Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கார் ஓட்டுநரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரணி பகுதியில் கார் டிரைவரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த குமார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நாங்க சரி பண்ணி தரோம்” காண்டிராக்டருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட காண்டிராக்டரை தாக்கி 2 பேர் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தலக்கோணம் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சுரேஷின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பழுது நீக்கி தருவதாக கூறி சுரேஷை அழைத்து சென்றுள்ளனர். அதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சகோதரர் அளித்த புகார்…. தோண்டி எடுக்கப்பட்ட மூதாட்டியின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

சகோதரர் அளித்த புகாரின் படி மூதாட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் பகுதியில் ஜபூர் நிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு இவரது கணவர் அமீர் அலி இறந்து விட்டதால் நிஷா தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி திடீரென உயிரிழந்த ஜபூர் நிஷாவின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் ஜபூர் நிஷாவின் தம்பியான முகமது இலியாஸ் என்பவர் ஏரல் காவல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. டாஸ்மார்க் பணியாளர்களின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பணியாளர்கள் கூறும் போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் பணியாளர் துளசிதாசன் கொலை செய்யப்பட்டதோடு, விற்பனையாளர் ராமு படுகாயம் அடைந்துள்ளார். மேலும் ஈச்சம்பாக்கம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் கோபி சமூக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு வந்த உறவினர்கள்…. 500 ரூபாயால் நடந்த கொடூரம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

500 ரூபாய் பணத்தை கேட்டு மனைவியை கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் கூலி தொழிலாளியான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுடலை முத்தம்மாள் தம்பதியினரின் மகனான பெருமாள் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனு அளித்த பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் அரசு வேலை…. ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் தந்தி காலனியில் தெய்வானை என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த மே மாதம் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.அதில் ஒருவர் மனவளர்ச்சி குன்றியவர், மற்றொருவர் இருதயநோய் குறைபாட்டுடன் பிறந்தவர். இந்நிலையில் வருமானம் ஏதும் இல்லாமல் இரண்டு பிள்ளைகளை வைத்து கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு சென்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜாவை சந்தித்து மனு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு வேடங்கள்…. மேளதாளத்துடன் ஊர்வலம்…. உற்சாகத்தில் பக்தர்கள்…!!

பக்தர்கள் வேடமணிந்து முத்தாரம்மன் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்லப்பாண்டியன் நகரில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேடம் அணிந்து 41 நாட்கள் விரதமிருந்து முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தசரா விழாவிற்கு ஆண்டு தோறும் சென்று வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றுள்ளனர். மேலும் இவர்கள் வரும் வியாழக்கிழமையன்று இரண்டு பேருந்துகள் அமைத்து குலசேகரப்பட்டினத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுங்க…. விடுதலை சிறுத்தை கட்சியினரின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பஜாரில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் உட்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்திய போலீஸ்….. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதன் பின் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை காவல்துறையினர் பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காண்டிராக்டர்…. சட்டென மோதிய ரயில்….. தூத்துக்குடியில் சோகம்…!!

ரயிலில் அடிபட்டு காண்டிராக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மல் நாராயணா தெருவில் ரெனிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வேயில் பெயின்டிங் காண்டிராக்டராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ரெனிஸ் தனது நண்பரான வின்சன்ட் என்பவருடன் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், லட்சுமி மில் ரயில்வே மேம்பாலத்திற்கும் இடையே இருக்கும் தண்டவாள பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரெனிஸ் மீது மோதி விட்டது. இதனால் உடல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைபட்டி பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணியில் இருந்தபோது மைக்கேல் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துவிட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கரை ஒதுங்கிய மைக்கேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தனியாக தவித்த தாய்….. மகள்களுடன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தாய் தனது இரண்டு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முத்துராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு யுவராணி, நித்யா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக முத்துராமன் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்துமாரியின் தயாரான கோமதி தனது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி…. இளம்பெண்ணின் சூழ்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இளம்பெண் சூழ்ச்சி செய்து சங்கிலியை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வபுரத்தில் அமிர்தராஜ் என்பவர் தனது மனைவியான ஜெயாவுடன் வசித்து வருகிறார். ஜெயா உடன்குடியில் இருந்து நெல்லைக்கு செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது ஜெயா அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் இருந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அவரிடம் உங்களது சங்கிலி கழன்று விழுவது போல் உள்ளது என்றும் அதனை பாதுகாப்பாக பையில் எடுத்து வைத்துக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். இதனால் ஜெயா தனது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காவல்துறையினரின் திடீர் சோதனை…. கணக்கில் காட்டபடாத பணம்…. ஊழியர்கள் பணியிடை நீக்கம்…!!

