திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 21 கைதிகள் தபால் ஓட்டு போட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என மொத்தம் 1, 500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு விசாரணைக் கைதிகளுக்கோ அல்லது தண்டனை கைதிகளுக்கோ அனுமதி கிடையாது. ஆனால் இதற்கு மாறாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி […]
