Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை கண்டியபேரி பகுதியில் கூலி தொழிலாளியான சொர்ணம்(52) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் குளோரி என்ற பெண்ணை சொரணம் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குளோரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சொர்ணம் மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் வழங்க இருப்பதாக வந்த மெசேஜ்…. ரூ.13 லட்சத்தை இழந்த பள்ளி முதல்வர்…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆசீர்நகர் பகுதியில் செல்வ விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரது வாட்ஸ்-அப் நம்பருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த காரை இந்தியாவில் முதன்முதலாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம் என கூறியுள்ளார். அதற்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் வங்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் விவசாயியான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கிருஷ்ணகுமாரை அவரது தாயார் செல்லம்மாள் கண்டித்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து கிருஷ்ணகுமார் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அருவியில் தண்ணீர் வரத்து குறைவு…. சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு….!!!

அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் குற்றாலம், பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவி புகழ்பெற்ற அருவியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியுள்ளதால் பல்வேறு அணைகளுக்கும், அருவிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்காக வருடம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த சில நாட்களாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோர்ட் வளாகத்திற்குள்…. மத போதகரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்…. நெல்லையில் பரபரப்பு….!!!

நீதிமன்ற வளாகத்தில் மத போதகரை வாலிபர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணைக்காக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மத போதகரமான ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார். இவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென ஒரு வாலிபர் மதபோதகரை அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்தார். இதைப் பார்த்த வேணுகோபால் என்ற காவலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரை அருகே நடந்து சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை சாஸ்தா கோவில் தெருவில் இசக்கிபாண்டி(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இசக்கி பாண்டி தருவை தாமிரபரணி ஆற்றங்கரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பத்தை எதிர்பாராதவிதமாக இசக்கி பாண்டி தொட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10ஆம் வகுப்பு மாணவனுக்கு Sex டார்ச்சர்….. பெரும் பரபரப்பு…..!!!!

நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. மாணவ, மாணவிகள் தொடர்ந்து இதனால் பெரும் டார்ச்சர் அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறான எண்ணத்தோடு பழகுவது, ஆபாச வார்த்தைகள் பேசுவ.து தேவையில்லாத இடங்களில் தொட்டு பேசுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நெல்லையில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு விடுதி காப்பாளர் மற்றும் 12ஆம் வகுப்பு சக மாணவன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏமாற்றி அழைத்து சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையாங்குழி நாராயணசாமி கோவில் தெருவில் பிரபு(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரபு சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழங்கப்பதிவு செய்த போலீசார் போக்சோ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த தம்பதி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவன், மனைவி ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் லுக்மான் ஹக்கீம்(44) -சஹர் பானு(33) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் லுக்மான் பழைய பேப்பர்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர்கள் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பாளையத்தில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை கணவன் மனைவி இருவரும் உறவினர்களான முகமது உள்பட 2 பேருடன் நெல்லை டவுன் கருப்பந்துறை பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை…. விடுதி வார்டன் கைது…. போலீஸ் அதிரடி…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விடுதி வார்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 15 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலியில் இருக்கும் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே விடுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வார்டனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்குவாரிகள் மூடல்” வாய்மொழி உத்தரவுக்கு இடைக்காலத்தடை…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!!

கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த மே மாதம் அடை மிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள கல்வாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்க கூடாது என வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாங்கள் பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே டிரான்சிட்பாட்ஸ்க்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு தொந்தரவு செய்த தந்தை…. மகனின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு…. போலீஸ் விசாரணை…!!

மகன் மற்றும் உறவினரின் மோட்டார் சைக்கிளை தந்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு பகுதியில் ஓட்டுநரான பேச்சுமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பேச்சுமுத்துவின் தந்தை முருகன் என்பவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது மனைவியான சண்முகதாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு முருகன் தொந்தரவு செய்துள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அகஸ்தியர் அருவியில் அலைமோதும் கூட்டம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்வர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். இதனை அடுத்து நீண்ட வரிசையில் வாகனங்கள் சோதனை சாவடியில் அணிவகுத்து நின்றது. பின்னர் வனத்துறையினர் சோதனை நடத்தி வாகனங்களை அனுமதித்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் மெதுவா போங்க” இன்ஜினியருக்கு அரிவாள் வெட்டு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் இன்ஜினியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் ஜலாலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான முகமது பீர்கான்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமது அவரது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்றனர். அவர்களை மெதுவாக செல்லும்படி முகமது கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மர்ம நபர்கள் முகமது பீர்கானை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மைத்துனரை கொலை செய்தது ஏன்….? கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம்….!!

மைத்துனரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேஷ் என்ற மகனும், உமா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் உமாவுக்கும் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் கணேஷ்கைலாஷ் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இன்று(ஜூலை 11) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விடுமுறையை தவிர திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர்,காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று ( ஜூலை 11ஆம் தேதி) நடைபெற உள்ளது. அதனால் இன்று  நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேரோட்டத்தை முன்னிட்டு…. நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!

