Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது, சாராயம் விற்பனை… 20 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!!

மது, சாராயம் விற்ற 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் மது பிரியர்கள் பலர் முன் கூட்டியே தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி வைத்துக் கொண்டார்கள். கடைகள் திறக்காததால் மது கிடைக்காதவர்கள் சாராயத்தை தேடி சென்று குடித்தார்கள். மேலும் சிலர் அதிக மது பாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

களை கட்டிய எருது விடும் விழா… “முதல் பரிசு ரூ 70 ஆயிரம்”…. 353 காளைகள் பங்கேற்பு…!!!

மேட்டு இடையம்பட்டியில் எருதுவிடும் விழாவில் 353 காளைகள் கலந்து கொண்டன. வேலூர் மாவட்டம், பாகாயம் அருகில் மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. மேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கிய இந்த விழாவில் ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த விழாவிற்கு வந்தவர்களை வருவாய் ஆய்வாளர் உலகநாதன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சித்ரா பவுர்ணமி திருவிழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க… பாதுகாப்பு பணிக்கு 350 போலீசார்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி விழாவிற்கு 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்த வருடம் இன்று சனிக்கிழமை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குப்பைகளை எடுக்க வருவதில்லை…. ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ, மேயரை…. முற்றுகையிட்டு வியாபாரிகள் புகார்..!!

வேலூரில் மாங்காய் மண்டிக்கு ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ, மேயரிடம் வியாபாரிகள் புகார்களை தெரிவித்தனர். வேலூரில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் மாங்காய் மண்டி, நிக்கல்சன் கால்வாய் ஆகிய இடங்களை ஆய்வு செய்ய சென்றார்கள். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் நிறைய புகார்களை தெரிவித்தார்கள். அப்போது வியாபாரிகள் பேசியதாவது, மாங்காய் மண்டியில் நாள்தோறும் குப்பைகள் அதிகமாக சேருகின்ற நிலையில் அதை அள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த குப்பைகளை நாங்களே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி… ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!

வேலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வேலூர் மாவட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிலாளர் சங்கம், அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்க மாவட்ட பொது செயலாளர் எஸ். ஏ. சிம்புதேவன் தலைமை தாங்கிய இந்தப் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கே.லோகேஷ் குமார் முன்னிலை வகித்துள்ளார். மேலும் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். தேவதாஸ், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் ஏ. எஸ். சங்கர், ஆட்டோ தொழிலாளர்கள் உட்பட பல […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேர்க்கடலை விலைக்கு தருவீங்களா…. மூதாட்டியிடம் 6 பவுன் நகையை பறித்து விட்டு பைக்கில் பறந்த வாலிபர்..!!

பள்ளிகொண்டா அருகில் வேர்க்கடலை பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்று விட்டார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் அகரம்சேரி எஸ்.என் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(65). இவர்கள் பள்ளிக்குப்பம் சாலையில் உள்ள நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரங்கசாமி குடும்பத்துடன் நிலத்தில் வேர்க்கடலை பறித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்டாப்பாக ஆடையணிந்து 25 வயதுள்ள வாலிபர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாடு விடும் விழாவை நடத்தக்கூடாது…. ஊராட்சி மன்ற தலைவியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

மாடுவிடும் விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஊராட்சி மன்ற தலைவி கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், கே. வி.குப்பம் தாலுகாவில் உள்ள மாளியப்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நடத்துவது தொடர்பாக இரு வேறு தரப்பினருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் ஊர் மேட்டுக்குடி நவீன்குமார் தரப்பினர் மாடு விடும் திருவிழாவுக்கு முறையாக அனுமதி  வாங்கினர். ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி தங்கள் தரப்பினரை இந்த மாடு விடும் விழாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அம்பேத்கார் பிறந்த நாள்… சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய கலெக்டர்…!!!

வேலூரில் அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலூரில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி கலெக்டர் வளாகத்தில் இருக்கின்ற  அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் குமரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் அரசு அலுவலர்கள் அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இனி மேல் அரசு அலுவலகம் முன்…. “இப்படி செய்தால் கடும் நடவடிக்கை”…. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை.!!

அரசு அலுவலகங்களின் முன் தற்கொலை முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரித்தார். கலெக்டர் அலுவலகம், காவல் நிலையம் முன்பாக சிலர் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிப்பதும், உடல்களை கத்தியை கொண்டு வெட்டுவதும் என மிரட்டல் விடுத்து தற்கொலை முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  கூறியதாவது, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சம்பந்தபட்ட துறையிடம் தீர்வு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மெசேஜை நம்பி ரூ 19,000 இழந்த நர்ஸ்…. மீட்டுக் கொடுத்த சைபர்கிரைம் போலீஸ்..!!

