வெளிநாடுகளில் இறந்த இரண்டு தமிழர்களின் உடலை விரைந்து மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துக்குமரனும், திருச்சியை சேர்ந்த சின்னமுத்து புரவியான் இருவரும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மர்மமாக உயிரிழந்துள்ளதால் உரிய விசாரணை நடத்தி உடல்களை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் உடலை மீட்டுக் […]
