திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு. பாலகரை மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்த இவர் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இன்று அதிகாலை மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயரகுவை அடையாளம் […]