நர்ஸ் இழந்த ரூ19,000-த்தை சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர். வேலூரில் வசித்து வருபவர் திவ்யா(29). இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து  வருகின்றார். இவருடைய செல்போனுக்கு கடந்த மாதம் வங்கியிலிருந்து அனுப்பியது போல ஒரு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜ்ஜில் வங்கி விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இல்லையெனில் உங்களின் வங்கி சேமிப்பு கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த மெசேஜில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உங்க அக்கவுண்ட் முடக்கப்படும்…. “40,000 பணத்தை இழந்த ராணுவ வீரர்”… மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீசார்..!!

ராணுவ வீரர் இழந்த ரூ 40,000 -த்தை சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர். வேலூர் மாவட்டம், அம்முண்டியில் வசித்து வருபவர் ராணுவ வீரர் பாண்டியராஜன். இவருடைய செல்போனுக்கு கடந்த மாதம் வங்கியிலிருந்து அனுப்பியது போல ஒரு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜ்ஜில் வங்கி விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இல்லையெனில் உங்களின் வங்கி சேமிப்பு கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த மெசேஜில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவி வீட்டிற்கு வராததால்… கையை அறுத்துக் கொண்ட கணவர்… பரபரப்பு சம்பவம்…!!!

மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி வேலூர் வடக்கு காவல் நிலையம் முன் வாலிபர் கையை அறுத்துக் கொண்டார். வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 30  வயதுள்ள ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அதன்பின் அவர் வடக்கு காவல் நிலையம் வந்து திடீரென்று எதிர்பாராத விதமாக தனது கையை அறுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். அதன் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஜலகண்டேஸ்வரர் கோவிலில் குவிந்த மக்கள்”… வழக்கமான நேரத்தில் நடை சாத்தவில்லை”…!!!!

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததால் மதியம் நடை சாத்தப் படவில்லை. நேற்று சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே வீட்டை சுத்தம் செய்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டு குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 6 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்ததால் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூரில் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள்”… சாமிக்கு சிறப்பு அலங்காரம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். இதுபோலவே திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் இருக்கும் வெங்கடேச பெருமாள் கோவில், புதிய பஸ் நிலையம் அருகே இருக்கும் செல்லியம்மன் கோவில், சைதாப்பேட்டை பலனி ஆண்டவர் கோவில் முதலானவற்றில் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பாலமதி முருகர் கோவிலில் இருக்கும் 29 அடி முருகர் சிலை”… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

மலையடிவாரத்தில் 29 அடி உயரத்தில் இருக்கும் முருகரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் பாலமதி முருகர் கோவில் மலை அடிவாரத்தில் இருக்கின்றது. அங்கு முருகர் சிலையானது 29 அடி கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கும். புத்தாண்டை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழ் புத்தாண்டு என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனசேகர் செய்தார். இதைப் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குருபெயர்ச்சியை முன்னிட்டு ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்”… பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு உற்சவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மேலும் சங்கரன் பாளையத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“விடுதிகளில் தங்க வரும் வெளிநாட்டவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்”… உரிமையாளர்களுக்கு வேலூர் சூப்பிரண்டு அறிவுரை…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் தங்க வரும் வெளிநாட்டவர்கள் பற்றி ஆன்லைனில் பதிவு செய்த பிறகே தங்க வைக்க வேண்டும் என மாவட்ட சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக சத்துவாச்சாரியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் விடுதி உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் சிபி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கிய நிலையில் பொருளாளர் தேஜாமூர்த்தி, செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆவின் டெண்டரை ரத்து செய்ய… கலெக்டர் பெயரில் பொய்யான உத்தரவு நகல்… ஒப்பந்ததாரர் கைது…!!

ஆவின் டெண்டரை ரத்து செய்யக்கோரி வேலூர் கலெக்டர் பெயரில் பொய்யான உத்தரவு நகலை அனுப்பிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாகப்பிரிவு இமெயிலில் இருந்து கடந்த மாதம் எட்டாம் தேதி அதே நிர்வாகத்தின்  பொது மேலாளருக்கு  இமெயிலுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. பொது மேலாளர் ரவிக்குமார் அந்த மெயிலை பார்த்தபோது அதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனின் கையெழுத்து போடப்பட்ட உத்தரவு நகல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தாய் கண் முன்னே நடந்த பரிதாபம்… ரயில் மோதி மகன் பலி…!!!

