Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் இறந்த சிறுமி…. ஜப்தி செய்யப்பட்ட பேருந்து…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டபூண்டி கிராமத்தில் முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பாரதி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இந்த சிறுமி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருவிழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

ஹோட்டல் ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலை ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கலை ராஜ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலுக்கு சென்ற பூசாரி….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் புகழ்பெற்ற சுதந்திர மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கரநாராயணன் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் காலையில் கோவிலுக்கு சென்ற சங்கரநாராயணன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 1 1/2 அடி உயர வெள்ளி வேல், சந்தன கிண்ணம், பன்னீர் சொம்பு மற்றும் காணிக்கை பணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு மின் மோட்டாரை இயக்க முயற்சிக்கும் போது திடீரென சேகர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சேகரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முட்டத்தூர் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கருணாகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கருணாகரன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வளவனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பிரகாஷை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வைத்து மதுபாட்டில்கள் கடத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டை விட்டு வெளியேறிய முதியவர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டை விட்டு வெளியேறிய தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் இருக்கும் மரத்தில் முதியவர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போட்டுக் கொடுத்த கொடூர தாய் துளசி…. தப்பி ஓடிய பிரேம்…. விரட்டி சென்ற போலீஸ்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் வடிவழகன் -துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததன் காரணமாக துளசி தன்னுடைய தாய் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே துளசி தன்னுடைய இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளிவந்த நிலையில் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் துளசியை போலீசார் கைது செய்து துருவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் வடிவழகன் -துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததன் காரணமாக துளசி தன்னுடைய தாய் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே துளசி தன்னுடைய இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளிவந்த நிலையில் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கணவர் வடிவழகன்  துளசி மீது  காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடப்பாவி! பெற்ற குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட…. தாயின் கொடூரமான செயல்…!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மணப்பாடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் வடிவழகன்- துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி துளசி தன்னுடைய இரண்டு வயது குழந்தையை கணவர் இல்லாத நேரத்தில் கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய மொபைலில் எடுத்து வைத்துள்ளார். இதையடுத்து காயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையோரம் பிரசவம்…. சாதூர்யமாக செயல்பட்ட உதவியாளர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

பெண்ணிற்கு சாலையோரம் பிரசவம் பார்த்த மருத்துவர் உதவியாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி முல்லைநகர் குடியிருப்பு பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான குமாரி ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இதை கொடுத்தால் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தைலாபுரம் பகுதியில் உத்தரகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகுமார் 4 ஏக்கர் நிலத்தை தனது பெயரில் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தை தனது தந்தையான ஏழுமலையின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய உத்திரகுமார் முடிவெடுத்தார். இதற்காக தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உத்தரகுமார் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் கிராம நிர்வாக அலுவலரான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாயை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அபிராமேஸ்வரர் நகரில் ஜெயபால்-ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தியின் தயாரான ரங்கநாயகி என்பவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஆனந்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இறப்பிலும் இணைப்பிரியா தம்பதிகள்…. உயிரே உனக்காக நான்….!!!

விழுப்புரம் மேல்மலையனூர் சேர்ந்தவர்கள் பூங்காவனம் (95) , எல்லம்மாள் (83) தம்பதி. இவர்கள் சுமார் 60 வருடங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி எல்லம்மாள் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட பூங்காவனம் அவருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, அவர் உயிர் விட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்துள்ளார். அதன் பிறகு அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதிகளை கண்டு பலரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைனில் ரம்மி கேம்…. மனைவியிடம் கதறிய வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆஷா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு நித்திய ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் பச்சையப்பன் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏமாற்றிய பெண் தரப்பினர்…. குடும்பத்தினர் தற்கொலை முயற்சி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுதலைபூண்டி கிராமத்தில் நடராஜன்-ராஜகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற இந்த குடும்பத்தினர் திடீரென தாங்கள் கொண்டு சென்ற மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாலிபரின் ஏமாற்று வேலை….. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

இளம்பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது தோழியான திவ்யா என்ற பெண்ணுடன் காரில் பொம்மையார்பாளையம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கடற்கரை அருகில் நின்று இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவர்களின் நலனுக்காக…. ஆசிரியர்கள் செய்த சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவநேசன் என்பவர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இவ்வாறாக மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அங்கிருந்து ஓடி வந்துச்சு…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

