ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ சிதம்பரனார் துறைமுகம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதற்கு அருகில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தினர் மற்றும் தொழிலாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் மையம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த வங்கி ஊழியர்கள் உடனடியாக தெர்மல் நகர் காவல் துறையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
