கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சாத்தான்குளத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகதின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாத்தான்குளத்தில் தடுப்பூசி முகாமில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், […]