வேலூர் அருகே ரயில் மோதி தாய் கண் முன்னே மகன் பலியானார். வேலூர் அருகில் சித்தேரியில் வசித்து வருபவர் வெங்கடேச பெருமாள். இவர் மனைவி ராணி. இவர்களுடைய மகன் கூலித்தொழிலாளி கணேசன்(33). சித்தேரி பகுதிக்கு சென்ற கணேசன் வெகுநேரமாகியும் வீடு வராததால் அவரைத்தேடி அவரது தாயார் ராணி ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த கணேசனை அழைத்துக்கொண்டு ராணி வீட்டிற்கு வரும்போது இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் கடக்கும்போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது பயங்கரமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருப்பதியிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்த முயற்சி”… கடத்த முயன்ற 2 நபரை கைது செய்த வேலூர் போலீசார்…!!!

வேலூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் சரக டிஐஜி ஆனி விஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு கஞ்சா கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியிருன்றனர். இந்நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

2 வருஷமா உயர்த்தல…. “சம்பளத்தை உயர்த்தனும்”…. தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு..!!

தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக கொடுத்துள்ளனர். அதில், வேலூர் மாவட்ட ஊராட்சி களில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீடுகளை இடிக்குறாங்க…. மாற்று இடம் கொடுங்க… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…!!

வீடுகளை இடிப்பதால் மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம், ரோஜாமேடு பின்புறத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறுபடியும் திறந்துட்டாங்க…. “டாஸ்மாக் கடையை நிரந்தரமா மூடுங்க”…. கலெக்டரிடம் மனு கொடுத்த மக்கள்..!!

சத்துவாச்சாரியில் மதுபான கடையை  நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை புகார் மனுவாக  கொடுத்துள்ளனர். வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் மந்தைவெளியில் இருந்து பால் ஆற்றுக்கு செல்லும் பாதையில்  புதிதாக மதுபானக்கடை கடந்த சில வாரங்களுக்கு முன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீர்நிலைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு…. “வேறு இடத்தில் பட்டா கொடுங்க”…. கலெக்டர் அறிவுறுத்தல்…!!

நீர்நிலைப் பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்துள்ளார். மேலும் உதவி கலெக்டர்கள் வேலூர் பூங்கொடி, குடியாத்தம் தனஞ்செயன் மற்றும் தாசில்தார்கள் பங்கேற்றனர். அப்போது கலெக்டர் பேசியதாவது, வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆம்புலன்சில் “குவா, குவா” சத்தம்… பிரசவம்… தாயும் சேயும் நலம்…!!

வேலூர் அருகில் ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள  நாச்சிமேடு கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி பிரகாஷ். இவருடைய மனைவி 23 வயதுடைய சந்தூரா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சந்திராவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நேதாஜி அங்கு விரைந்து சென்று அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரிசி, பருப்பு, தக்காளியுடன்….. “செம்மரம் வெட்ட சென்ற கும்பல்”…. போலீசை கண்டதும் தப்பியது…. சிக்கிய காரை வைத்து விசாரணை…!!

பள்ளிகொண்டா அருகில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிறுத்த முயன்றபோது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே காவல்துறையினர் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்று பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடிக்கடி என்ன மிரட்டுறாரு…. “மனமுடைந்து ஸ்டேஷன் முன் வாலிபர் செய்த செயல்”…. பரபரப்பு சம்பவம்..!!

சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் மேல்பாடி காவல் நிலையம் அருகில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டார். வேலூர் மாவட்டம், திருவலம் அருகில் குகையநல்லூர் காலனியில் வசித்து வருபவர் சரத் (26). இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வைத்து தொழில் பார்த்து வருகின்றார். இந்நிலையில் மேல்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவர் தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாக கூறி மேல்பாடி காவல் நிலையம் அருகில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்தியை திணிக்கும் மத்திய அரசு… “வன்மையாக கண்டிக்கிறோம்”…. தொல்.திருமா ஆவேசம்..!!

மத்திய அரசின் இந்தி திணிப்பை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், பொய்கை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 1,500 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நீலம் சந்திரகுமார் தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாவட்ட துணை செயலாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த தகவல்…. விரைந்து சென்று… சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

வேலூரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி கணபதி நகரில் காட்டன் சூதாட்டத்தில்  ஈடுபடுவதாக சத்துவாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது கணபதி நகர் சுடுகாடு அருகில் சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, தோட்டம் பாளையத்தில் வசித்துவந்த கோபி(35) என்பதும், அவர் காட்டன் சூதாட்டத்தில்  ஈடுபட்டு வந்துள்ளார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது…. 4 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய நபர்..!!

