லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று மளிகை பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இருந்த லாரியின் மீது மோதியது. […]
