ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் பனியன் நிறுவன உரிமையாளரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஏ.சியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் அச்சத்தில் குடும்பத்தினர் உடனடியாக மாடியில் இருந்து கீழே இறங்கி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடியில் பற்றி […]
