ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டி மாற்றுத்திறனாளிகள் மனமுருகி வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்குச் சென்றுவிட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.இருபத்தெட்டு மணி நேரத்தை தாண்டி, சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குழந்தையை […]