திருவலம் அருகில் 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து செல்வன், காவல்துறையினர் சேர்க்காடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படி ஒரு நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியில் வசித்துவந்த பழனி(42)  என்பதும், அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ற நபர் கைது… 18 பாட்டில்கள் பறிமுதல்…!!

வேலூரில் மது பாட்டில்களை வீட்டில் மறைத்து வைத்து விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், காவல்துறையினர் நேற்று முன்தினம் ஓல்டுடவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் அங்கு உள்ள வீடுகளில் காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, உத்திர மாதா கோவில் தெருவில் வசித்து வந்த சண்முகம்(36) என்பவரது வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவர்களுக்கு…. கலெக்டர் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு…!!

தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்ததாவது, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கபட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 200 மாணவ- மாணவிகளுக்கு படிக்கின்ற காலத்தில் ஏதாவது ஒரு வருடம் ஒரு முறை ரூ 50,000 கொடுக்கப்படுகிறது. இந்த நிதி உதவி பெறுகின்ற மாணவர்களின் குடும்ப […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஜலகண்டேஸ்வரர் பிரம்மோற்சவ விழா”… ரிஷப வாகனத்தில் வீதி உலா…!!!

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாவது நாளான நேற்று ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடைபெற்று உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகின்ற நிலையில் விழாவின் 5-வது நாளான நேற்று ஜலகண்டேஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்து ரிஷப வாகனத்தில் உற்சவராக பக்தர்களுக்கு அருள் புரிந்தார். மேலும் அகிலாண்டேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்து வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் டிரைவரை தாக்கிய 2 நபர்கள்”… பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்…!!!

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்ய கோரி அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். செல்வம் என்பவர் அரசு பஸ் டிரைவர். இவர் அம்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் பொழுது பேருந்துகள் வரிசையாக நின்றதால் உள்ளே செல்வதற்காக ஹார்ன் அடித்துள்ளார். இதற்கு பஸ் நிலையத்திற்கு வெளியே உள்ள குளிர்பானங்கள் விற்கும் கடையில் பணிபுரியும் 2 தொழிலாளர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காரில் சென்றபோது கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்”… நான்கு பேருக்கு காயம்…!!!

காரில் சென்று கொண்டிருந்த பொழுது நிலைதடுமாறி மரத்தின் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலி. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் கொண்டாடுவதற்காக பேராசிரியர் தேவராஜ், சென்னை ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்த சத்தியநாராயணன்(24) அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களான அரவிந்த், கார்த்திபன், ருத்ரமூர்த்தி உள்ளிட்ட 5 பேரும் அம்முண்டி வழியாக திருவள்ளூர் சென்று கொண்டிருக்கும் பொழுது காரை ஓட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தொழிலாளியின் பிணம்”… போலீசார் விசாரணை…!!!

வேலூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி. வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை லால்சிங் குமந்தன் தெருவை சேர்ந்த 55 வயதுடைய சந்தானம் என்ற தொழிலாளி தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார். இவர் சென்ற 6ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், அதற்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டு பூட்டிய நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து”… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலையில் திடீரென பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீயால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியை சேர்ந்த முனீர் என்பவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவில் பிளாஸ்டிக் கழிவு குடோன் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை பவுடராக மாற்றி பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ பற்றியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல்”… இளைஞர் கைது…!!!

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு பஸ்ஸில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் போலீஸ் நிலையத்துக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேர்  வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் படி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், ஏட்டுகள் லட்சுமி, மஞ்சுநாத் ஆகியோர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப் பொழுது ஆந்திராவில் இருந்து வந்து கொண்டிருந்த பஸ்சை நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோட்டை அகழியில்.… “செத்து மிதந்த மீன்கள்”.… வீசிய துர்நாற்றம்…!!

வேலூர் கோட்டை அகழியில் மீன்கள் இறந்து கிடந்ததால் துர்நாற்றம் வீசியது. வேலூர் மாவட்டம், கோட்டை அகழியில் கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையால் நீர் நிரம்பி உள்ளது. இந்த கோட்டையை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் அருங்காட்சியகத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அகழியில் மீன்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை பலர் தூண்டில் போட்டு பிடிக்கின்றனர். இந்நிலையில் அந்தக் கோட்டை அகழியில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லத்தேரி பஸ் நிலையத்தில்…. “6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பெண் உட்பட இருவர்”…. போலீசார் அதிரடி..!!