மதுபான கடை மேற்பார்வையாளர் உட்பட 8 பேர் பணம் பதுக்கிய குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் செல்லும் சாலையில் மதுபான கடை ஒன்று உள்ளது. அங்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் 28 ஆயிரத்து 280 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய நபர்கள்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்களை கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 82 மது பாட்டில்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாலிபரை வழிமறித்த நபர்…. சுற்றி திரிந்த பிரபல ரவுடி…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டல் அருகில் பிரபல ரவுடியான முத்து ரிஷி என்பவர் ஒருவரை வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் காவல்துறையினர் முத்து ரிஷியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் 5 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களே…. போட்டிக்கு ரெடியா?…. இதை மட்டும் சாப்பிட்டு முடித்தால் தங்கம் பரிசு…. உடனே போங்க….!!!!

தூத்துக்குடியில் புதிய உணவகம் ஒன்று 27 பரோட்டா 1 சிக்கன் ரைஸ் பலூடா போன்றவற்றை ஒரே நேரத்தில் வேகமாக சாப்பிட்டு முடித்தால் தங்க நாணயம் பரிசு என்று அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட விஐபி பிரியாணி கடையில் கடந்த சில நாட்களாக பரோட்டா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடைக்கு சாப்பிட வருபவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனை அறிந்த இளைஞர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு…. கத்தி கூச்சலிட்ட பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

ரோட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் விலாசம் கேட்பது போல நடித்து வாலிபர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பேராலய தெருவில் ராஜாசிங் என்பவர் தனது மனைவியான சரோஜினியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சரோஜினி மளிகை பொருட்களை வாங்கிவிட்டு லூக்கா மருத்துவமனை நோக்கி நடந்து சென்றிருக்கும் போது, எதிரே வந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் விலாசம் கேட்பதுபோல் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் திடீரென சாரோஜினியின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. விபத்து ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூருக்கு தனியார் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் முன் மற்றும் பின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்வதற்கான வழியில் 10-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைந்துள்ளதால் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி செய்து கேட்ட மக்கள்…. 10 வருடமா அதிமுக செய்யல…. இப்போ திமுக செய்யுது – எம்பி கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கீதாபட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எம்.பி கனிமொழி கட்டாயமாக உங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு செய்யவில்லை. இந்த நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற லாரி….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி விபத்துக்குள்ளானத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள மங்கம்மாள்பட்டியில்  கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மாரிமுத்து ஓட்டிச் சென்ற லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் -லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தூத்துக்குடியில் சோகம்…!!

மோட்டார் சைக்கிளில்  மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டியில்  விவசாயியான கோவில் பிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவில்பிச்சை   தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சிக்கும்போது, எதிரே வந்த லாரி  திடீரென  ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் பிச்சையின் மோட்டர்சைக்கிள்  மீது பலமாக  மோதிவிட்டது. இதனால்  படுகாயம் அடைந்த  கோவில்பிச்சையை அங்கிருந்தவர்கள்  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக்காக அனுப்பிவைத்தனர்.  ஆனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடலில் நெருப்போடு ஓடி வந்த சிறுமி….. அதிர்ச்சியடைந்த தாயார்…. பின் நடந்த சோகம்…!!

திடீரென பற்றிக்கொண்ட நெருப்பால் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தில் கூலித்தொழிலாளியான வேல்முருகன் என்பவர் தனது மனைவி மதிவதனாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு தெய்வ வெனுசியா மற்றும் தெய்வக கனுசியா என்ற இரு குழந்தைகள் இருந்துள்ளனர். வேல்முருகனின் வீட்டிற்கு அருகே உள்ள விநாயகர் கோவிலில் தெய்வ வெனுஷியா, தெய்வ கனுசியா உள்ளிட்ட நான்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து தெய்வ வெனுசியா சாமி கும்பிடுவதற்கு கோவிலின் உள்ளே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

2 மனைவிகளுக்கு கத்திகுத்து ….மருத்துவ உதவியாளரின் முர்க்கத்தனமான செயல் ….போலீஸ் விசாரணை…!!!

