Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அச்சமூட்டும் பம்பர் கம்பிகள்” மோட்டார் வாகனச் சட்ட விதிமீறல்… பெருத்திருந்த அவ்ளோதான்…. போலீஸ் எச்சரிக்கை…!!

சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகளை அகற்ற செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வ .உ.சி மைதானம் அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த முப்பது கார்களில், 8 கார்களில் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தததை கண்டனர். உடனே அந்த பம்பர் கம்பிகளை போக்குவரத்து அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் கூறுகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களான வேன், ஆட்டோ, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” வீட்டில் எதிர்ப்பு… மனமுடைந்த வாலிபர்… பின்னர் நடந்த கொடூரம்….!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய  பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா. இவருடைய மகன் கணேசன்(24).கணேசன்  பல்லடம் அருகே உள்ள தனியார் சாய தொழிற்சாலையில் தங்கி ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் சொந்த ஊரில் உள்ள தனது  உறவுக்கார பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஏற்கனவே இவரது சகோதரனுக்கு  அந்தப் பெண்ணுடைய அக்காவை திருமணம் செய்ததால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமைக்க மட்டன் வாங்கி கொடுத்துவிட்டு…. மாயமான கணவர்… கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் மர்மமான முறையில் டெய்லர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழசிந்தாமணியை சேர்ந்த ராசையா நாடார் மகன் அந்தோணி லாசர் (வயது 44). இவர் டெய்லர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரோஸ்லின்மேரி (42) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கிறிஸ்துமஸ் அன்று மதியம் மட்டன் வாங்கி வீட்டில் சமைக்க கொடுத்துள்ளா். பின்னர் வெளியே சென்று வருகிறேன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுவன்… ஆற்றுப்படுகையில் கிறிஸ்மஸ் பண்டிகை… சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  சிறுவன் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு  தொலைபேசியில்  அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீருக்கு அடியில் உயிரிழந்த  நிலையில் கிடந்த சிறுவனின் உடலை கரைக்கு எடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சந்தேகத்திற்குரிய இருவர்…. விசாரித்ததில் தெரிந்த உண்மை… கைது செய்த போலீஸ்…!!

சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா கடத்திய இருவர் வந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் நெல்லை தாழையூத்து பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருனர். அச்சமயம் சந்தேகப்படும் படியாக நாரணம்மாள்புரம் தாமிரபரணி அருகே நின்று கொண்டிருந்த தாழையூத்து முத்து நகரைச் சேர்ந்த தளவாய் மாடசாமி (வயது 20) மற்றும் நாரணம்மாள்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகாராஜன் (வயது 24) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவ்வளவு கூட்டமா…? 3 மணிக்கே குவிந்த மக்கள்…. பத்து ரூபாய்க்கு பிரியாணி….!!

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றதால் ஹோட்டல் அருகே பரப்பரப்பு நிலவியது.  நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வகையான உணவகங்கள் உள்ளன. இவற்றுள் சில கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி  உணவு பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்தனர்.  இந்நிலையில் நெல்லை சந்திப்பு வேன் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகையாக ஒரு பிரியாணி பொட்டலம் ரூபாய் பத்துக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இச்சலுகையானது மாலை 4 மணி முதல் 5 மணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மல்லிகை 1கிலோ 2,000ரூபாய் ஆகிடுச்சு…! கடுமையாக உயர்ந்த பூக்களில் விலை ..!!

பண்டிகை காலத்தை ஒட்டி நெல்லை பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மார்கழி மாதம் உற்சவம் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகை காரணமாக நெல்லை சந்திப்பில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ விலை 2,000 ரூபாயும்,  ஒரு கிலோ பிச்சி பூவின் விலை 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை அதிகமாக பெய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்துத் தகராறு… மாமியார், மருமகள் இரண்டு பேரையும்… நெல்லையில் அரங்கேறிய கொடூரம்..!!

சொத்து தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கோபால்- மாரியம்மாள். இவர்களுக்கு சண்முகராஜ் என்ற மகன் உள்ளார் . மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் முத்து என்பவரின்  குடும்பத்திற்கும் வெகு  நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.இதனால்  அடிக்கடி அவர்களுக்குள் மோதலும்  நடந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள்  சண்டை ஏற்பட்டது. அப்போது மைனர் முத்துவும் அவரது உறவினர்களும் சேர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலாளிகள்… பறந்து வந்த கார்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் 55 வயதுடைய  முருகன் மற்றும் 70 வயதுடைய ராமையா . இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். தினமும் கங்கைகொண்டான் அருகே நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய்ப்பதை  வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் இன்று இருவரும் ஆடுகளை மேய விட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வியாபாரம் இல்ல…. கடனை கட்ட முடியல…. பழக்கடைக்காரர் எடுத்த முடிவு….!!

