சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது நீதிபதிகள் அதன் விரிவான உத்தரவை தெரிவித்து வருகின்றனர். டிஜிபியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக விசாரணையை கையில் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய […]