இரண்டு மனைவிகளையும்  கத்தியால் குத்திய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  திருச்செந்தூரில் இருக்கும் நந்தவன தெருவில்  சந்தானம் என்பவர் வசித்துவருகிறார்.  இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வருகின்றார்.  கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சந்தானம் சசிகலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.   இந்த பெண் எய்ட்ஸ் தடுப்பு மையத்தில் வேலை செய்து வருகின்றார்.  இந்த தம்பதிகளுக்கு ஒரு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அக்.7,11,12,13,14 ஆகிய தேதிகளில் கட்டுப்பாடு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7, 11, 12, 13, 14ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்யலாம். ஆனால் தங்குவதற்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் என எந்த பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. எனவே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் ஆற்றங்கரை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கச்சேரி தளவாய்புரம் பகுதியில் சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் உள்ளார். கடந்த 19.9.2021 அன்று கலைச்செல்வன் தன்னுடைய பிறந்தநாளை தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சீட்டில் கேக் வைத்து அரிவாளால் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை செல்போனில் வீடியோவாக எடுத்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் சந்தனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென சந்தனம் கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்தனம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தமாக பிடிச்சாச்சு….. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

ஒரே நாளில் 47 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ஒரே நாளில் 47 ரவுடிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தாங்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், நகை கடைகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இலவச பட்டா வழங்க வேண்டும்….. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட நிலமில்லாத தலித் மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

யாரை பார்த்து சிரிக்கிறாங்க….? சூறையாடப்பட்ட உணவகம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

உணவகத்திடற்கு சாப்பிட சென்ற இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரவாஞ்சி நகரில் அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித் குமார், சங்கரநாராயணன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிட செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி இவர்கள் 5 பேரும் அந்த உணவகத்திற்கு வழக்கம் போல சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அதே சமயம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் பிரசாந்த், சிவராமன், முருகன் ஆகிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கொலை பண்ணிடுவேன்” ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வாலிபர் ஒருவரிடம் மற்றொரு நபர் தகராறு செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் அதே பகுதியில் வசிக்கும் சூர்யா மற்றும் சாந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சூர்யா சாந்தகுமாரை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டன் கணக்கில் கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி செயல்….!!

லீகடத்தி செல்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சளோடு சேர்த்து படகையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்ட கடற்கரையிலிருந்து கடல் அட்டை, வெங்காய விதை மற்றும் மஞ்சள் போன்றவை சட்டவிரோதமாகக் கொண்டுச் செல்லப்படுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  கியூ பிரிவு காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு காவல்படையினர் மற்றும் பல்வேறு உளவு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியிலிருந்து மஞ்சள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. சிறுவர்கள் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

பெண்ணிடம் செல்போன் பறித்த  குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் கைது செய்துஉள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் டெயிலரான கலா என்பவர் வசித்து வருகிறார்.   இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார் .  அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சிறுவர்கள் கலாவின் கைகளில் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் ஒரு சிறுவனை மட்டும் மடக்கி பிடித்து விட்டனர்.  அதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எதார்த்தமாக திட்டிய பெண்….. முதியவரின் கொலை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

முதியவரை கொலை செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் பகுதியில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சேட்டை செய்த தனது குழந்தைகளை காளீஸ்வரி எதார்த்தமாக திட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் இறந்து போன தனது தாயாரை தான் காளீஸ்வரி திட்டுகிறாரோ என தவறுதலாக நினைத்துள்ளார். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மொத்தம் 7டன் அரிசி…. போலிசாரின் அதிரடி நடவடிக்கை….!!

வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளிலிருந்து சட்டவிரோதமாக அரிசி கடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரி கணேஷிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறை அதிகாரிகள் மகாலிங்கம், பென்சிங், திருமணி, மாணிக்கராஜ், முத்துப்பாண்டி, சாமுவேல், செந்தில் ஆகியோர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் இருந்து சில முட்டைகளை ஒரு கும்பல் டெம்போ வேனில் ஏற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இங்க மணலை ஒதுக்காதீங்க…. பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்….. போலீஸ் நடவடிக்கை…!!

