நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல்புரம் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் முருகனும், அழகேசபுரம் பகுதியில் வசிக்கும் கோகுல்ராம் என்பவரும் மோட்டார் சைக்கிளில் தாளமுத்து நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது […]