கடனை திருப்பி செலுத்த முடியாததால்  பழக்கடைக்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி அருகே உள்ள பேட்டையை சேர்ந்த தம்பதியினர் முத்துகிருஷ்ணன்- செல்வி. இவர்ககுக்கு  ரூபிணி, லாவண்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முத்துகிருஷ்ணன் பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிலையம் அருகே பழக்கடை மற்றும் ஜூஸ் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி செல்வி அங்குள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முத்துகிருஷ்ணன் கொரோனாவால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்படி எங்களப் பத்தி குறை சொல்லலாம்…? 17 வயது சிறுவனின் கோபம்…. விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்…. அண்ணன் தம்பி கைது….!!

அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து விவசாயியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லை மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் தவிடன் . இவர் விவசாயம் செய்து வந்தார் . மேலும் தனது வீட்டை ஒட்டிய படி சிறிய கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் . அதே ஊரைச் சேர்ந்தவர்கள்  சுப்பையா மற்றும் கிருஷ்ணன். சுப்பையா தவிடனிடம்  வந்து தனது வயலில் உள்ள நெற்பயிர்களை கிருஷ்ணனின் மாடுகள் சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். இதனை கேட்ட தவிடன்  தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அண்ணன் தங்கை உறவில் மலர்ந்த காதல்” இருவருக்கும் நேர்ந்த விபரீதம்…. நெல்லையில் பரபரப்பு…!!

அண்ணன் தங்கை உறவு கொண்ட இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் வசித்து வருபவர் வேல்தேவர். இவருக்கு சுடலை ராஜ் மற்றும் இசக்கிமுத்து என்று 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பழைய பேட்டை பகுதியில் உள்ள பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுடலைராஜின் மனைவி உயிரிழந்ததால் அவருடைய மகன்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை சுடலைராஜின் சகோதரரான இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் மகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவு முறையை மீறிய காதல்…. கணவன் மனைவியான அண்ணன் தங்கை…இறுதியில் நடந்த சோகம்….!!

உறவு முறை மாறி நடந்த காதல்  திருமணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோன  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையை சேர்ந்தவர் சுடலை ராஜ். இவரது மகன் காளிராஜ். அவரது தாய் இறந்துவிட, தந்தையின் சகோதரர் இசக்கிமுத்து என்பவரது வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜ்ஜிற்கு  இசக்கி  முத்துவின் மகளுடன் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வந்துள்ளனர். அண்ணன், தங்கை என்பதால் உறவினர்களும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரை தேடி வந்த யானை…. உயிரை விட்ட பரிதாபம்… .விவசாயி கைது …!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரத்தில் இரையை தேடி சென்ற காட்டுயானை ஒன்று மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு கிராமத்தில் விவசாயிகள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெல், கரும்பு, தென்னை போன்றவற்றை தங்களுடைய நிலத்தில் பயிர் செய்துள்ளனர். அனவன்குடியிருப்பு கிராமம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அடிவாரத்தில் உள்ளது. எனவே வனவிலங்குகள் அடிக்கடி இரையை தேடி இக்கிராமத்திற்கு வந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் செல்லகுட்டி என்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவன் தற்கொலை…உடல்நிலை பாதிப்பால் விரக்தி.. அஞ்சுகிராமத்தில் சோகம்…!!

மாணவன் உடல் நிலை பாதிப்பால் தற்கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .   நெல்லை மாவட்டத்தில் உள்ள கள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல். இவர் அஞ்சு கிராமத்திற்கு அருகே உள்ள குமாரபுரம் தோப்பூரில் தற்போது குடும்பத்தினரோடு வசித்துவருகிறார்.  அந்தோணி மைக்கேலின் மகன் வின்சென்ட் (14) . இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வி ன்சென்ட்டிற்க்கு உடல்நிலை பாதிப்படைந்து சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும்  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குரூப்-4 கலந்தாய்வு முடிந்து…. ரயிலில் வீடு திரும்பிய…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசிப்பவர் குருநாதன்(54). இவருடைய மகள் மனிஷா(23) குரூப்-4 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்துகுரூப்-4 கவுன்சிலிங்குக்காக தன்னுடைய  அப்பா மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகிய இருவருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதையடுத்து கவுன்சிலிங் முடிந்து மாலை சென்னை-செங்கோட்டை ரயில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மனிஷா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

100 அடி உயரம்… ஒரு குடும்பம் நடத்தும் போராட்டம்… நெல்லை அருகே பரபரப்பு..!!

