்னுடைய சித்தப்பா மனைவிக்கும் இடையே திருமண உறவையும் மீறிய பழக்கம் ஏற்பட்டுளது. இதனால் சிலம்பரசன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணியா…? முந்தியடித்த மக்கள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்க  கூட்டம் அதிகரித்ததால் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய்க்கு நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டது.இதனால் அங்கே அதிக மக்கள் திரண்டதால் கடை உரிமையாளரை கைது செய்தனர். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும்  என்று ரிசர்வ் வங்கி பலமுறை கூறியுள்ளது. ஆனால் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று இன்னும் பல இடங்களில் கூறிக்கொண்டு வருகின்றனர்.இதனால் ஆயிரக் கணக்கில் பத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வட்டி கொடுமை ஒருபுறம்… தொழில் நஷ்டம் மறுபுறம்… 3 குழந்தைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு…!!

வட்டி கொடுமையால்  3 குழந்தைகளுடன் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மோகன்- விமலாஸ்ரீ.  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சுத் தொழில் செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக தச்சு  தொழில் மந்தம் அடைந்துள்ளது. இதனால் வீட்டின் பத்திரத்தை  அடமானம் வைத்து ரூபாய் 40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

3 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு… கணவன் மனைவி தற்கொலை… பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணியில் இருந்த போது…. எதிர்பாராமல் நடந்த கொடுமை… மின் ஊழியர் மரணம்…!!

பழுது பார்க்க சென்ற மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிப்பாளயம் பகுதியை சேர்ந்தவர் சாய்ராம். இவர்  மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மரக்கானத்திற்கு அருகில்  உள்ள கோண  வாயன் என்ற குப்பத்தில் பழுதடைந்த மின்மாற்றியை சரி பார்க்க சென்றுள்ளார். அப்போது மின்மாற்றியில் உள்ள பழுதை சரி பார்த்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத வகையில் மின்சாரத்தால் தாக்கப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மேலே வீடு…. கீழே கடை…. அசந்து தூங்கிய குடும்பம்… உள்ளே நுழைந்த கொள்ளையர்கள்… திண்டிவனத்தில் அதிர்ச்சி ..!!

திண்டிவனத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தில் மரக்காணம் ரோடு நாகலாபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் குடும்பத்தினருடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். கீழ்ப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி குடும்பத்தை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி வெல்டிங் பட்டறை கதவை பூட்டாமல் குடும்பத்துடன் படுத்து உறங்கியுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் நள்ளிரவில் வீட்டில் புகுந்து அங்கு உள்ள பூஜை அறையில் 4 பவுன் நகை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீஸ் ஏட்டு மீது வழக்கு…. தப்பு பண்ணிட்டு மிரட்டல் வேறயா….? விசாரணையை தொடங்கிய காவல்துறை….!!

விருதுநகர் பர்மா காலனி அருகே போலீஸ் ஏட்டின் கள்ள தொடர்பை  தட்டி கேட்ட  மனைவியை மிரட்டியதால் மகளிர் காவல்துறை வழக்குப்பதிந்து  விசாரணை செய்து  வருகின்றது. விருதுநகர் மாவட்டம் பர்மா காலனியில் வசித்து வருபவர் சுகன்யா.  33 வயதுடைய இவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் காவல்துறை  பிரிவில்  போலீஸ் ஏட்டடடாக வேலைபார்த்து வரும் சரவணகுமாருக்கும் கடந்த பத்து  ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே ஏட்டு சரவணகுமார் தன்னுடன் வேலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்த நாளில்…! “மனைவி இறப்பு”… கணவனின் வெறிச்செயல்… விழுப்புரத்தில் பரபரப்பு….!!

விழுப்புரம் மாவட்டம் அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதில் கோவம் அடைந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவணை போலீசார்  கைது செய்தனர் . விழுப்புரம் மாவட்த்தில் செஞ்சி அருகில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி 26 வயது. அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டரான சுரேஷ் வயது 35 இருவருக்கும்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது.  சுரேஷ், நந்தினிக்கும்  3 மகன்கள் உள்ளனர். ந .வ 28-ம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால்… நடந்த விபரீதம்… கணவனின் வெறிச்செயல்..!!

