கணவனின் இரண்டாவது திருமணத்தால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேன்கனிமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுரேஷ்-பார்வதி தம்பதியினர். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் முதல் மனைவியான பார்வதியை சுரேஷ் அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். […]