லத்தேரி பேருந்து நிலையத்தில் ஒரு பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையத்தில் லத்தேரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் இருந்தார்கள். அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த 49 வயதுடைய நீதிராஜன் மற்றும் செல்வம் என்பவருடைய மனைவி 32 வயதுடைய நதியா ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூரில் ராணுவ வீரரின் வீட்டிலேயே திருடர்கள் கைவசம்”… 33 சவரன் நகை கொள்ளை…!!!

வேலூர் மாவட்டத்தில் பட்டப்பகலிலேயே இராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் கைவசம். ராணுவ வீரரான பூபாலன் என்பவரின் மனைவி ராதிகா வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது துணிகள் பொருட்கள் ஆங்காங்கே கிடந்தது. பின்னர் பீரோவை பார்த்தபொழுது பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால்… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், செதுவாலை இந்திரா நகரில் வசித்து வந்தவர் 52 வயதுடைய அண்ணாமலை. இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்‌. இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், நான்கு மகன்களும் உள்ளார்கள். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மது அருந்துவதற்காக குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் மாவட்டம்…”மத்திய, மாநில அரசை எதிர்த்து மக்கள் நீதி மையத்தினர் ஆர்ப்பாட்டம்”…!!!

வேலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மக்கள் நீதி மையம் சார்பாக ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் எம்.ஜி.சத்திய நாராயணன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்க நிர்வாகிகளான ரஞ்சித், ஸ்டாலின், திலீப், கார்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் இவைகளின் விலைகளை கட்டுப்படுத்த கோரியும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கான புது முயற்சி”… ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!

வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கு ஆரம்பமாக ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்தார் கலெக்டர். வேலூர் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களை வழிநடத்தி அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் மையம் அமைக்கப்பட்டு தேர்வு செய்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளை அளித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இதன் ஆரம்பமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஆக்கி போட்டியை மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் தொடங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் மாவட்டத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்ட 13 ரோந்து வாகனங்கள்”…!!!

வேலூர் மாவட்டத்தில் காவலர்களுக்கு 13 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து கார்கள் உட்பட 47 ரோந்து வாகனங்கள் இருந்த நிலையில் நேற்று கூடுதலாக 13 மோட்டார் சைக்கிள்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதை போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கண்ணன் தொடங்கிவைத்த நிலையில் கூடுதலாக 15 வாகனங்கள் வாங்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எதிர்பாரா விபத்து…. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்…. 3 பேர் படுகாயம்….!!

சென்னையை சேர்ந்த ரஞ்சன் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாக மேல்வெட்டுவாணம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் பயணித்த 4 பெண்களில் 2 பெண்களும் காரை ஓட்டிச் சென்ற ரஞ்சனும் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விபத்துக்கு காரணமாகும் கால்நடைகள்…. உரிமையாளருக்கு அபராதம்…. அதிகாரி கூறிய தகவல்….!!

வேலூர் மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் ஆடு, மாடு கால்நடைகளால் அடிக்கடி சாலையில் விபத்துகள் ஏற்படுகிறது என புகார்கள் கமிஷனர் அசோக்குமாருக்கு  சென்றடைந்துள்ளது. அதன் அடிப்படையில் கால்நடைகளை அப்புறப்படுத்தும்படி கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் இன்று வேலூர் பழைய பஸ் நிலையம், இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே சுற்றித்திரிந்த 5 மாடுகளை பிடித்து சென்றனர். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 2000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குப்பைகள் மீது தீ வைத்த மர்ம நபர்கள்…. வாகன ஓட்டிகள் சிரமம்..!!

கோட்டை வளாகத்தில் உள்ள குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம்  வடக்கு காவல் நிலையம் எதிரில் கோட்டை வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அகழி கரையோரத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் குவிந்து கிடைக்கின்றன . இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த குப்பைகளில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காணப்பட்டதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பணிகளை ஆய்வு செய்த சூப்பர்வைசர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பூஜாலிப்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூப்பர்வைசரான  ஜெகன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன்குமார் குடியாத்தம் டவுன் பகுதியில் ஒரு  வீட்டில் நடைபெற்ற  கட்டுமான பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெகன்குமாரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஜெகன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஜெகன்குமாரை பரிசோதித்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமையல் புளியை சுத்தம் செய்த பெண்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

நகையை  பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகல் ஆர்.எஸ். பகுதியில் ராமமூர்த்தி-கீதாஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீதாஞ்சலி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் அமர்ந்து சமையலுக்கு தேவையான  புளியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள்  கீதாஞ்சலியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories

Tech |