காட்டுப் பன்றி கடித்து குதறியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏப்பாக்கம் பகுதியில் செல்வராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சவுக்கு மர தோப்பிற்கு ஆடுகளுக்கு தழை பறிப்பதற்காக செல்வராஜ் சென்றுள்ளார். இதனையடுத்து காப்பு காட்டுக்குள் இருந்து வந்த காட்டுப்பன்றி செல்வராஜை துரத்தி சென்றுள்ளது. அதன் பின் காட்டுப்பன்றி செல்வராஜை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படியா பயணம் செய்யுறது… காற்றில் பறக்கவிட்ட விதிமுறைகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்துக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். கொரோனா தொற்றின் 2 – வது அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தார் தீடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக அரசின் விதிமுறைகளை மீறி புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் 56 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதனைப் பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளிய போனது தப்பா….? அதிர்ச்சியடைந்த தம்பதிகள்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் 24 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பகுதியில் கோபால்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 24 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“1 யூனிட் கரண்ட் சார்ஜ் செய்தால்” 50 கி.மீ செல்லும் சைக்கிள்…. பெட்ரோலுக்கு பை சொன்ன இளைஞர்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர் பாஸ்கரன். இளைஞரான இவர் ஒரு யூனிட் மின்சாரத்தை வைத்து 50 கிலோ மீட்டர் செல்லக்கூடிய மிதிவண்டி ஒன்றை வடிவமைத்துள்ளார். டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்த இவர் பத்து வருடத்திற்கு மேலாக பேட்டரி மூலம் இயங்க கூடிய ஒரு புதிய சைக்கிளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதில் பல்வேறு தோல்விகளைக் கண்ட பிறகு ஒரு யூனிட் சார்ஜ் செய்தால், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அங்க எதுவுமே இல்ல” அதிகாரி அளித்த புகார்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர் மின் துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவர்களது வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அங்கு பணம் மற்றும் நகை எதுவும் கிடைக்காததால் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முரளி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அங்கு நாடகத்தை பார்த்தோம்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் விவசாயியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்திரசேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கோவிலில் இரவு நடந்த மேடை நாடகத்தை பார்த்து விட்டு குடும்பத்தினர் மீண்டும் அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தாய் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆயந்தூர் பகுதியில் விக்டர் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடலூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆனந்தராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு மது அருந்தி விட்டு வந்ததால் ஆனந்த ராஜை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மன […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்தை இயக்கும் போது…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

பேருந்தை இயக்க முயற்சி செய்யும் போது டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வசிக்கும் அசோக் குமார் என்ற டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சாப்பிடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொள்ளார் கிராமத்தின் சாலையோரம் இருக்கும் ஹோட்டல் அருகில் அசோக்குமார் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் திருவண்ணாமலை நோக்கி பேருந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மேற்கூரையை காணும்…. ஆடிட்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ஆடிட்டிங் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரம்பை கிராமத்தில் ஆடிட்டரான சக்திதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஆடிட்டிங் அலுவலகம் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் அலுவலகத்தை பூட்டி விட்டு சக்திதாசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை அலுவலகத்தை திறக்க சென்ற போது அதன் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து சக்திதாசன் அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இனிமேல் இப்படி இருப்பீங்களா…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…!!

கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பாத்திரக்கடை, ஸ்டுடியோ, கண்ணாடி கடை, மளிகை கடை போன்றவற்றில் உரிமையாளர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 12 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அவர் தான் தூங்குறாருன்னு நினைச்சேன்” வாலிபரின் கொடூர செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

தொழிலாளியை அடித்துக் கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துத்திபட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் பிரச்சனையால் வாசுதேவன் குடும்பத்தினருக்கும், அவரது நண்பரான சுகுமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் கண்ணனை சுகுமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கமாக கண்ணன் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அதே பகுதியில் வசித்த ஆறுமுகம் என்ற தொழிலாளி தூங்கி கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறு சிறு சேட்டைகள் செய்ததால்….. சித்தியின் கொடூர செயல்…. விசாரணையில் அம்பலமான நாடகம்….!!

பெண் குழந்தையை சித்தி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிகரை பகுதியில் ஷமிலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவர்களின் குழந்தை நசீபா என்பவரை ஷமிலுதீனின் தங்கை பராமரித்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு அப்ஷனா என்ற பெண்ணை ஷமிலுதீன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எங்களுக்கு இதை செஞ்சே ஆகணும்…. கொந்தளித்த இளைஞர்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொரவி காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழுதாவூர் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளா….? வாலிபரின் மாற்று யோசனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பக்கமேடு கிராமத்தில் பாஸ்கரன் என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரன் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைக்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இரும்பு கடையில் இருந்து ஒரு பழைய சைக்கிளை வாங்கி அதில் கண்ட்ரோலர், மின் மோட்டார், பேட்டரி போன்ற 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கருவிகளை பொருத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போனில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

செல்போனில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் சுகுமார் நண்பராக இருந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாசுதேவனின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டார். இதனை அறிந்த வாசுதேவன் செல்போனை கேட்டபோது 100 ரூபாய் கொடுத்தால் தான் தருவேன் என்று சுகுமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த விலையை திரும்ப பெறனும்…. தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்காக ஒரு பாடையை உருவாக்கி அதில் சமையல் எரிவாயு சிலிண்ர் மற்றும் மாட்டு வண்டியில் காரொன்று ஏற்றியும் வைத்திருந்தனர். இதனையடுத்து தேர் பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து சிலிண்டருக்கு கட்டப்பட்ட பாடையை கட்சியின் மகளிர் அணியினர் தங்கள் தோளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முஸ்லீம் பண்டிகையை முன்னிட்டு” அடித்து பிடித்து வாங்கினர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஆடுகளை வியாபாரிகள் அடித்துப் பிடித்து வாங்கி சென்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த சந்தையில் கருவாடும், ஆடுகளும் வியாபாரிகளுக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றது. இதனால் சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து பெரும்பாலான ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முந்தைய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படி நடந்திருக்கும்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திடீரென பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கரை பகுதியில் ஷமிலுதீன்-நஸ்‌ரீன்  என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் பிரசவத்தின்போது நஸ்‌ரீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது குழந்தையை மட்டும் மருத்துவர்கள் காப்பாற்றினர். எனவே நஸ்‌ரீன் இறந்த பிறகு அவரது குழந்தைக்கு நசீபா என்று பெயர்சூட்டி ஷமிலுதீனின் தங்கை வளர்த்து வந்தார். அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டீ அருந்த சென்ற முதியவர்…. இப்படி நடக்கும்னு நினைக்கல…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