தூர்வாரும் பணியின் போது நடந்த தகராறில் பஞ்சாயத்து தலைவரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரபுரத்தில் பஞ்சாயத்து தலைவரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீர் மற்றும் மண்ணை அகற்றும் பணியினை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள வடக்குத்தெரு பகுதியில் பணி நடந்து கொண்டிருந்த போது சக்திவேல் என்பவரின் மகன்களான கருங்கதுரை, தங்களுடைய இடத்தில் மணலை ஒதுக்கக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தரிசன நேரம் நீட்டிப்பு” அரசின் அதிரடியான அறிவிப்பு…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்தை நீட்டித்து தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க  தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக பக்தர்கள் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை சுவாமி தரிசனத்திற்காக காலை மணி 6 – மாலை மணி 6 வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல்(22.9.2021) பக்தர்கள் காலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை….. 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 11 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பைக்கில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில்  பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பாசிங்காபுரத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்…. இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு… பக்தர்கள் மகிழ்ச்சி!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில்,கோவில்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (இன்று) […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஓராண்டாக தேங்கிய நீர்…. செத்து மிதக்கும் மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குட்டையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறபடுத்த வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோக்கூர் நகர் மற்றும் கதிர்வேல் இடையே இருக்கும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஆண்டு கன மழை பெய்துள்ளது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அங்கு குளம் போல் தேங்கிய தண்ணீர் வடியாமல் அங்கேயே நிற்கின்றது. மேலும் அந்த தண்ணீரில் ஏராளமான மீன்களும் வளர்ந்தன. இந்நிலையில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் மாசடைந்து காணப்படும் இந்த குட்டையில் வளர்ந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள்…. கைது செய்யப்பட்ட தம்பதிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட படகு….!!

சட்டவிரோதமாக கடத்தலுக்கு பயன்படுத்திய படகினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீடி இலை, கடல் அட்டை, விரலிமஞ்சள், வெங்காய விதை போன்ற பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் ஆட்கள் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக வருவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மங்களூர் பகுதியில் காவல்துறையினர் அதிரடியாக 40 பேரை கைது  செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பிப்ரவரி மாதத்தில் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான செஸ் போட்டி…. வெற்றிப்பெற்ற குழந்தைகள்…. பரிசு வழங்கிய அதிகாரி….!!

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல்துறை அதிகாரி பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜ் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 9, 11, 13, 15, 19 – வயதிற்கு உட்பட்ட போட்டியாளர்கள் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு என மொத்தம் 6 பிரிவுகளாக கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு சர்வதேச நடுவரான ஆனந்தராம் நடுவராக இருந்துள்ளார். இதனையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் காமராஜ் கல்லூரி செயலாளர் சோமு, […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்…. நாளை முதல் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில்,கோவில்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சாலையோர பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வர்த்தக ரெட்டி பட்டிபிரிவு சாலைக்கு அருகில்  இருக்கும் பள்ளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்ததுள்ளது . இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு…. மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. ஆசியர்களுக்கு நினைவு பரிசு….!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள வானரமுட்டியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1996-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை படித்த  மாணவர்களுக்காக சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  இந்த நிகழ்ச்சியானது பள்ளியின் முதல்வர் கிரேனா ராஜாத்தியின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜோசப் ஜெபராஜ், பேராசிரியர்கள் கலைச்செல்வி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேருந்தில் சத்தமிட்ட பெண்…. மடக்கி பிடித்த பயணிகள்…. கைது செய்த போலீஸ்….!!

பேருந்தில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் கடையம் வடக்குத் தெருவில் கணேசன் மகள் முத்துலட்சுமி வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் முத்துலட்சுமி கையில் வைத்திருந்த செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி சத்தமிட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர வழக்குபதிவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பின்…. நடைபெற்ற நிகழ்ச்சி…. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு….!!

25 ஆண்டுகளுக்கு பின் பழைய மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் 1996-98 பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வரான கிரேனா ராஜாத்தி தலைமை தாங்கினார். இதனையடுத்து பள்ளியின் முன்னாள் பேராசிரியர்கள் முனியசாமி, கனகசபை, கலைச்செல்வி, நல்லாசிரியர் விருது பெற்ற சுரேஷ்குமார், ஆசிரியர்கள் ஜோசப், ஜெபராஜ், காந்தராஜ்,ரமேஷ், ஜான் பாரதிராஜா மற்றும் பெரும்பாலானோர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. மரக்கன்றுகளை நட்டு போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

நான் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகரசபை 30-வது வார்டு பாரதி நகர், 4வது தெரு மற்றும் ஓடை தெருவில் சாலை போடுவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. இவ்வாறு சாலை போடுவதற்காக தோன்றி போடப்பட்டு பணிகள் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கண்டித்தும், வாறுகால்களை புதுப்பித்து சாலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேனில் இதுவா ஏத்துறீங்க… வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசினை கடத்துவதற்கு முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசினை கடத்துவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், திருமணி, செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம் போன்றோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலுவைபட்டி பகுதியில் இருந்த ஒரு குடோனில் இருந்து டெம்போ வேனில் சில பேர் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை […]

Categories

Tech |