தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் […]
