மலேசிய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிக்கந்தர்புரத்தில் இம்ரான்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் இம்ரானை மீண்டும் மலேசியாவிற்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு செல்ல மறுத்து இம்ரான் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இம்ரான், […]