செஞ்சி அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் நந்தினி என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது இரண்டாவது மகன் கிரித்திசின் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விழா முடிந்ததும் இரவு தனது வீட்டிற்கு சென்றார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் சென்ற தொழிலாளி…. விரட்டி வந்த கார்…. பிறகு நேர்ந்த பரிதாபம் …!!

விழுப்புரம் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம்  மோதி கரும்பு வெட்டும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டதில் உள்ள புத்தா முண்டகபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் செல்வமூர்த்தி. 30 வயதுடைய இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார்.  செல்வமூர்த்தி ஊத்துக்கோட்டை அடுத்துள்ள ஆலங்காட்டில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.  ந.வ.27-ம் தேதி  இரவு ஊத்துக்கோட்டை வந்த அவர் அம்பேத்கர் நகர்  பேருந்து  நிறுத்தம் அருகே நடந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓட்டை போட்டு… ஆட்டைய போட்ட மர்ம நபர்…. வேட்டையாடும் போலீஸ் …!!!

விழுப்புதில்  நகை கடை  சுவற்றில் ஓட்டை  போட்டு  மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து வி-சாரானை நடத்தி வருகின்றார்கள். விழுப்புரம் மாவட்டத்தில்    அக்பர் நகரில்  வசித்து வருபவர் பாலமுருகன். இவரின்   நகை கடை பண்ருட்டி  அருகில் உள்ள  கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் உள்ளது. ந.வ 2-ஆம்  தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில்  நள்ளிரவு சமயமத்தில் பூட்டிய கடைக்குள்  மர்ம நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடல் கொந்தளிப்பு – 2வது நாளாக மீனவர்கள் செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை ஒட்டிய கடல் பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்ட படகுகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் கடல் பகுதியில் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையொட்டி உள்ள பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. மரக்காணம், கூனி மேடுக்குப்பம், அனிச்ச குப்பம், கோட்டகுப்பம், முதலியார் சாவடி, அனுமந்தை குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களில் மீனவர்கள் 2-வது நாளாக நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. படகு மட்டும்  அலைகளை பாதுகாப்பான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவன் மனைவி சண்டை…. விஷம் குடித்து மனைவி சாவு…. விழுப்புரத்தில் சோகம்…!!

கணவன் மனைவி சண்டையில் விரக்தியடைந்த மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியிலுள்ள குடுமி குடிசை கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ஏழுமலை(51)-சாந்தி(46). ஏழுமலை தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஏழுமலை சாந்தியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சாந்தி வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி …!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் வீட்டை இடித்து விட்டதாக புகார் கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தியாளர் தெரிவிக்க கேட்டோம்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேரறிவாளன் தனியார் மருத்துவமனையில் அனுமதி …!!

பரோலில் வெளி வந்துள்ள பேரறிவாளன் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு உடல்நிலை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 9-ம் தேதி பரோல் வெளியே வந்தார். இந்த நிலையில் பேரறிவாளனுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சைக்கிள் கடையில் ரூ.1.73 லட்சம் திருட்டு… சுவரில் ஓட்டை போட்டு நுழைந்த திருடர்கள்…!!!

விழுப்புரத்தில் சைக்கிள் கடையின் சுவரில் ஓட்டை போட்டு ரூ.1.73 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள நேருஜி சாலையில் இயங்கி வரும் பிரபல சைக்கிள் கடையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சைக்கிள்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இக்கடையை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர் . அன்று நள்ளிரவு கடையின் சுவரில் ஓட்டை போட்டு நுழைந்த மர்ம கும்பல் கடையில் வைக்கப்பட்டிருந்த பணத்தை […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

“மது போதையில் விபத்து” பரிதாபமாக போன உயிர்…. காவல் அதிகாரியை விரட்டிப் பிடித்த மக்கள்…. !!

திண்டிவனத்தில் தலைமை காவல் அதிகாரி மது போதையில் காரைஒட்டியதில்  அதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கோபாலபுரத்தில் உள்ள தனது வயல் வெளியை பார்வை பார்த்துவிட்டு புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த போலீஸ் கார் ஒன்று தர்மராஜ்  இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்  தர்மராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாயின் கண்ணெதிரே நடந்த கொடூரம்…. வெட்டிக் கொல்லப்பட்ட மகன்…. திருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு….!!

தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த  டிரைவரை மூன்று நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. எடப்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த குண்டாரிநன்னேபா என்பவரின் மகன் கலீல்(42). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில்  டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தாரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கலீல் ஊரடங்கு காரணமாக மீண்டும் கத்தாருக்கு செல்லாமல் தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பொன்பத்திஏரி…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி ஏரி  புதிய பறவைகள் சரணாலயமாக மாறி வருவதால் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செஞ்சி முதல் பொன்பத்திஏரி வரை உள்ள ஏரிக்கரை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அண்மையில் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளதால் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாகவும் ஏரிப்பகுதி மாறி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது

ஸ்ரீபெரம்பத்தூர் அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே உள்ள வல்லக்கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இவரும் ஸ்ரீபெரம்பத்தூர் அடுத்த பெருச்சாப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது இருவரும் பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனிவாசன் கல்யாணியை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்ட ஆட்சியரின் காரை வழி மறித்த பெண்கள் – வசைபாடிய மாவட்ட ஆட்சியர்

விழுப்புரத்தில் காரை மறைத்து கேள்வி எழுப்பிய பெண்களை மாவட்ட ஆட்சியர் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மீனபுரியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை இரண்டு பெண்கள் சாலையின் நடுவே நின்று மறைத்தனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த காரை விட்டு கீழே இறங்கிய மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை வழி மறைத்து நின்ற பெண்களை ஆண்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் ராகவன்பேட்டை மக்கள்…!!

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ராகவன் பேட்டை பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு ராகவன் பேட்டை பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பஞ்சாயத்து சார்பாக ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி தான் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்றும் நகராட்சி ஆக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளாகியும் குடிநீருக்காக மாற்று ஏற்பாட்டிற்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கண்டனம் …!!

அண்ணா பல்கலைகழகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமானது என்பது தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துவதாக கூறி தமிழக அரசை மீறி மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியதாக சி.வ சண்முகம் கூறியுள்ளார். சூரப்பாவின் இந்த செயல் ஒழுங்கீனமானது என்றும் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விதிகளை மீறி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வறுமை” பசித்து அழுத குழந்தை…. பாலில் பூச்சிமருந்து கலந்த தாய்…. அடங்கிப்போன குழந்தையின் அழுகுரல்…!!

வறுமையினால் தாயே தனது 5 மாத குழந்தைக்கு பூச்சி மருந்து கலந்த பாலை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பார்ப்பன்குளத்தை சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா-யாஸ்மின் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரான சாதிக்பாஷா கொரோனா ஊரடங்கில் வேலை இழந்து கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார். குடும்பத்தில் வறுமை அதிகரிக்க யாஸ்மினிடம் குழந்தைகளை எப்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புதிய கலெக்டர் அலுவலகம்…. ஆரம்பப் பணிகள் தொடக்கம்… கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு…!!

புதிய கலெக்டர் அலுவலகத்தை கட்டும் பணிகளை பொதுத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதலமைச்சர் கடந்த 26 .11. 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.இதைஅடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக அங்கு இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள வீர சோழபுரத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் புதிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மிரட்டும் வறுமை…. கணவனின் கொடுமை…. சடலமாக அம்மா… வாயில் நுரையுடன் மகள்… விழுப்புரத்தில் துயரம் …!!

குடும்ப பிரச்சினையினாலும் கடன் பிரச்சினையினாலும் தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் சித்தேரிகரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரன்-கவிதா. இத்தம்பதிகளுக்கு பவித்ரா மற்றும் சர்மிளா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கஜேந்திரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தை நடத்த கவிதா பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். மிகுந்த வறுமையில் வாடி வந்த அந்த குடும்பத்தில் கஜேந்திரனின் தொல்லை அதிகரித்து கொண்டே சென்றது. இது ஒருபுறமிருக்க கடன் வாங்கிய இடத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டுக்குள் நுழைந்த மாற்றுத்திறனாளி…. என்ன வேணும்….? தனியாக இருந்த சிறுமி குத்திக் கொலை….!!

