நெல்லை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட்டாக பணிபுரியும் மணிவண்ணனின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர்கள் கூடுதலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சோதனையின் விளைவாக தடைசெய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை மற்றும் […]