டீக்கடையில் வைத்து முதியவரிடம் மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் வசந்த புரத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு கடையில் டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஜெயராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி 10 ஆயிரத்து 500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கார் மோதி விபத்து…. ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எடப்பாளையம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு யாசினி என்ற மகள் இருக்கின்றார். இவரை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக ரவி காரில் புறப்பட்டார். அந்தக் காரை அண்டபள்ளத்தை சேர்ந்த குப்பன் மகன் அருள் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி- திண்டிவனம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதுக்கு இப்படி பண்ணாங்க…. எல்லாம் நொறுங்கி நாசமானது…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பேருந்தின் மீது கல்லை வீசி விட்டு தப்பி சென்ற 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு இரவு 11 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்தை காஞ்சிபுரம மாவட்டம் தின்பசமுத்திரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் கண்டக்டராக சென்னை கிண்டியை சேர்ந்த விண்பால் என்பவர் இருந்துள்ளார். இந்த பேருந்தில் அரசு விதிகளின்படி 50% பயணிகள் பயணம் செய்தனர். இதனையடுத்து பேருந்து கிழக்குக் கடற்கரைச் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தூர்வார தான் போனோம்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி பகுதியில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான விவசாய கிணற்றை தூர்வார முடிவெடுத்து கிரேன் எந்திரத்தை வரவழைத்துள்ளார். அப்போது அந்த கிணற்றுக்குள் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தொப்புள் கொடியுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவியின் விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள  கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி மாலை மாணவி ரம்யா திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

27 கிலோ மீட்டர் இழுத்து வரப்பட்ட உடல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு….!!

ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரிலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரயிலானது மாலை 6 மணி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு வந்துள்ளது. அப்போது இரண்டு கால்களும் இல்லாமல் உடல் சிதைந்த நிலையில் வாலிபரின் சடலம் ரயில் என்ஜினில் சிக்கி கொண்டிருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

யாரு இப்படி செஞ்சிருப்பா….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

காணாமல் போன 14 வயது மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் தனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக பச்சையப்பன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரிசி குடோனில் இதுவா இருக்கு…? வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

அரிசி மில் குடோன்களில் புகையிலை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு அரிசி மில் குடோனில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததோடு, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குளிக்க சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பாலை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சந்தோஷ் படியில் இறங்கியபோது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் தலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

2 மாதங்களுக்கு பிறகு மீண்டும்…. சமூக இடைவெளியுடன்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

நீண்ட நாட்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பொது போக்குவரத்திற்கு தடை விதித்தது. மேலும் தமிழக பேருந்துகளை புதுச்சேரி மாநிலம் வழியாக இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதமாக புதுச்சேரிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீடியோ வைத்து மிரட்டிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. போக்சோ சட்டத்தில் கைது….!!

ஆபாச வீடியோவை எடுத்து பிளஸ்-1 மாணவியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காட்டுகுளம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு, அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 பயிலும் 16 வயதுடைய மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி முருகன் அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்ததோடு, தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து முருகன் வீடியோவை மாணவியின் செல்போனுக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலையில் கல் விழுந்ததால்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

பெண் தலையில் கல் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரணி தாங்கள் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செஞ்சி பகுதியில் இருக்கும் கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் கற்கள் ஆங்காங்கே சிதறின. இந்நிலையில் கல்குவாரியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த செல்வியின் தலை மீது ஒரு பெரிய கல் விழுந்தது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நீ உண்மையான டாக்டர் இல்லையா…. முதியவருக்கு நடந்த சோகம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

போலி டாக்டர் அளித்த சிகிச்சையால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டி.எம்.ஜி. நகரில் வசிக்கும் டாக்டர் மணிகண்டனிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று ஆறுமுகத்திற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வழக்கம் போல் டாக்டர் மணிகண்டனிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது டாக்டர் மணிகண்டன் ஆறுமுகத்திற்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் சிக்கிய வாலிபர்…. எம்.எல்.ஏ. செய்த செயல்…. பாராட்டி வரும் பொதுமக்கள்….!!

விபத்து ஏற்பட்ட வாலிபருக்கு முதலுதவி அளித்த சட்டமன்ற தொகுதி உறுப்பினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஆர். லட்சுமணன் கோலியனூர் பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பனங்குப்பம் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் ராகவன்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த விபத்தில் […]

Categories

Tech |