100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராட்டம் நடத்திவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அடுத்த கணேசபுரத்தில் வசித்துவரும் கணேசன், சேவியர் காலனியில் சொந்தமான நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் நீர்த்தேக்கத் தொட்டியை கட்டி இருக்கிறது. இதற்கு தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக கேட்டு வந்தும் பயனில்லை. இதுதொடர்பாக அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடியை மீட்க தீவிரம் ..!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடியை மீட்கும் பணியில் வனத்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விவரங்களை வழங்வதற்காக  நம்முடைய செய்தியாளர் நாகராஜன் இணைப்பில் இருக்கிறார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே 100 அடி ஆழம் விவசாய கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் பணிகளில் வனதுறையினர்   ஈடுபட்டு வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி கரடியை மீட்க்கும் நடவடிக்கைகளில் தற்போது  ஈடுபட்டு வரும் தமது செய்தியாளர் தெரிவிக்க கேட்டோம்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முருகன் கோயிலை சூழ்ந்துள்ள வெள்ளம் – பொக்கிஷமாக திகழும் அதிசயம்

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்று பகுதியில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலை கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ள போதிலும் 300 ஆண்டுகளாகத் தாங்கி நின்று வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷமாக திகழ்கிறது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குறுக்குதுறை முருகன் திருக்கோவில் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. கடந்த 300 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்று வெள்ளத்தை தாக்குப்பிடித்து கம்பீரமாய் காட்சியளிக்கிறது. படகுபோல் கட்டப்பட்டுள்ள கோவிலின் அமைப்பே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வெள்ளம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேண்டாம் என்று கண்டித்தேன்… அதான் இப்படி பண்ணுனேன்… அண்ணண் கொடுத்த வாக்குமூலம்…!!

அண்ணனே தன் தங்கையை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டதில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவருக்கு நல்லையா என்கிற குட்டி (30) மற்றும் சரஸ்வதி (25) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகளான சரஸ்வதி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி அங்குள்ள ஒரு பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேச்சு…. என்ன மதிக்கல….. நர்சிங் மாணவி வெட்டி கொலை….. அண்ணன் கைது…. நெல்லை அருகே பயங்கரம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த சாஸ்தா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சரஸ்வதி. இவர் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவரது உடன் பிறந்த அண்ணன் குட்டி தாஸ், திடீரென அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த, அரிவாளை எடுத்து தங்கை என்றும் பாராமல், சரஸ்வதியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அப்பாவுடன் சென்ற மகனின்…. “விபரீத ஆசையால்” தாழையூத்தில் சோகம்…!!

அப்பாவுடன் சென்ற மகன் ரயில் மேல் ஏறி செல்பி எடுத்த போது உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து கிராமத்தில் வசிப்பவர் மகேஷ்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஜானேஸ்வரன் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய அப்பாவுடன் இன்று காலை ரயில் நிலையம் அருகே உள்ள அப்பா வேலை பார்க்கும் குடோனுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மகேஷ்குமார் தன்னுடைய வேலைகளை […]

Categories
திருநெல்வேலி பல்சுவை வேலைவாய்ப்பு

நெல்லையில் வேலை : ரூ86,000 சம்பளம்…. நவம்பர் 20இல் இன்டர்வியூ…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Senior Residents & Specialist, காலிப்பணியிடங்கள் : 16 , பணியிடம் : நெல்லை, சம்பளம் : ரூ86,000, கல்வித்தகுதி : MBBS With PG Degree or Diploma, வயது 64 க்குள் இருக்க வேண்டும். வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள  Office of the Medical Superintent ESIC Hospital இல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தனியாக வீட்டில் இருந்த மனைவி” காலையில் வந்து பார்த்த கணவருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவரை முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் முத்துப்பாண்டி (40) – முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிசெல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருடைய மகன் மாரிசெல்வம்  தனது பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுள்ள நிலையில் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆண் நண்பர்களுடன் ரகசிய பழக்கம்…. பெண்ணுக்கு நேர்ந்த கதி…. மனைவிக்காக கதறிய கணவன்…!!

