ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்திற்கு மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் தஞ்சையிலிருந்து காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் போன்றவை வந்தது. இதனால் ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனையடுத்து முதல் நடைமேடையில் இருந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அதன்பின் 3-வது நடைமேடையில் சரக்கு ரயில் வந்து நின்றது. இந்த நிலையில் பெட்டிகளை நிறுத்தி […]
