திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடுமையாக இருந்த நிலையில், தற்போது ஆறாவது கட்ட ஊரடங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி […]
