பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவி செட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தில் நரசிம்மன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நரசிம்மன் தான் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளராக வேலை பார்த்து வருவதாக கூறி வீட்டில் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வேலூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மற்றும் […]
