பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள நரியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்-சுடர்மதி என்ற தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாக மாமியார் வீடான பத்தலப் பல்லி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வின்ராஜ், ரோஷன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அஸ்வின்ராஜிக்கு காய்ச்சலுடன் வாந்தி ஏற்பட்டதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் அஸ்வின்ராஜை பரிசோதனை செய்யாமலயே அங்கிருந்த செவிலியரிடம் போன் […]