நாளை நடைபெறவுள்ள தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் ஆனித்திருவிழா கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த 3-ந் தேதி ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இந்த ஆனிதேரோட்டத்தில் 4 ரத வீதிகளிலும் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி…. சிறுமியை ஏமாற்றிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குப்பக்குறிச்சி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாளை(ஜூலை 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விடுமுறையை தவிர திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர்,காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் நாளை நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ…. ஓட்டுநர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஆட்டோ பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அந்தோனியார் தெருவில் மகேந்திரன்(55) -இசக்கியம்மாள்(49) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மகேந்திரன், இசக்கியம்மாள், அவர்களது மகள் இந்துமதி(25) ஆகியோர் ஒரு ஆட்டோவில் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலை வழியாக சென்றனர். இந்த ஆட்டோவை மலரகன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில்….. “ஜூலை 11ம் தேதி விடுமுறை”….. தமிழக அரசு உத்தரவு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கந்துவட்டி வாங்குபவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…. டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

கந்துவட்டி வாங்குபவர்களின் சொத்துக்களை முடக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த‌ ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தமிழக டி.ஜி.பி சட்டம் ஒழுங்கு குறித்து பேசினார். இதனையடுத்து மாவட்டம்  முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை, கந்துவட்டி தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் யானைக்கு…. ரூ. 12,000 செலவில் புதிய காலணிகள்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் யானைக்கு காலணிகள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள டவுனில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காந்திமதி என்ற யானை இருக்கிறது. இந்த யானைக்கு தற்போது 52 வயதாகிறது. இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லும் போது காந்திமதியை அதிக கவனத்துடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காந்திமதிக்கு தினமும் உடற்பயிற்சி கொடுப்பதோடு, மூலிகை உணவுகளும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் காந்திமதியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!!!!!

கொரோனா ஊரடங்கு தொடர்புக்கு பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, ஏழு 20 மணி,6. 45 மணி ஆகிய மூன்று நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கு மாலை 4.05 மணிக்கு இரண்டு சிறப்பு ரெயில்கள்  நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக காலை 10.15 மணிக்கும் மாலை 4.25 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஊருக்குள் அட்டகாசம் செய்த கரடி”… கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்….!!!!!!

நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனை அடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் தீவனமாக கண்காணித்தனர். அதன்பின் அதனை பிடிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இரும்பு கூண்டை வைத்தனர். அந்த கூண்டில் நேற்று இரவு கரடி சிக்கி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லை வன சரகர் சரவணகுமார், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பணம் கையாடல், கொலை வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பணிநீக்கம்”….. நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு….!!!!!

பணம் கையாடல், கொலை வழக்கில் தொடர்புடைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்தன் என்பவர் முன்னதாக பலவூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பொழுது காவல் நிலையத்திற்கு பொருட்கள் வாங்க வழங்கப்பட்ட தொகையை கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை செய்ய உத்தரவிட்டதில் அவரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசனவாய் சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது”…. நெல்லை மருத்துவமனை டீன் தகவல்…!!!!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆசன நோய்க்கான சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது முதல் முறையாக ஆசனவாய் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நவீன லேசர் கருவி வாங்கப்பட்டிருக்கின்றது. இந்த கருவியானது ரூபாய் 16,50,000 ஆகும். இது நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இது பற்றி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது, ஆசனவாய் நோய்களான மூலம், பௌத்திரம், வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கூடுதல் ரயில்கள்”…. எங்கெல்லாம் தெரியுமா?…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்களானது இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, 7:20, மாலை 6:45 மணி போன்ற 3 நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இதை தவிர்த்து நெல்லை வழியே சென்னை -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கும், மாலை 4:05 மணிக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற மூதாட்டி…. நகையை ‘அபேஸ்’ செய்த மர்மநபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டோனாவூர் செட்டிநாடு பகுதியில் தளவாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பேருந்து ஒன்றில் களக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தளவாய் களக்காடு பேருந்து நிலையத்திற்கு வந்து கீழே இறங்கியபோது அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருடு போன மோட்டார் சைக்கிள்…. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கக்கன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் களக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!!

கொரோனா பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை  மாநிலம் முழுதும் 8,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார். அதன்படி மக்கள் கூடும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? கல்லூரி மாணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறையில் ஞானசெல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாக்சன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் ஜாக்சன் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி பகுதியில் அஸ்வின்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஜோயல்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ரெட்டியார்பட்டி நான்கு வழி சாலையில் சென்றபோது ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஸ்வின் மற்றும் ஜோயல் ஆகிய 2 […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆட்டோ கவிந்து LKG மாணவன் பலி – நெல்லையில் பெரும் சோகம் …!!