கணவருக்கு தெரியாமல் ஆண் நண்பர்களுடன் பழகி வந்த பெண் அவர்களாளேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாகுடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி-முப்பிடாதி தம்பதியினர் இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளான். முத்துப்பாண்டி சுமைதூக்கும் தொழிலுக்காக தினமும் தூத்துக்குடிக்கு சென்றுவிடுவார். கணவன் வேலைக்கு சென்றதும் முப்பிடாதி அதே பகுதியை சேர்ந்த ஆண்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதியுடன் பழகி வந்த சிலருக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட நேற்று முப்பிடாதி இருவர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

7 மாதத்திற்கு முன் காதல் திருமணம்… கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத தந்தை…!!!

பாபநாசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட 7 மாதக் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் தாலுக்கா இரும்புத்தலை கிராமத்தின் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 21 வயதில் விஜயா என்ற மகள் இருக்கிறார். அவரும் சேர்ந்த மக்கள் அத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் 7 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் நேற்று திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அருந்ததி ராய் புத்தகம் பாடத் திட்டத்திலிருந்து நீக்‍கம் – காங்கிரஸ் கண்டனம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாட திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராயின் வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் இடம்பெற்றிருந்தது. இதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் இந்தப் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொப்புள் கொடி அறுக்கல…. கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை…. திருநெல்வேலியில் பரபரப்பு…!!

பிறந்து தொப்புள்கொடி அறுக்காத ஒரு நாளே ஆன குழந்தை கிணற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் சிவந்திபட்டி காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கிணற்றில் இறந்த நிலையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மிதந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து அதே பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு கேட்டு…. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்…. தஞ்சம் அடைந்த காதல் ஜோடி…!!

காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கூடல் கோவில் தெருவில் வசிப்பவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகள் வினிதா (வயது 19) என்பவர் கல்லூரியில் 2ம் வருடம் படித்து வந்துள்ளார். இவரும் ராஜவல்லிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாசிலாமணி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வினிதாவிற்கு வேறு இடத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் சாகசம்… 7 வயது சிறுமியின் அசத்தல் திறமை… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

நெல்லையில் தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் காலிலேயே மரத்தில் ஏறி அசத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் பசுகிடைவிலை மணி நகரம் என்ற பகுதியில் மார்டின் மற்றும் ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தாம்சன் ஆல்வின் என்ற 10 வயது மகனும், கெப்சி ஹோனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். அந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்து மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அவர்களது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட களவாணி… போலீஸ் வேலையிலிருந்து சஸ்பெண்ட்…. காவல் கண்காணிப்பாளர் உத்தரவு…!!

காவலர் ஒருவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியத்தியதில், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேல் மற்றும் அவருடன் சேர்ந்த சிலரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து காவலர் கற்குவேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாநகர காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“5 நிமிஷத்துல 3 தென்னை மரம்” ஏறி இறங்கும் 7 வயது சிறுமி… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சிறுமி ஒருவர் 5 நிமிடத்தில் 3 தென்னை மரங்களில் ஏறி இறங்கும் சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வி.கே புரத்தைச் சேர்ந்த தம்பதிகள் மார்ட்டின் விஜயதுரை-ரேணுகா. இவர்களுக்கு சாம் ஆல்வின்(10) என்ற மகனும், ஹெப்சிகேனா(7) என்ற மக்களும் உள்ளனர். ஆல்வின் ஐந்தாம் வகுப்பும், ஹெப்சிகேனா இரண்டாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். விஜயதுரை பாபநாசத்தில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் வீட்டில் நிறைய தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது கொரோனாவினால் பள்ளிகல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“காவல் உடையில் ஒரு களவாணி” சிறுவயதிலிருந்தே திருட்டு…. அதிர்ந்து போன போலீசார்…!!

காவலர் ஒருவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் திருடிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் தங்கதுரை என்பவரின் வீட்டில் பட்டப்பகலில் 15 சவரன் நகையை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். இதையடுத்து அங்கிருந்த கைரேகை பதிவுகளை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அந்த கைரேகை திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேலின் கைரேகையோடு ஒத்துப் போனதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போலீசே இப்படி செய்யலாமா?… நெல்லையில் நடந்த சம்பவம்… வசமாக மாட்டிக் கொண்ட போலீஸ் ஏட்டு…!!!

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இரவு நேர பணியில் ஆர்வம் காட்டி வந்த அவர், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மற்றும் பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பருவமழை பெய்யவில்லை…. எகிறும் முருங்கை விலை…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திசையன்விளை பகுதியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திசையன்விளை பகுதிகளில் முருங்கைக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.முருங்கை வறட்சிப் பயிர் என்பதால் அதற்கு வெயில் அதிகம் தேவை. தற்போது வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால் அங்கு முருங்கை விளைச்சல் இல்லை. இங்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. வெயில் அதிகம் உள்ளதால் பூக்கள் அனைத்தும் காயாகி உள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் துப்பாக்கிச் சூடு – பாஜக பிரமுகர் படுகாயம்!

