மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டுடன் காட்டை பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கூட்டாம்புளி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மாடு ரோட்டை கடந்து சென்றதால் முத்துக்குமார் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