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி கத்திரிக்கோலால் குத்தி  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த சோளம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர் பிரியன். இவருக்கு 13வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும் ,2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில்   வெள்ளிக்கிழமை காலையில் பெற்றோர் இருவரும்  விவசாய வேலைக்கு சென்றனர். வீட்டில் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பிகள் இருந்தனர். பின்னர்  தம்பிகள் இருவரும் விளையாடச் சென்றனர். அதனால் பிற்பகல் பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10- ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் என்ஜினீயரிங் மாணவர் கைது..!!

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு துணை  தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான  சிறப்பு துணை தேர்வு கடந்த 21ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான கணிதப் பாட தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்கலில் ஒருவருக்கு தமிழ்வழிக் கல்விக் என குறிப்பிடப்பட்டிருந்த விடைத்தாள்  வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு ஆங்கில […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திண்டிவனம் தி.மு.க பெண் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம்  தி.மு.க எம்.எல்.ஏ.வும்  அவரது கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சீதாபதி சொக்கலிங்கம். 65 வயதான இவர் திமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் பெயர் சொக்கலிங்கம் ஒலக்கூர் கிழக்கு  ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகளான இருமல் ,சளி உள்ளிட்ட பிரச்சனைகள் இருவருக்கும் இருந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனையை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பிரபல ரவுடி வெட்டிக்கொலை” விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பு ….!!

  விழுப்புரம் அருகே கோபால்தாஸ் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்தாஸ் என்பவர் புதுவை தர்மாபுரியை சேர்ந்த பிரபல ரவுடி. இவர் திருந்தி  தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி, மாலதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி விழுப்புரம் அருகே பூந்துறை எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயந்தி வெளிநாட்டில் தற்போது வேலை பார்த்து வருவதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தம்பிக்கு கல்யாணம் ஆயிட்டு… ஆனா எனக்கு இன்னும் ஆகல… மனமுடைந்து அண்ணன் எடுத்த சோக முடிவு..!!

திண்டிவனம் அருகே திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் விட்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு சசிகுமார் (25) மற்றும் கார்த்திகேயன் (23) என 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே இளையவரான கார்த்திகேயனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.. ஆனால் சசிகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.. இதனால் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார் சசிக்குமார்.. அதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அரசுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகா”… வெளியாகும் தொண்டரின் வைரல் வீடியோ…!!

விநாயகர் சிலைகளை அகற்றக் கோரி காவல்தறையினர் கண்டித்த போது அரசுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகா என்று ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் வேண்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக மாநில பொறுப்பாளரானவர் ராஜகோபாலன். இவர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டருகே சிறிய அளவிலான விநாயகர் சிலை ஒன்றை வழிபாட்டுக்காக வைத்திருந்தார்.இது பற்றி தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து விநாயகர் சிலையை அகற்ற கூறி அறிவுறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இரண்டு குழந்தைகளுக்கு தாய்… கணவனின் சந்தேகம்… தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்…!!!

விழுப்புரத்தில் கணவன் சந்தேகம் கொண்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டை பகுதியில் ராஜாராமன் மகள் சரண்யா(31) என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் கலாநிதி என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதிலிருந்து கலாநிதி, தனது மனைவியை இந்த குழந்தைகள் எனக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தியாகத்தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி அன்னதானம்…!!

திண்டிவனம் நகர கழகம் சார்பில் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர கழகம் சார்பில் தியாக தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனத்தில் ஏழை எளியோர் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார பணியாளர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பாலசுந்திரம், வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கௌதம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிக்கடி அடித்து துன்புறுத்திய கணவன்… கொடூரமாக கொலை செய்த மனைவி மற்றும் மகள்..!!

குடித்துவிட்டு போதையில் தகராறு செய்த கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி, மகள் மற்றும் துணையாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வடவாம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் தனசேகரன். இவர் சின்னகள்ளிபட்டு பகுதியில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தன்னுடைய வீட்டில் தனசேகர் மர்மமான  முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் அந்த […]

Categories

Tech |