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பெரியதுரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த துப்பாக்கிசூடு தொடர்பாக  கராத்தே செல்வின் சகோதரரான முன்னாள் ராணுவ வீரர்  ஜெபமணி கைது செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே முன்பகை  இருந்த நிலையில் சிகரெட்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகரை “திருடன்” என அறிவிக்க கோரி போராட்டம் …!!

நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான கேடிசி நகர் அருகே 126 ஏக்கர் நிலத்தை சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என்று தமிழக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த கனமழை – மக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இருந்த போதிலும் நெல்லையில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நெல்லையில் மாநகர பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை சந்திப்பு கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்…!!

திருநெல்வேலியில் வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை முருகன் குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தேநீர் அருந்த வந்தார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியர்களும் உரிமையாளரும் திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக செய்தி பரவியதால் அவருக்கு ஆதரவாக அங்கு திரண்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

20 வயது பெண்…. ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள்…..!!

20 வயது இளம் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-இசக்கியம்மாள் தம்பதியினர். இசக்கியம்மாள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தபோது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது உறுதியானது. ஆனால் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அறுவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம் – 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆவின் துணை பொது மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட… பிளஸ்டூ மாணவி… விபரீத முடிவால் நடந்த சோகம்…!!!

நெல்லை அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே இருக்கின்ற காட்டாம் புலி என்ற கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் அபிநயா என்ற மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வரும் அந்த மாணவி அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் மனமுடைந்த அபிநயா, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் உடலில் […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

பலத்த மழை – அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 126 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல் குண்டாறு, அடவிநயினார் கோவில், ராமநதி ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. குற்றால […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அறநிலையத்துறையை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் …!!

வீரவநல்லூரில் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீரவநல்லூரில் உள்ள பூமிநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான சமூகம் மடம் மிகவும் பாழடைந்த பழுதான நிலையில் உள்ளது. இதனை பராமரித்து அனைத்து சமுதாயப் பொதுமக்கள் பயன்பெற வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் அறநிலையத்துறை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சமூக மடம் பராமரிக்காத அறநிலையத்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. சாகும் வரை…. நீதிமன்றம் அதிரடி…!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். வேன் ஓட்டுநரான இவர் 2016 ஆம் ஆண்டு 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட பெருமாள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், […]

Categories
திருநெல்வேலி தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை – அணைகளின் நீர்மட்டம் உயர்வு…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை மீண்டும் நிரம்பிய நிலையில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நேற்று 88.20 இருந்த நீர்மட்டம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொட்டை மாடியில் தூக்கம்…. “மழை வரும் போல” வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி…!!

மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்டர் வேலை பார்த்து வருகிறார். செல்வராஜ் தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அறிந்த திருடர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து திருடி உள்ளனர். இது தெரியாத செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மழைக்கான அறிகுறியுடன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணீருக்காக ஏங்கும் மக்கள்… அதிகாரிகள் அலட்சியம்… போராட்டத்தில் இறங்கிய மக்கள்…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி அருகே இருக்கின்ற இடைகால் ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்குறிச்சி என்ற கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. அந்த கிராமத்தில் வழியாக வாசுதேவநல்லூர் செல்லக்கூடிய கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சில நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வரக்கூடிய தண்ணீரை அப்பகுதி மக்கள் அனைவரும் […]

Categories
ஈரோடு திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பருவ மழை வெள்ளம் காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி…?

வடகிழக்கு பருவ மழை வெள்ளம் காலங்களில் பொது மக்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அக்கரைப்பேட்டையில்  நடைபெற்றது. இயற்கை பேரிடர் காலங்களில் காயமடைந்தவர்களை எந்தெந்த முறைகளில் மீட்பது, கட்டட இடர்பாடுகளில் உயிர் சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக எப்படி தப்பித்து கொள்வது, தீ விபத்துகள் ஏற்படும் போதும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி அக்கரைப்பேட்டையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் புகுந்த கடத்தல் கும்பலின் CCTV காட்சி …!!

நெல்லையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆயுதங்கள் கொண்டு ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்கில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இரவு 10 மணியுடன் விற்பனையை முடித்துவிட்டு பங்க் அலுவலக அறையில் ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் நடுஇரவில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பங்கில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி கேட்டனர். ஊழியர்கள் மறுக்கவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட […]

Categories

Tech |