ஆண் – பெண் குழந்தைகள் என 6பேர் ஆட்டோவில் காலை பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள். இந்த பள்ளி  வசவபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.நெல்லை மாவட்டம் வசவபுரம் – செய்துங்கநல்லூர் சாலையில்  இந்த ஆட்டோ வந்தபோது….  சாலையில் ஏற்கனவே சாலை விரிவாக்க பணி யாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஆட்டோ வரும்பொழுது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஆட்டோவின் அடியில் எல்கேஜி படித்து வரக்கூடிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த பணம் யாருடையது?…. டிக்கெட் பரிசோதகரின் செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்து நிலையத்தில் கிடைத்த 1  லட்ச ரூபாய் பணம்  குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கக்கன் நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சண்முகசுந்தரம் புதிய பேருந்து நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் பேருந்து நிற்கும் இடத்தில் பை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த சண்முகசுந்தரம் அந்த பையை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” ஜுலை-11 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இதனை காண ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வருவார்கள். இந்நிலையில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் ஆனி தேரோட்ட விழா ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளதால் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“7 மாத பெண் குழந்தை கடத்தல் முயற்சி”… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!!!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கீழ பாப்பாகுடி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கார்த்திக், இசக்கியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரியங்கா என்னும் 7 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டில் இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால்  20 ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த ஊழியர்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் சங்கு(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சங்கு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது நெல்லை ரகுமத் நகர் அருகே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற காவலாளி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

காவலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பொய்லான் நகரில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை சித்தா மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த சுப்பையா என்பவர் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சுப்பையா பாஸ்கரை செங்கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பாஸ்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் குருநாதன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் குருநாதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குருநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று குருநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டை புதுப்பிக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அழகப்பபுரம் நடுத்தெருவில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்டு முடிவு செய்தார். இந்நிலையில் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஒப்பந்தம் எடுத்து பழைய வீட்டை இடித்து புதுப்பித்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று பழைய காங்கிரீட் தளத்தை எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. இதில் பூலாங்குளம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. பைனான்ஸ் உரிமையாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பைனான்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல தேவநல்லூர் கீழ தெருவில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் தேவநல்லூரில் பஞ்சாயத்து தலைவியாக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சுரேஷ் என்ற மகனும், ராமலட்சுமி என்ற மருமகளும் இருந்துள்ளனர். இதில் சுரேஷ் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டு மாடியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அறிவுரை வழங்கிய வியாபாரி…. குத்தி கொலை செய்த உறவினர்…. நெல்லையில் பரபரப்பு…!!

வியாபாரி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி மேலத்தெருவில் பழைய இரும்பு வியாபாரியான முத்துகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் செல்வகுமார்(46) என்பவரும் உறவினர்கள் ஆவர். இதில் செல்வகுமார் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஹோட்டல் முன்பு செல்வகுமாரும், முத்துகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முத்துகிருஷ்ணன் மனைவியுடன் சேர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பரபரப்பு!!…. கட்டையால் அடித்து”வியாபாரி படுகொலை” …. வலைவீசி தேடும் போலீஸ்….!!!!

வியாபாரியை   கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளபதிசமுத்திரம் மேலூர் பகுதியில்  ஜவகர்லால் நேரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜவகர்லால்  நேரு தனது வீட்டின் முன்பு அமைந்துள்ள திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் ஜவகர்லால்  நேருவை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மாட்டு வண்டி போட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்தார் நிவாரணம் வழங்க கோரிக்கை”…. ஆட்சியரிடம் மனு…!!!!

மாட்டு வண்டி போட்டியில் பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ தலைமையில் அம்பையில் மாட்டுவண்டி போட்டியில் இறந்த மாடசாமி என்பவரின் மகன் சிவசூரியன், மகள் செல்வராணி, யூனியன் கவுன்சிலர் இன்பராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன் உள்ளிட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாடசாமியின் மனைவி மகாலட்சுமி பெயரில் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. இறைச்சி கடை உரிமையாளர் பலி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் முத்துபாண்டியன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.ஜி.ஓ ‘ஏ’காலனியில் இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. ஆய்வுசெய்த மேயர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாநகராட்சி மேயர்  அதிரடியாக வீதிகளில் ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் தேர்  ரத வீதிகளை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நேற்று மாநகராட்சி மேயர் சரவணன் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, கழிப்பறை மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு”…. பாளையங்கோட்டையில் அதிகாரிகள் ஆய்வு….!!!!!

தமிழக அரசு உத்தரவின் பேரில் பாளையங்கோட்டையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன் விளைவாக பள்ளிகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி செய்து தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டதின் பெயரில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வீரவநல்லூரில் புதியதாக கட்டப்படும் பாலம்”…. அவ்வழியாக வந்த கார் கவிழ்ந்து விழுந்து விபத்து…!!!!!

வீரவநல்லூரில் புதியதாக கட்டப்படும் பாலத்தில் அவ்வழியாக சென்ற கார் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. திருச்செந்தூர் பாபநாசம் இடையேயான சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் வீரவநல்லூர் புறவழி சாலையில் தனியார் ஆலை அருகே புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்காக தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென புதிதாகக் கட்டப்பட்டிருந்த பாலத்துக்குள் செங்குத்தாக பாய்ந்து கவிழ்ந்தது. இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்….. “20 வருடம் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு”….!!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்த 26 வயதுடைய கூலி தொழிலாளி இசக்கி பாண்டி என்பவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்ற நவம்பர் 11  2017 வருடம் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சிறுமி ஒருவர் வந்த பொழுது இசக்கி பாண்டி அவரிடம் பேச்சுக் கொடுத்து […]

Categories

Tech |